''விஜய் கட்சி ஆரம்பித்து, 2016-ல் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தால்?''

''விஜயகாந்த் கட்சிக்கு 8 சீட் ஒதுக்குவார் ஜெயலலிதா!''

- பேச்சியப்பன், ராஜபாளையம்.

''ஆ.ராசா..?''

''மன்னிக்கவும், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்!''

- எஸ்.விவேக், சென்னை-53.

''ஒரு கவிதையில் அரசியல் இருப்பது கவிதையின் அழகைக் கெடுத்துவிடுமா?''

''நிச்சயமாக இல்லை. யவனிகா ஸ்ரீராமின் கீழ்க்கண்ட கவிதை, எண்ணெய்க்காக அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் செய்யும் ஆக்கிரமிப்பு குறித்தும் 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ குறித்தும் பேசுகிறது. இது ஓர் அரசியல் கவிதையாக இருந்தபோதும், கவிதையின் அழகு கெடாமல் இருக்கிறதே!

'பேரீச்சையும் கசடு எண்ணெயும்
விற்கும் வணிகன் ஒருவனை
அவர்கள் நீதிமன்றத்தில் விசாரித்தார்கள்.
மோசமான ஆயுதங்கள் வைத்திருந்ததாக
அவன் மீது குற்றச்சாட்டு.
அவனோ தனது கடவுளின் நியாயத் தீர்ப்பிற்கு
உட்பட்டே ஐந்து முறை தொழுது
தனது நிலத்தில் தனது அரிசியைப்
பெற்றுக்கொள்வதாகவும்
பேரீச்சையும் கசடு எண்ணெயும்
ஒரு போதும் ஆயுதமாகாது எனவும்
கண்ணீருடன் முறையிட்டான்.
வாதியோ ஒரு குளிர்பானத் தரகன்.
உலகின் நன்னீர் நிலைகளையெல்லாம்
குளிர்பானமாக்கி சேமித்திருப்பவனும்கூட
மேலுமான குற்றச்சாட்டில் அவன் சொன்னான்
ஒட்டகங்களுக்கும் அதன் முதுகினைப் போன்ற
பள்ளத்தாக்குகளுக்கும் அடியில்
இவன் பிள்ளைகளே ஆயுதமாகப்
பதுங்கியிருக்கிறார்கள் எனவும்
கசடு எண்ணெய், குளிர்பானத்தைவிட
மதிப்பு மிகுந்தது எனவும் ஞாபகமூட்டினான்
ஆழ்ந்த யோசனையிலிருந்து விடுபட்ட நீதிபதி
உலக நலனை முன்னிறுத்தி
கசடு எண்ணெயைத் தரகனுக்கும்
குளிர்பானத்தை வணிகனின் பிள்ளைகளுக்கும்
மாற்றித் தரும்படி உத்தரவிட்டார்.
ஒட்டகங்களுக்கு அடியில் பதுங்கியிருப்பவர்களைக்
கண்டுபிடிப்பவர்களுக்கு பணமுடிப்பு
அறிவிக்கப்பட்டது
அதிலிருந்து
கசடு எண்ணெய் நிரப்பப்பட்ட
அயல்நாட்டு வாகனங்களில் அமர்ந்து
குளிர்பானங்களைக் குடித்துக்கொண்டிருப்பவர்கள்
தவிர
ஏனையோர் ஆயுதங்களுக்கான
சோதனைகளுக்கு
எப்போதும் ஆடை அவிழ்த்து நிற்க உத்தரவாயிற்று!''’

- கா.சாதனா, மதுரை.