'ப  ள்ளிகளில் பாலியல் கல்வி தேவையா?' என்று கருத்துக் கேட்கும் படலம் துவங்கியுள்ளது. இதை ஆதரிப்பவர்களின் எண்ணங்கள் ஒருபுறமிருக்க... 'இரு பாலருக்குமான வகுப்பறையில் இதைச் சொல்லித் தந்தால், பாலியல் உணர்வு தூண்டப்பட்டு, அதுவே தவறுக்கு வழி வகுக்காதா?' என்று சில பெற்றோர் அச்சம் தெரிவித்ததாக வந்துள்ள செய்திகள் கவனிக்கத்தக்கவை!

'கொச்சை உணர்வுகளைத் தூண்டும் மன்மதக் கலை பற்றியதல்ல, இக் கல்வி! சுத்தம், சுகாதாரம், பழகும் தன்மை போன்ற உடலியல் மற்றும் மனவியல் விழிப்பு உணர்வைத் தருவதே இது. பாடத் திட்டத்தை உரிய நிபுணர்களின் துணையோடு, மிகுந்த கவனத்தோடுதான் வகுத்துள்ளோம்' என அரசு நம்பிக்கை ஏற்படுத்தும் வரை, ஒரு தரப்புப் பெற்றோரின் அச்சம் நீடிக்கவே செய்யும்! உள்ளங்கையை மூடிக்கொண்டு, 'இது உன் குழந்தைக்கு நல்லது. புகட்டவா?' என்று கேட்டால்... எப்படி உடனே 'சரி' என்று சம்மதிப்பார்கள்?

எனவே, 'சரியான ஒன்றை, மிகச் சரியான விதத்தில் சொல்லப் போகிறோம்' என்ற நம்பிக்கையை முதலில் பெற்றோருக்கு விதைப்பது முக்கியமல்லவா..!

விகடனில் வெளியாகிவரும் 'அறிந்தும் அறியாமலும்' தொடரைப் படித்துவரும் இளைஞர்களும், பெற்றோராக உள்ள வாசகர்களும் இத்தொடருக்குத் தருகின்ற ஆரோக்கியமான வரவேற்பும், மாறுபடும் கருத்துக்கள் குறித்து ஆக்கபூர்வமாக எழுப்பும் கேள்விகளுமே இதற்குக் கண்கண்ட உதாரணம்!

அரசின் 'தூர்தர்ஷன்' தெரியாத இடமேது? மொழிவாரி சேனல்களும் உள்ளன. இந்தப் பாடத் திட்டத்தையும் பெற்றோர் சாட்சியாக வீட்டு வரவேற்பறைக்கே முதலில் கொண்டுபோகலாமே! 'ஓ, இதுதான் பாடமா' எனப் பெற்றோர் புரிந்துகொண்ட மாதிரியும் ஆச்சு... பிள்ளைகளின் அருகிலிருந்து, பக்குவமாக விளக்கம் தந்த மாதிரியும் ஆச்சு..! 'ஐயோ, வகுப்பில் இன்று என்னத்தைச் சொல்லிக் கொடுத்தார்களோ' என்ற நடுக்கத்துக்கும் இடமிருக்காது!

ஒரு சுற்று பாடங்கள் முடிந்த பிறகு பெற்றோரிடம் விவாதம் நடத்தினால், அது அர்த்தமுள்ளதாகவும் ஆக்கபூர்வமாகவும் அமையும்! அவர்களுடைய புரிதலும் முழு ஆதரவும் கிடைத்துவிட்டால், இதை இன்னும்கூட செம்மையாக அமல்படுத்த முடியுமே..!

என்றும் உங்களுக்காக,

பா.சீனிவாசன்,
பதிப்பாளர்.