Published:Updated:

'மரணத்தையும் கனவு காணும் நீண்ட உறக்கம்...!'- கவிஞர் பழனிபாரதி கவிதை அஞ்சலி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'மரணத்தையும் கனவு காணும் நீண்ட உறக்கம்...!'- கவிஞர் பழனிபாரதி கவிதை அஞ்சலி
'மரணத்தையும் கனவு காணும் நீண்ட உறக்கம்...!'- கவிஞர் பழனிபாரதி கவிதை அஞ்சலி

'மரணத்தையும் கனவு காணும் நீண்ட உறக்கம்...!'- கவிஞர் பழனிபாரதி கவிதை அஞ்சலி

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி திரைப்படக் கவிஞர் பழனிபாரதி தனது முகநுால் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்ட கவிதை அஞ்சலி இங்கே....

'மரணத்தையும் கனவு காணும் நீண்ட உறக்கம்...!'- கவிஞர் பழனிபாரதி கவிதை அஞ்சலி

----------------


தயத்தின் வடிவில்
இந்தியாவைச் சுமந்தவர்
அக்கினிச் சிறகுகளால்
ஆகாயத்தை அளந்தவர்

மரணத்தையும்
கனவு காணும்
நீண்ட உறக்கம் இது...

கலாம்
நிழல் போல உறங்குகிறார்...
அவர் வளர்த்த மரங்கள்
வளர்க்கச் சொன்ன மரங்கள்
அவர் மீது
பூக்களைத் தூவிக்கொண்டிருக்கின்றன

இராமேஸ்வர காற்றில்
படபடக்கின்றன
திறந்து வைக்கப்பட்டிருக்கும்
புத்தகங்கள்...

அடுத்த தலைமுறையின் கண்களால்
அவர் படித்துக்கொண்டிருக்கிறார்
இந்தியா 2020 ஐ

- பழநிபாரதி

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு