Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

டீச்சருக்குப் புரியவில்லை!ஓவியம் : ஹரன்

நானே கேள்வி... நானே பதில்!

டீச்சருக்குப் புரியவில்லை!ஓவியம் : ஹரன்

Published:Updated:
நானே கேள்வி... நானே பதில்!

''பெரியவர்களின் உலகத்துக்கும் குழந்தைகளின் உலகத்துக்கும் என்ன வித்தியாசம்?''

''சீனக் கதை இது. ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், 'அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’ அம்மா சொன்னாள், 'எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’ அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, ஆசிரியை 'நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன. ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் 'நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான். ஆசிரியை கோபமாக, 'உனக்குக் கேள்வி புரியவில்லை’ என்றார். சிறுவனோ, 'டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை’ என்றான்!''

- ஜி.லக்ஷ்மிபதி, சென்னை-40.

 ##~##

''இந்தத் தேர்தலில் என்ன சார் காமெடி?''

''கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அந்தப் பட்டியலில், சேரன்மாதேவி, சாத்தான்குளம், கடலாடி, இளையான்குடி, சமயநல்லூர் ஆகிய தொகுதிகளும் இருந்தன. விஷயம் என்னவென்றால், மேற்கண்ட தொகுதிகள் தொகுதி மறுசீரமைப்பின்போது நீக்கப்பட்டுவிட்டன. எவ்வளவு அப்டேட்டா இருக்காங்க பாருங்க!''

- ஆ.தாமரைச்செல்வி, வத்தலக்குண்டு.

''ஒரு கவிதையின் உயிர்முடிச்சு எங்கே இருக்கிறது?''

''ஒரு கவிதை எவ்வளவு நீளமானதாக இருந்தாலும், எத்தனை வரிகளைக்கொண்டதாக இருந்தாலும், அதன் சாராம்சம் என்னவோ சில வரிகளில் அடங்கிவிடுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில், மாஞ்சோலைத் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது, போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதும் 17 பேர் தாமிர பரணி ஆற்றில் விழுந்து இறந்துபோனதும் நினைவிருக்கும். அதைப்பற்றிய விக்கிரமாதித்யனின் கவிதை. இது.

'இத்தனை வன்கொலையா
இந்த நதியில்?
நதியினில் பிணம் விழுந்தால்
நாமென்ன செய்ய?
நதியையும் விட்டுவைக்காதா
நம்நாடு?
ஒரே நாளில் பதினேழு உயிர்கள்
கூசாமல் கொலை செய்யும் அரசு
உயிரின் விலையைத்
தீர்மானிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்
குழந்தைகளைக் காவு வாங்கும் நதி
உலகிலேயே இல்லை
ஆற்றைக் கறைப்படுத்துபவர்கள்
அயோக்கியர்கள்
எல்லாவற்றையும் சம்பவமாக்கி
  விடுகிறது ஜனநாயகம்!’

கவிதையின் கோபாவேசம் மேற்கண்ட பல வரிகளில் தென்பட்டாலும் 'எல்லாவற்றையும் சம்பவமாக்கிவிடுகிறது ஜனநாயகம்’ என்கிற வரிகள் மட்டும் கவிதை சுட்டும் சம்பவத்தைத் தாண்டி, பொதுத்தன்மையைக் கவிதைக்கு வழங்கி விடுகிறது!''

- நிஷா, ஊட்டி.

நானே கேள்வி... நானே பதில்!