Published:Updated:

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கலாமுக்கு பயணிகள் மலர் தூவி அஞ்சலி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கலாமுக்கு பயணிகள் மலர் தூவி அஞ்சலி!
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கலாமுக்கு பயணிகள் மலர் தூவி அஞ்சலி!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கலாமுக்கு பயணிகள் மலர் தூவி அஞ்சலி!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திருவுருவப்படத்துக்கு பயணிகள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கலாமுக்கு பயணிகள் மலர் தூவி அஞ்சலி!

மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.),  நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது மாலை 6.30 மணி அளவில்,  அவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்து அந்த பகுதியில் உள்ள பெதானி என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கலாமை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரது உடல் ஷில்லாங்களில் இருந்து அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தி கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து இன்று டெல்லி வருகிறது.

இதனிடையே, கலாம் மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரம் கண்ணீரில் மூழ்கியுள்ளது. கலாமிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் அவரது திருவுருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் உருவப்படம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கலாம் உருவப்படத்திற்கு பயணிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு