Published:Updated:

''சிவன் ஒரு யோகி!''

சொல்கிறார் சத்குருவின் மகள்ந.வினோத்குமார்படம் : ச.இரா.ஸ்ரீதர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##
'ரா
தே... கலாஷேத்ரா மாணவி. தக்ஷின்சித்ராவில் கலை மேலாண்மை பயிலும் ஆர்வலர். சத்குரு ஜக்கி வாசுதேவின் மகள்!  

''நமஸ்காரம்!'' என்று தெள்ளிய உச்சரிப்பும் 'டீன் 2011’ தோற்றமுமாக அமர்கிறார் ராதே.

''பெங்களூரில் பிறந்தேன். பத்தாவது வரை பள்ளியில் படித்தேன். சென்னை கலாஷேத்ராவில் பரதம் கற்ற அதே சமயம், தனித் தேர்வராகப் பன்னிரண்டாம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றேன். என் அம்மா பரதக் கலைஞராக வர வேண்டும் என்று விரும்பியவர். இன்று அவரின் ஆசையை நான் நிறைவேற்றி இருக்கிறேன். சத்குருவின் மகள் என்ப தாலேயே சிறப்புத் தகுதி உடையவள் என்று நான் எண்ணிக்கொள்வது இல்லை. உங்கள் தந்தையுடன் நீங்கள் எப்படி இருப்பீர்களோ... அப்படியே நானும் என் தந்தையுடன்!''

''சிவன் ஒரு யோகி!''

''உங்களின் சிறு வயதிலேயே உங்கள் அம்மா சமாதி நிலை அடைந்துவிட்டார். அம்மா இல்லாத தவிப்பு இன்னமும் இருக்கிறதா?''

''ஏழு வயது வரை அம்மாவின் அரவணைப்பில் இருந்தேன். சமாதி நிலை அடைய வேண்டும் என்பது அம்மாவின் விருப்பம். அம்மாவின் இடத்தில் என்னைப் பாதுகாத்தவர் என் அப்பா. அம்மா என்ற இடம் வெற்றிடமாக இருப்பினும், அப்பாவுடனான பயணங்கள் அந்த வெறுமையை நிரப்புகின்றன. அப்பாவின் அன்பும்!''

''ருத்ரதாண்டவ சிவன், அம்பலத்தில் ஆடும் நடராஜன், உங்கள் தந்தைகூட ஆனந்த மிகுதியில் ஆடி இருக்கிறார். பரதம் ஒரு வகையில் இந்து மத அடையாளமாக ஆக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

''என்னைப் பொறுத்தவரை, சிவன் என்பவர் ஒரு யோகி. கடவுள் அல்ல. இந்துவாக இருப்பது மதம் அல்ல. அது ஒரு கலாசாரம். அதேபோல, பரதம் ஒரு கலாசாரக் குறியீடு!''

''அப்பா உங்களுக்கென ஸ்பெஷலாக ஏதேனும் சொல்லி இருக்கிறாரா?''

'' 'நீ செய்கிற பணியை ஆழமான ஈடுபாட்டுடன் செய்தால் நீ விரும்பும் அனைத்தும் உனக்குக் கிடைக்கும்!’ இது எனக்கு மட்டும் அல்ல, எல்லோருக்குமே அவர் எப்போதும் அளிக்கும் அருளுரை. என்னைச் சுற்றி எப்போதும் மக்கள் இருக்கிறார்கள். எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால், 'இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறேன்?’ என்பதுதான் என் முன் இப்போது தொக்கி நிற்கும் கேள்வி. அந்தத் தேடல் உள்ளவளாகத்தான் நான் இப்போதும் இருக்கிறேன். பதில் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். பார்ப்போம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு