Published:Updated:

விஜய் கட்சியில்... செத்த கிளிக்கு... முமைத்கான் வைத்த சுயம்வரம்!

விஜய் கட்சியில்... செத்த கிளிக்கு... முமைத்கான் வைத்த சுயம்வரம்!

பிரீமியம் ஸ்டோரி
விஜய் கட்சியில்... செத்த கிளிக்கு... முமைத்கான் வைத்த சுயம்வரம்!
பாரதி தம்பி
விஜய் கட்சியில்... செத்த கிளிக்கு... முமைத்கான் வைத்த சுயம்வரம்!
விஜய் கட்சியில்... செத்த கிளிக்கு... முமைத்கான் வைத்த சுயம்வரம்!
சாரு நிவேதிதாவின் ஏடாகூடப் பேட்டி!
விஜய் கட்சியில்... செத்த கிளிக்கு... முமைத்கான் வைத்த சுயம்வரம்!
விஜய் கட்சியில்... ,செத்த கிளிக்கு, முமைத்கான் வைத்த சுயம்வரம்!
விஜய் கட்சியில்... செத்த கிளிக்கு... முமைத்கான் வைத்த சுயம்வரம்!

''சார்... ஏடாகூடமா பதில் சொல்லணும். பேட்டிக்கு ஓ.கே-வா?'' என்று போன் போட்டால், ''நாம என்னிக்கு நார்மலா பேசி இருக்கோம். ஐ யம் ரெடி!'' என்று சாருநிவேதிதா தயார். அதிரடி எழுத்தாளரின் சரவெடி பதில்கள்...

விஜய் கட்சியில்... செத்த கிளிக்கு... முமைத்கான் வைத்த சுயம்வரம்!

''ஏர் ஹோஸ்டஸாக ஏன் பெண்களை மட்டுமே நியமிக்கிறாங்க?''

''ஆண்கள் குனிந்தால் அழகாக இருக்காது. ஆனால், சிக்கன நடவடிக்கை காரணமாக இப்போது ஆண்களையும் நியமிக் கிறார்கள். அதை மத்திய மந்திரிகள் பயணிக்கும் விமானங்களில் மட்டும் அமல்படுத்தலாம்!''

''கலைஞர் கதை வசனம் எழுதும் படத்தில் நடிக்க அழைத்தால் நடிப்பீர்களா?''

''நிச்சயம் நடிப்பேன்... வாய் பேச முடியாத கேரக்டராக இருந்தால்! ஒருவேளை மணிரத்னம் இயக்கினாலும் நடிக்கலாம். அவர்தான் வசனங்களை கட் பண்ணிடுவாரே!''

'' 'காடுவெட்டி' குருவைப் பற்றி உங்கள் கருத்து என்ன?''

''அவர் ஏன் எப்பவும் மஞ்சள் கலர் சட்டையே போடுறார்?''

''விஜய் கட்சி ஆரம்பிக்கப் போறாராம். அவர் கட்சிக்கு ஒரு பேர் வைங்களேன்...''

''அ.மு.க - அப்பா முன்னேற்றக் கழகம்!''

''சூப்பர்மேன் ஏன் பேன்ட்டுக்கு மேல ஜட்டி போட்டுக் குறார்?''

''செத்த கிளிக்கு கூண்டு எதுக்குன்னு நினைச்சிருக்கலாம்!''

'' 'ஸ்த்ரீலோலனை பொம்பளைப் பொறுக்கி'ன்னு சொல்லலாமா?''

''எனக்கு பப்ளிசிட்டி பிடிக்காது!''

விஜய் கட்சியில்... செத்த கிளிக்கு... முமைத்கான் வைத்த சுயம்வரம்!

''ராக்கி சாவந்த் மாதிரி தமிழ்நாட்டில் எந்த நடிகை சுயம்வரம் வைத்தால் நீங்கள் கலந்து கொள்வீர்கள்?''

''என்ன சந்தேகம்? நிச்சயமா முமைத்கான்தான்!''

''போஸ்ட் மார்ட்டத்துக்கும், போஸ்ட் மார்டனிசத்துக்கும் என்ன வித்தியாசம்?''

''போஸ்ட் மார்ட்டம்... செத்ததைக் கூறு போடுவது.

போஸ்ட் மாடர்னிசம்... உயிரோடு இருக்கிறதைக் கூறு போடுவது!''

''தமிழில் உங்களுக்குப் பிடிக்காத வார்த்தை?''

''ஒன்று இல்லை. நிறையவே இருக்கு. தணிக்கை, கலாசாரம், ஒழுக்கம், கற்பு...''

''தமிழ் பேசுறவன் எல்லாம் தமிழனா?''

''தெலுங்கு பேசுறவங்களும் தமிழன்தான். பார்த்திபன், வைகோ, விஜயகாந்த், கி.ராஜநாராயணன்... இவங்களை என்னன்னு சொல்லுவீங்க?''

''சலூன்ல ஏன் பெண்களின் கவர்ச்சிப் படங்களா ஓட்டி வெச்சிருக்காங்க?''

''ஏன்னா, தாடியும் மீசையுமா குளிக்காம வர்ற கூட்டத்தையே பார்த்துப் பார்த்து சலூன்காரருக்கு அலுத்துப் போவும்ல... அந்த அலுப்பைப் போக்கத்தான்!''

''தமிழ்நாடு அரசு கொடுக்கும் இலவச கலர் டி.வி. உங்களுக்குக் கிடைச்சுதா?''

''நியாயமாப் பார்த்தால் கிடைத்திருக்க வேண்டும். நானும் ஏழை எழுத்தாளன்தானே. கனிமொழிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி இருக்கேன்!''

விஜய் கட்சியில்... செத்த கிளிக்கு... முமைத்கான் வைத்த சுயம்வரம்!

''நீங்க இமய மலைக்குப் போறதுக்கும், ரஜினிகாந்த் போறதுக்கும் என்ன வித்தியாசம்?''

''ரஜினி போறது பாபாவைப் பார்க்க... நான் போறது பாப்பாவைப் பார்க்க! திபெத் பெண்கள் அவ்ளோ அழகு!''

'' 'பார்க்' ஹோட்டல்ல ஒரு மரம் கூட இல்லையே ஏன்?''

''மைசூர் பாக்ல மைசூரைத் தேடலாமா?''

''பிராந்திக்கும், விஸ்கிக்கும் என்ன வித்தியாசம்?''

''வித்தியாசம் தெரியாது. ஆனால், எனக்குப் பிடித்தது பிராந்திதான். காரணம், முதல் ரெண்டு எழுத்து!''

விஜய் கட்சியில்... செத்த கிளிக்கு... முமைத்கான் வைத்த சுயம்வரம்!
விஜய் கட்சியில்... செத்த கிளிக்கு... முமைத்கான் வைத்த சுயம்வரம்!
                            
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு