Published:Updated:

டூயட் கிளினிக் -ம்மியாவ்... ம்மியாவ் பூனே! -டாக்டர் டி.நாராயணரெட்டி

டூயட் கிளினிக் -ம்மியாவ்... ம்மியாவ் பூனே! -டாக்டர் டி.நாராயணரெட்டி

பிரீமியம் ஸ்டோரி
டூயட் கிளினிக் -ம்மியாவ்... ம்மியாவ் பூனே! -டாக்டர் டி.நாராயணரெட்டி
டாக்டர் டி.நாராயண ரெட்டி. செக்ஸாலஜிஸ்ட்
டூயட் கிளினிக் -ம்மியாவ்... ம்மியாவ் பூனே! -டாக்டர் டி.நாராயணரெட்டி
டூயட் கிளினிக் -ம்மியாவ்... ம்மியாவ் பூனே! -டாக்டர் டி.நாராயணரெட்டி
டூயட் கிளினிக்
டூயட் கிளினிக் -ம்மியாவ்... ம்மியாவ் பூனே! -டாக்டர் டி.நாராயணரெட்டி
ம்மியாவ்... ம்மியாவ் பூனே!
டூயட் கிளினிக் -ம்மியாவ்... ம்மியாவ் பூனே! -டாக்டர் டி.நாராயணரெட்டி
டூயட் கிளினிக் -ம்மியாவ்... ம்மியாவ் பூனே! -டாக்டர் டி.நாராயணரெட்டி

கைலாஷ் கிச்சன் ரூமை எட்டிப்பார்த்தான். லைலா காபி தயாரிப்பில் மும்முரமாக இருந்தாள். ''ம்மியாவ்... ம்மியாவ் பூனே'' - ஹம்மிங்குடன் ஓடிச் சென்று, அலேக்காக அவளைத் தூக்கினான். பொத்தென லைலாவுடன் கீழே விழுந்தான் கைலாஷ். இடுப்பு பிடித்துக்கொள்ள... டாக்டரிடம் ஓடினான். ஒரு வார ஓய்வுக்குப் பிறகும் வலி கொஞ்சம் மிச்சம் இருந்தது.

அப்போதுதான் என்னிடம் வந்து கைலாஷ் கேட்டான், ''சார்... இடுப்பு வலியினால் தாம்பத்ய வாழ்க்கை பாதிக்குமா?''

தீவிர விபத்துக்களில் முதுகுத்தண்டு முற்றிலும் செயலிழந்தால், செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படலாம். சாதாரண முதுகு வலி, இடுப்பு வலி, தசைப் பிடிப்பு போன்றவற்றால் பாதிக்காது. அந்தச் சமயத்தில் மட்டும் உறவைத் தவிர்த்தால் போதும். மற்றபடி நிரந்தரமாகப் பிரச்னை ஏதும் வராது.

'உலக மக்கள் தொகையில் 58 சதவிகித மக்களுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு தடவையாவது முதுகு வலிப் பிரச்னை வராமல் இருக்காது' என்கிறது பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல். இந்த சாதாரண வலியும்கூட பெரும்பாலும் தசைப் பிடிப்பு, எலும்புகளை இணைக்கும் Ligament எனும் தசை நார்கள் பிடித்துக்கொள்வதால் ஏற்படுவதுதான். முதுகுத் தண்டு பிரச்னையால் ஏற்படுவது அல்ல.

உடற்பயிற்சி பழக்கம், முதுகை டார்ச்சர் பண்ணாத சரியான நாற்காலிகளில் உட்கார்ந்து பணிபுரிவது போன்றவை முதுகு வலி வராமல் துரத்தும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்குத் தசைகள் உறுதியாக இருக்கும்.

முதுகு வலி, இடுப்பு வலி இருப்பவர்கள் செக்ஸில் ஈடுபடும்போது சில ஆலோசனைகளை மனதில்கொள்வது நல்லது.

ஒரு பொசிஷனில் இயங்கும்போது முதுகு வலியோ, இடுப்பு வலியோ ஏற்பட்டால் உங்கள் துணைக்கு அதனைத் தெரியப்படுத்துங்கள். அதனை அவர் புரிந்துகொண்டால்தான், இயல்பாக இயங்க முடியும்!

யாருக்கு முதுகு வலி அல்லது இடுப்பு வலி இருக்கிறதோ, அவர் தனது செயல்பாட்டைக் குறைத்துக்கொண்டு, மற்றவரைச் செயல்பட வைக்கலாம்!

செக்ஸில் ஆண் மட்டுமே இயங்க வேண்டும் என்பது இந்தியப் பெண்களின் மனோபாவம். இதனை மாற்றிக்கொண்டால் முதுகு வலி போன்ற சமயங்களில் செக்ஸ் வாழ்க்கையில் எந்தத் தடைகளும் இல்லாமல் இன்பம் படரும்!

முதுகு வலி உள்ளவர்கள் படுக்கும் மெத்தை மெதுமெது என்று இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும்!

செக்ஸில் ஈடுபடும்போது எந்த பொசிஷனில் வலி இல்லாமல் இருக்கிறதோ, அதுதான் உங்களுக்கு சௌகரியமான பொசிஷன் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

டூயட் கிளினிக் -ம்மியாவ்... ம்மியாவ் பூனே! -டாக்டர் டி.நாராயணரெட்டி

நீ வெயிலில் அலையாதே
சூரியன்
சிவந்துவிடப் போகிறது!

- வேதை வெற்றிவேல்

 
டூயட் கிளினிக் -ம்மியாவ்... ம்மியாவ் பூனே! -டாக்டர் டி.நாராயணரெட்டி
டூயட் கிளினிக் -ம்மியாவ்... ம்மியாவ் பூனே! -டாக்டர் டி.நாராயணரெட்டி
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு