பாம்பு மாமா!

நா  கம், கருஞ்சாரை, கட்டுவிரியன்கள் சுற்றி நிற்க, அவற்றை வாரியெடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொஞ்சி மகிழ்கிறார் மீரான். நல்ல பாம்பின் படத்தின் மீது தன் ஈர உதடுகளால் முத்தம் பதிக்கிறார். பார்க்கும்போதே நம் அடி வயிறு சுருள்கிறது. மீரான், குழந்தைகளின் செல்லமான ‘பாம்பு மாமா’!

‘‘கோபிசெட்டிப்பாளையம், என் சொந்த ஊர். வீட்டில் நானும் அண்ணனும்தான். ரெண்டு பேரையுமே அப்பா நல்லாப் படிக்கவெச்சார். நாங்க கௌரவமான வேலைகளுக்குப் போகணும் என்பது அவரோட விருப்பம். ஆனா, பாம்புகளோடு விளையாடும் த்ரில் வேறு எதிலும் வராதே!

கோபி கல்வி மாவட்டத்தில் ஹை ஜம்ப், லாங் ஜம்ப், ட்ரிபிள் ஜம்ப்னு நாலு வருஷம் நான் தொடர் சாம்பியனா இருந்தேன். இப்போ வரைக்கும் அந்த ரெக்கார்டை யாரும் முறியடிக்கலை.

ஸ்கூலில் எந்த நிகழ்ச்சின்னாலும், என்னை ஆடச் சொல்வாங்க. தலையில் ரிப்பனைக் கட்டிக்கிட்டு, பெல்பாட்டம் பேன்ட் போட்டுக்கிட்டு, பழைய கமல், ரஜினி பாட்டுக்கெல்லாம் ஆடுவேன்.

சத்தியமங்கலத்தில் ஒருத்தர், நாலஞ்சு பாம்புகளை உடம்பின் மீது தவழவிட்டபடி நடனம் ஆடியதைப் பார்த்தேன். எனக்கும் அதன் மீது ஆர்வம் வர, தொடர்ந்து முயற்சி பண்ணியதில், பாம்பு நடனமும் எனக்குச் சாத்தியப்பட்டது. அதுதான் என்னை ஓரளவுக்கு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது” என்கிற மீரான், ‘மனிதம் அறக்கட்டளை’ என்ற சமூக சேவை அமைப்பை நடத்தி வருகிறாராம்.

‘‘கோபி பகுதியில் இருந்து சிலர் சேமை இலை பறிக்கவும், நுரைக்காய் பறிக்கவும் சத்தியமங்கலம் காட்டுக்குப் போவாங்க. ஒரு நாள் விளையாட்டா நானும் அவங்களோடு போனேன். அப்போதான் காட்டுப் பாம்புகளை அவங்க கையாள்கிற விதத்தைப் பார்த்தேன். இலைகள் பறிக்கும்போது தட்டுப்படும் பாம்புகளை, அலட்டிக்காம அழகா கையால் தூக்கி அப்புறப்படுத்துவாங்க. கையில் சின்னக் குச்சியை வெச்சுக்கிட்டு பாம்புகளோடு விளையாடுவாங்க. அவங்களோடு போய்ப் போய் சில விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அப்புறம் நானே ஒரு பாம்பைப் பிடிச்சு, அதன் வாயைக் கட்டிவிட்டு, அதன் குணத்தைச் சோதிச்சேன். அது எப்போ சீறும், எப்போ அடிபணியும் என்கிறதெல்லாம் புரிஞ்சுது. கொஞ்சம் நம்பிக்கை வந்ததும் எங்கள் பள்ளியிலேயே ஒரு பாம்பை வெச்சு நடனம் ஆடினேன். அதுக்குக் கிடைச்ச அமோக வரவேற்பும், அது கொடுத்த உற்சாகமும்தான் பல பாம்புகளோடு நடனம் ஆடுற தைரியத்தை எனக்குக் கொடுத்தது.

என்னதான் வித்தை தெரிஞ்சவன்னாலும், பாம்புகள் விஷயத்தில் யாருக்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. பாம்புகளை லேசா சீண்டிட்டாலும், அது விபரீதத்தில் போய் முடியும். இதுக்காகவே சிறியாநங்கை, பெரியாநங்கை, அமுக்கிரா கிழங்கு, காட்டுமிளகு, கருஞ்சீரகம் உள்பட அரிய வேர்களை நான் எப்பவும் கையோடு வெச்சிருப்பேன். ஒரு பாதுகாப்புக்குத்தான் இதெல்லாம். இருந்தபோதும், அதையும் மீறி இந்த ஆபத்தான விளையாட்டால் பல பேர் பாம்பு கொத்தி செத்துப் போயிருக்காங்க.

எந்தப் பாம்பும் பால் குடிக்காது; முட்டையும் தின்னாது. அதெல்லாம் சினிமாவில்தான். இன்னும் சில பேர் பாம்பைக் கண்டதுமே கழியையோ கல்லையோ கொண்டு அடிக்கக் கிளம்பிடுவாங்க. இது மாதிரி பாம்புகளுக்கு எதிரான வன்முறைகளுக்கும், பாம்புகள் பற்றிய தவறான நம்பிக்கைகளுக்கும் எதிராக விழிப்பு உணர்வுப் பிரசாரமும் செய்துட்டு இருக்கேன்’’ என்கிற மீரானை ‘விருமாண்டி’, ‘வசூல்ராஜா’ போன்ற படங்களில் பயன்படுத்தியவர், கமல்ஹாசன்!

\ டி.அருள்எழிலன்