காசிமேட்டில் கடல் ஒலிம்பிக்ஸ்!

கா  சிமேடு கடல். காற்றில் மீன் வாசத்தையும் தாண்டி அடிக்கிறது மேகக் கருக்கின் இதமான மணம்.

‘‘மழை அடிச்சு ஊத்துறதுக்குள்ள கடல் ஒலிம்பிக்ஸை கரை சேர்க்கணும்.

சீக்கிரம் ஆகட்டும்..!’’ -மைக்கில் கூவி, ஆட்களை ஏவிக்கொண்டு இருந்தார் கோபி. மக்கள் தொலைக்காட்சியின் தீபாவளி ஸ்பெஷல் கலாட்டா ‘ஆழிக் கொண்டாட்டம்’ நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் அது!

‘‘காசிமேடுன்னாலே கலீஜ், கலாட்டான்னுதான் வெளியே பேரு இருக்கு. ஆனா, பக்கத்துல இருந்து பழகிப் பார்த்தாதான் இவங்க எவ்வளவு பாசக்காரப் பயலுகனு தெரியும். ஏன்னா, நானும் இவங்கள்ல ஒருத்தன் தான். நம்ம பசங்களை வெச்சு தீபாவளிக்கு விளையாட்டு

காட்டணும்னு தோணுச்சு! அதான், கடல் ஒலிம்பிக்ஸ்ல களமிறங்கிட்டோம்!’’ என்று சிரிக்கிறார் கோபி. இவர் மக்கள் டிவி-யின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கம் இயக்குநர்.

கடல் மேல் கரு மேகங்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்க்க, ஆரம்பித்தது அலைகடல் ஆட்டம்!

தண்ணீரில் மிதக்கும் காலி டிரம் மீது பேலன்ஸ் செய்து, அதிக நேரம் நிற்க வேண்டும். இதுதான் முதல் போட்டி!

‘‘நாங்கள்லாம் ஃபுல் டைம் தண்ணியில மிதக்குறவங்க. இதென்ன ஜுஜூலிப்பான்!’’ என்றபடி வந்தது இளைஞர் பட்டாளம். தட்டிவிட்ட சீட்டுக்கட்டு மாளிகை கணக்காக மளமளவென ‘தண்ணீரை’க் கவ்வியது அந்த சென்னாங்குனி பட்டாளம்! ஸ்டீஃபன் மட்டும் டிரம் மீது ததிங்கிணத்தோம் ஆடி 45 விநாடிகள் பேலன்ஸ் செய்து அசரடித்தார். ‘‘அடுத்த கவுன்சிலர் எலெக்ஷன்ல அவனை நிக்கச் சொல்லு! தண்ணியிலேயே நல்லா நிக்கிறான்!’’ என்று கமென்ட் அடித்தது வி.ஆர்.எஸ். பெருசு ஒன்று!

தண்ணீருக்குள் மூழ்கி தம் பிடித்து பலூன் ஊதுவதுதான் அடுத்த ரகளை!

‘‘ஹா... அலேக்கு! இதெல் லாம் அல்வா சாப்பிடற மேரி நைனா! நீ மொதல்ல பிகிலு ஊது! அப்பாலிக்கா நான் பலூன் ஊதுறேன்!’’ - பரபர பில்ட்-அப் கொடுத்து டைவ் அடித்த நெட்டைக் கொக்கு பரமு, இரண்டே நொடிகளில் வெளியே தலை நீட்டி, ‘‘ஐய! தண்ணி உப்புக் கரிக்கிதுப்பா..!’’ என்று பீடி தேடி ஓடினார். தண்ணீருக்குள் மூன்று பலூன்களை ‘ப்பூ.. ப்பூ..!’ என்று ஊதி ஜெயித்தது பாபு (பாப்ப்ப்பூ..!)

மல்லாக்கப் படுத்தபடி மார்புக்கு மேலே ஒரு பந்தை வைத்துக்கொண்டு நீந்துவது அடுத்த ரேஸ்!

குதித்த வேகத்தில் ரொனால்டோ அடித்த கோல் போல பந்துகள் தெறித்துப் பறக்க, பாதி கோஷ்டி அப்பீட்! பெருமாள், வேல்முருகன் மட்டுமே ‘நாங்கள் நீச்சல் குலத் திலகங்கள்!’ என்று நிரூபித்தனர்.

அடுத்ததாக, நடுக்கடலில் உறியடி உற்சவம் நடத்த, கட்டு மரத்தில் ‘பிட்ச் ரிப்போர்ட்’ பார்க்கச் சென்றது ஒரு கோஷ்டி. ‘‘யூ ஸீ... இப்போ கடல் ரொம்ப ஹார்டா இருக்கு. ஹெவி மழை வரும்னு இஸ்பேட் (‘எக்ஸ்பெக்ட்’!) பண்றோம். அதனால, இப்போ உறியடி நடத்த முடியாது!’’ என்று கிரிக்கெட் உலகக்கோப்பை ஃபைனல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி பீலா விட்டது. உடனே திட்டத்தை மாற்றி உறியடிக்கென வாங்கிய பானைகளைக் கவிழ்த் துப் போட்டனர்.

பானையைக் கவிழ்த்துப் பிடித்த படியே கடலுக்குள் நீச்சலடித்து தரையைத் தொட்டுத் திரும்ப வேண்டும். வெளியே வரும்போது பானைக்குள் நீர் புகுந்திருக்கக் கூடாது. இது சவால்!

புது விளையாட்டு கண்டு பிடித்த பரவசத்தில் பானையும் கையுமாக கடலுக்குள் குதித்தனர் சிலர். ‘தொபுக்’கென குதித்தவர் களை ‘குபுக்’கென வெளியே துப்பியது பானைக்குள்ளிருந்த காற்று! சுறா கடித்துக் கால் ஊனமான ஒரு சீனியர் மீனவர் மட்டும் பானையோடு பத்து செகண்ட் உள்ளே போய் வந்தார். சாதித்த மகிழ்ச்சியில், முகத்தில் ஆனந்தத் தாண்டவம்!

ஐந்து நிமிடத்துக்குள் அதிக மீன்களை யார் பிடிப்பது? இந்தப் போட்டிதான் கட்டக் கடைசியான கடல் விளையாட்டு. பதற்றத்தில் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றித் தூண்டில் வீசிக்கொள்ள, 4:58 வரை யார் தூண்டிலிலும் ஒரு மீன் கூடச் சிக்கக் காணோம். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ எம்.ஜி.ஆர். சாட்டையைச் சுழற்றுவது போல ஆவேசமாகத் தூண்டிலை வீசிய சீனிவாசன், ‘‘ஹேஹேய்! நான் ஜெயிச்சுட்டேன்!’’ என்று குதித்துக் கூப்பாடு போட்டார்.

‘‘இதென்ன பாஸு, மீனா இது? மீனுக்குச் சக்களத்தி மாதிரி இருக்குதே! இதைப் பிடிச்சதுக்கு வெஞ்சனக் கிண்ணம் கூடக் கிடையாது!’’ என்று கலாய்த்தபடியே ‘பரிசுக் கோப்பை’ வழங்கினார் காசிமேட்டு நாட்டாம!

கச்சிதமாகக் கடல் ஒலிம்பிக்ஸ் முடிய வும், காற்றின் ஒலிம்பிக்ஸ் தொடங்கியது. சூறாவளி சுழன்று அடித்து மழை ‘சோ’வெனக் கொட்ட.... அது ஆவேச மான கடல் கதகளி!

\ ஆர்.சரண்
படங்கள்: என்.விவேக்