Published:Updated:

அப்துல்கலாம் மறைவு மாணவர்களுக்கு பேரிழப்பு: பாரதிராஜா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்துல்கலாம் மறைவு மாணவர்களுக்கு பேரிழப்பு: பாரதிராஜா
அப்துல்கலாம் மறைவு மாணவர்களுக்கு பேரிழப்பு: பாரதிராஜா

அப்துல்கலாம் மறைவு மாணவர்களுக்கு பேரிழப்பு: பாரதிராஜா

அப்துல்கலாம் மறைவு மாணவர்களுக்கு பேரிழப்பு: பாரதிராஜா

சென்னை: அப்துல்கலாமின் மறைவு தமிழர்களுக்கும், இந்திய மாணவர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''இந்தியாவின் வல்லமையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற ஒப்பற்ற தலைமகன் அப்துல்கலாமின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

அப்துல் கலாம் தனி மனிதர் அல்ல. தமிழனின் அடையாளம். அவருடைய மறைவு தமிழர்களுக்கும், இந்திய மாணவ சமூகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்'' எனக் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு