Published:Updated:

அபிராமி உலகத்தைப் பார்க்கிறாள்!

அபிராமி உலகத்தைப் பார்க்கிறாள்!

பிரீமியம் ஸ்டோரி
அபிராமி உலகத்தைப் பார்க்கிறாள்!
எம்.பரக்கத் அலி
அபிராமி உலகத்தைப் பார்க்கிறாள்!
அபிராமி உலகத்தைப் பார்க்கிறாள்!
அபிராமி உலகத்தைப் பார்க்கிறாள்!
அபிராமி உலகத்தைப் பார்க்கிறாள்!
அபிராமி உலகத்தைப் பார்க்கிறாள்!

றந்த பிறகும் இதயம் ஈந்து இன்னொரு இன்னுயிர் காத்தவன் ஹிதேந்திரன்! அபிராமி என்னும் பெங்களூரு சிறுமியின் உடலுக்குள் துடித்துக்கொண்டு இருந்த ஹிதேந்திரனின் இதயம் 355 நாட்கள் கழித்து இப்போது தனது துடிப்பைநிறுத்திக் கொண்டு இருக்கிறது.

அபிராமி உலகத்தைப் பார்க்கிறாள்!

விபத்து ஒன்றில் மூளைச்சாவு ஏற்பட்டு, இதயம் உள்ளிட்ட ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள் பல ருக்கு மாற்றிப் பொருத்தப்பட்ட நாளை தமிழகம் நிச்சயம் மறந்திருக்காது. தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் பற்றிய மிகப் பெரிய விழிப்பு உணர்வு ஏற்படுத்திய நிகழ்வு அது. ''இதயம் மாத்தி வெச்ச பிறகு அடிக்கடி செக்-அப்புக்காக பெங்களூர்ல இருந்து சென்னை செரியன் ஆஸ்பிட்டலுக்கு வந்துட்டுப் போவோம். போன 12-ம் தேதியும் அப்படித்தான் கார்ல வந்தோம். ரொம்ப சந்தோஷமா துள்ளிக்குதிச்சு விளையாடி, செல்போன்ல பாட்டுலாம் கேட்டுட்டு ஜாலியாத்தான் இருந்தா அபிராமி. திடீர்னு உடம்பு பலவீனமாகி மயக்கமாகி, இப்போ எங்களை விட்டுட்டுப் போயிட்டா!''- குரல் உடைந்து அழுகிறார் அபிராமியின் அப்பா சேகர். 'அப்பா, ஹிதேந்திரா அண்ணாவோட இதயத்தை எனக்கு வெச்சு ஒரு வருஷம் ஆகப்போகுது. அடுத்த வாரம் உங்க வீட்டுக்கு வர்றேன். ரெண்டு நாள் அங்கதான் இருப்பேன். அம்மா நல்லா இருக்காங் களா?' ஹிதேந்திரனின் அப்பா அசோகனிடம் கடந்த வாரம் பெங்களூருவில் இருந்து பேசி இருக்கிறாள் அபிராமி. ஹிதேந்திரனின் பெற்றோரை 'அப்பா-அம்மா' என்றுதான் அழைத்திருக்கிறாள் அவள்.

''பொட்டாசியம், சோடியம் போன்ற எலெக்ட்ரோலைட் குறைபாடுகள்தான் அபிராமியின் மரணத்துக்குக் காரணம். இது எதிர்பாராத ஒன்று. இதை வைத்து இதய மாற்று அறுவை சிகிச்சை பற்றி எதிர்மறையாக நினைக்க வேண்டியது இல்லை. 1984-ல் சென்னையில் முதன்முதலாக ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்தபோதும் எத்தனையோ விமர்சனங்கள் வந்தன. அதுபோலத்தான் இதையும் நாம் கடந்துபோக வேண்டும்'' என்கிறார் அபிராமிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் களில் ஒருவரான டாக்டர் மதுஷங்கர்.
''இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற 86 சதவிகிதம் பேர் ஒரு வருடம் வரை நலமுடன் வாழ்ந்திருக்கிறார்கள். 65 சதவிகிதம் பேர் 5 ஆண்டுக்கள் வரை வாழ்ந்திருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேல் ஆரோக்கியமுடன் வாழ்ந்தவர்கள் 16 சதவிகிதம் பேர். இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று 31 வருடம் வரை மிக ஆரோக்கியமாக வாழ்ந்தவர்களும் உண்டு. அபிராமி சின்னக் குழந்தை, அவள் ரொம்ப வருஷம் வாழ்வாள் என்று தான் நாங்கள் நம்பினோம்... வேண்டிக்கொண் டோம். ஆனால், எல்லாரையும் ஏமாற்றிவிட்டு அவள் தேவதை ஆகிவிட்டாள். அபிராமி இறந்த தால் ஹிதேந்திரனின் இயக்கங்கள் இந்த உலகத்தில் முற்றுப் பெற்றுவிட்டது என்று நினைக்க வேண்டாம்.

அவனுடைய கல்லீரல், கிட்னி பொருத்தப்பட்டவர்கள் இப்பவும் நலமுடன்தான் இருக்கிறார்கள்!'' என்று வேதனை ஆறுதல் தெரிவிக்கிறார் ஹிதேந்திரனின் தந்தை அசோகன்.

ஹிதேந்திரனின் இதயம் துடித்துக்கொண்டு இருந்த அபிராமி இப்போது உயிருடன் இல்லை. ஆனாலும், அவள் இந்த உலகத்தைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். ஆம், அபிராமியின் விழிகள் தானம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஒரு சுடரின் ஒளியில் பெருகி வழிகிறது அன்பெனும் பேரொளி!

 
அபிராமி உலகத்தைப் பார்க்கிறாள்!
அபிராமி உலகத்தைப் பார்க்கிறாள்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு