Published:Updated:

இளவரசிகளுக்குப் பரிசு!

கோ.செந்தில்குமார்படங்கள் : பா.கந்தகுமார், மு.தமிழரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
 ##~##
ரு கவிதை என்னவெல்லாம் செய்யும்? மனதின் மர்மம் உலுக்கி தூக்கம் கலைக்கும், சக உயிரின் மீதான நேசத்தை அதிகப்படுத்தும், வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யும்!

அப்படியான ஒரு பரிணாமத்தில், 23.02.2011 தேதியிட்ட விகடனில் வெளியான அ.வெண்ணிலாவின் 'ஒரு வகுப்பறையும் சில இளவரசிகளும்!’ கவிதை ஆயிரம் மாணவிகளின் பிரச்னையைத் தீர்த்து வைத்திருக்கிறது.

பெண் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிக் கழிப்பறைகளின் அவல நிலையை உரைக்கும் கவிதை அது. அதனை வாசித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனின் தொடர் செயல்களை அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்...

இளவரசிகளுக்குப் பரிசு!

''கவிதையைப் படித்த மாத்திரத்தில் என்னைச் சில வரிகள் குத்தின. அதில் பெண் குழந்தைகள் பற்றிய ஆழமான வரிகள் என்னை மிகவும் பாதித் தன. 'நம் மாவட்டத்தில் இப்படி ஒரு பெண்கள் பள்ளி இருக்குமா?’ என்று எனக்குள் அதிர்ச்சி அலைகள். உடனே, அதிகாரிகளை வந்தவாசி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பி பரிசோதிக்கச் சொன்னேன். கவிதையின் வேதனை அங்கு நூறு சதம் உண்மையாக இருந்தது தெரிய வந்தது.

இளவரசிகளுக்குப் பரிசு!

கல்வி கற்க ஆர்வமாக வரும் அந்தப் பெண் பிள்ளைகளுக்குப் பள்ளியில் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லையென்றால், அது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர்களை மிகவும் பாதிக்கும். அந்த உண்மையை அந்தக் கவிதை சுளீரென உணர்த்தியது. அந்தப் பள்ளியில் சுமார் 3,000 பிள்ளைகள் வரை படிக்கிறார்கள். தற்போது சுமார்

இளவரசிகளுக்குப் பரிசு!

8.60 லட்சம் மதிப்பீட்டில் 24 கழிவறைகள் மற்றும் 12 குளியல் அறைகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது!'' என்று மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார் ராஜேந்திரன்.

''என் கவிதைக்கு 8 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பரிசு கிடைத்த சந்தோஷத்தில் திளைக்கிறேன் நான். ஒரு தலைமுறையின் வேதனை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படாமல் இருப்பதற்கு என் கவிதையும் ஒரு சின்னக் கருவியாகச் செயல்பட்டது மிகுந்த மனநிறைவளிக்கும் தருணம்!'' என்று நெகிழ்கிறார் கவிஞர் அ.வெண்ணிலா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு