கூடைப் பந்தாட்டத்தில் இந்தியா வின் முகம்... கீத்து அன்னா ஜோஸ், 6 அடி 2 அங்குல உயரம்! இந்திய மற்றும் தமிழகக் கூடைப் பந்தாட்ட அணியின் கேப்டன். சமீபத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இவரது தலைமையிலான அணிதான் தமிழகத்துக்குத் தங்கப் பதக்கம் தட்டி வந்தது.

இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருக் கும் கீத்துவுக்கு, இப்போது அமெரிக்க ஸ்டார் அந்தஸ்து கிடைத்து இருக்கிறது. கிரிக்கெட்டில் ஐ.பி.எல். போல் அமெரிக்காவில் பெண்கள் தேசியக் கூடைப்

பந்தாட்ட சங்கம் (WNBA) நடத்தும் கூடைப் பந்தாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடப் போகும் முதல் இந்திய வீராங்கனை இவர்தான்! தெற்கு ரயில்வேயில் பணி புரியும் கீத்து அன்னா ஜோஸிடம் பேசினோம்.

''WNBA-வில் விளையாடப்போகும் முதல் இந்தியர் நீங்கள். எப்படி உணர்கிறீர்கள்?''

''என் வாழ்க்கையின் மிக மிக சந்தோஷமான தருணம் இது. எனது பள்ளிப் பருவம் முழுக்க கேரளாவின் கோட்ட யத்தில் கழிந்தது. பள்ளியிலேயே நான் தான் உயரமான மாணவி. வாலிபால் விளையாடிக்கொண்டு இருந்த என்னை, 'உன் உயரத்துக்கு கூடைப் பந்தாட்டம்தான் சரி’ என்று திசை திருப்பிய 'மௌன்ட் கார்மல்’ பள்ளியின் பி.டி. ஆசிரியர் வேணுகோபால் சாருக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!

கடந்த ஒன்பது வருஷமா இந்தியா, தமிழ்நாடு, தெற்கு ரயில்வே அணி களுக்காக விளையாடிட்டு இருக்கேன். தெற்கு ரயில்வேவுக்காகத் தொடர்ந்து ஏழு முறை சாம்பியன்ஷிப் பட்டம் ஜெயிச்சிருக்கோம். ஆஸ்திரேலியாவின் ரிங்வுட் ஹாங்க்ஸ் அணிக்காகவும் விளையாடி இருக்கிறேன். சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவின் சார்பில் அதிக பாயின்ட்டுகள் குவித்தது நான்தான். இது எல்லாம் சேர்ந்துதான் இந்த கோல்டன் சான்ஸை எனக்குக் கொடுத்திருக்கு. இப்போ WNBA-ல் சிகாகோ ஸ்கை மற்றும் லாஸ் ஏஞ்சலீஸ் ஸ்பார்க்ஸ் அணிகளுக்காக விளையாட அழைப்பு வந்திருக்கிறது. ஏப்ரல் 21 முதல் மே-2ம் தேதி வரை பயிற்சிப் போட்டிகளில் விளையாடி, என் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும். அப்புறம்தான்

இரண்டு அணிகளில் எந்த அணிக்கு விளையாடுவேன் என்பது கன்ஃபார்ம் ஆகும்!''

''ஸ்பான்ஸர் யாராவது கிடைத்திருக்கிறார்களா?''

''ஸ்பான்ஸர்களுக்காகத்தான் காத்திருக்கிறேன். தெற்கு ரயில்வேயில் வேலை செய்வதால், வேறு ஸ்பான்ஸர்கள் யாரும் இதுவரை கிடைக்கவில்லை.''

''கூடைப் பந்தாட்டத்தில், இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கிறது?''

''சர்வதேச அளவில் இந்திய ஆண்கள் அணி 50-வது இடத்தில் இருக்கிறது. பெண்கள் அணிக்கு 41- வது இடம். தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், டாப்-10 அணிகளுக்குள் இந்தியாவுக்கும் இடம் கிடைக்கும். ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கூடைப் பந்தாட்ட வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் குவியும். ஆனால், இந்தியாவில் அந்த நிலைமை இல்லை. நாங்கள் பணத்துக்காக விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுகிறோம்!''