Published:Updated:

அப்துல்கலாம் படித்த கல்லூரியில் மாணவர்கள் அஞ்சலி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்துல்கலாம் படித்த கல்லூரியில் மாணவர்கள் அஞ்சலி!
அப்துல்கலாம் படித்த கல்லூரியில் மாணவர்கள் அஞ்சலி!

அப்துல்கலாம் படித்த கல்லூரியில் மாணவர்கள் அஞ்சலி!

திருச்சி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் படித்த திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 

அப்துல்கலாம் படித்த கல்லூரியில் மாணவர்கள் அஞ்சலி!

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில், இயற்பியல் பாடப்பிரிவில் தனது கல்லூரி வாழ்க்கையை   தொடங்கினார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்.

இந்நிலையில், அப்துல் கலாமின் மறைவு செய்தி அவர் படித்த கல்லூரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அவர் படித்த இயற்பியல் பாடப்பிரிவு வகுப்பறையில் மாணவர்கள், கலாமின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர்.
 

அப்துல்கலாம் படித்த கல்லூரியில் மாணவர்கள் அஞ்சலி!

மேலும் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கலாம் திருவுருவப்படத்துக்கு பாதிரியார்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
 

அப்துல்கலாம் படித்த கல்லூரியில் மாணவர்கள் அஞ்சலி!

பின்னர் மாணவர்கள், அப்துல்கலாமின் உருவப்படத்துடன் பேரணியாக சென்றனர். இந்த பேரணி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரி வரை நடைபெற்றது.

படங்கள்: தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு