‘‘தனிமை வேறு... ஏகாந்தம் வேறு!’’

வழக்கறிஞர் சுமதி

டா  க்டர் பிரபா ஆத்ரே, ஹிந்துஸ்தானி இசை உலகில் ஒரு சகாப்தம்!

பத்மஸ்ரீ, பத்மபூஷண், காளிதாஸ் சம்மான், சங்கீத நாடக அகாடமி என விருதுகளும் பட்டயங்களும் பறைசாற்றும் உயரம். வாழ்வைச் சங்கீதத்துக்கு அர்ப்பணித்துவிட்ட அம்மாவுக்கு வயசு 75.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஸ்வரமாயி ஸ்தாபனம் இரண்டும் இணைந்து நிகழ்த்திய பாராட்டு விழாவுக்கு வந்திருந்தவரைச் சந்தித்தோம்...

‘‘உங்களைப் போலத்தான் நானும். எனக்கென்று எந்த சங்கீதப் பின்னணியும் கிடையாது. மத்திய வர்க்கக் குடும்பத்தில் பிறந்தேன். என் பெற்றோர், ஆசிரியர் பணியில் இருந்தனர்.

வானொலியில் வழிந்தோடும் சங்கீதத்தை இன்பமாய் கேட்பேன். என் பதினோராவது வயதில், பள்ளிக்கூடம் போகும் வழியில், டீக்கடையில் ஒரு பாடல் கேட்டது. யாருடைய பாடல் என்று கேட்டபோது, ‘உஸ்தாத் படே குலாம் அலிகான்’ என்றார் கடைக்காரர். அந்தக் குரல் என்னைக்

கட்டிப்போட்டது. அந்தப் பாடலை நான் கற்றுக்கொண்டேன். என் ஆர்வத்தை உணர்ந்த என் தந்தையின் நண்பர், என்னை என் குருநாதர் சுரேஷ்பாபு மனேயிடம் என்னை அழைத்துச் சென்றார். ‘காக்கறு சஜினி’ என்று நான் பாடியதைக் கேட்டவர் என்னைத் தன் சிஷ்யையாக ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு எனக்குச் சங்கீதமே வாழ்க்கை யானது!’’

‘‘நல்ல சங்கீதம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?’’

‘‘சங்கீதம் மட்டுமல்ல, எந்தக் கலை வடிவமாக இருந்தாலும்... கலைஞனைத் தனக்கு அடிமையாக்கிக்கொள்ளாத கலை, ரசிகனைத் தனக்கு அடிமையாக்கிவிடாத கலைஞன் என இவையிரண்டும் எங்கு ஒருசேர ஒளிர்கிறதோ, அங்கே கலை கம்பீரம் பெறுகிறது. அதுவே நல்ல கலையின் அடையாளம். கலை என்பது ஒருவரை விடுதலைப்படுத்த வேண்டு மேயன்றி அடிமைப்படுத்தக் கூடாது.

உன்னதமான சங்கீதம் என்பது, இனிமையான குரலில் வழிந்தோடும் இசையல்ல. எண்ண ஓட்டத்தைத் தெளிய வைத்து, மனதையும் புத்தியையும் இணைக்கும் மந்திரம் அது. சிந்தனையைச் செம்மைப்படுத்தாத எந்த இசையும், அது எத்தனை இனிமையான குரலில் இருந்து வந்தாலும், சங்கீதமாகக் கருத முடியாது!’’

‘‘குரு - சிஷ்ய உறவு பற்றிய உங்கள் கருத்து என்ன? உங்கள் குருவுடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?’’

‘‘யமன் - இந்த ராகம் எனக்கு எல்லாம் - எல்லாமாகிய ஒன்று. அதன் வல்லமையை என் சங்கீதப் பயணத்தின் முதல் நொடியில் இருந்து அனுபவித்திருக்கிறேன். என் குருவின் மரணத்தின்போது, எத்தனை உன்னதமான உயிரை நான் பறிகொடுத்திருக்கிறேன் என்பதை

எனக்கு உணர்த்தியதும் இந்த ராகம்தான். ஒரு ராகத்தை முறையாக குருவிடம் பயின்றால் அல்லது ஒரு ராகத்தின் பற்பல பரிமாணங்களைச் சொல்லிக்கொடுக்கும் உயரிய குரு ஒருவருக்கு அமையுமானால், ஏனைய ராகங்களைத் தனக்குத்தானே தரிசித்துக்கொள்ளும் தைரியத்தையும் ஆத்ம பலத்தையும் அது ஒருவருக்குள் ஏற்படுத்திவிடும்.

கல்வி என்பது விளக்குத் திரியைத் தூண்டிவிடும் பணியேயன்றி, பாத்திரத்தை நிரப்பும் பணியன்று. ஒரு நல்ல சிஷ்யனுக்குள் சில மாற்றங்கள் அவனறியாமலே தானே நிகழ்ந்துவிடும். இந்த நிகழ்வு எவ்வளவு ஆற்றொழுக்காக நடக்கிறதோ, அவ்வளவு மேன்மையானது அந்தக் கல்வி. என் குருநாதரிடம் நான் கற்ற சங்கீதம் இத்தன்மையது. தன் நிழலுக்குள் சிஷ்யனை வதங்கவிடாமல் போதிக்கும் குரு கிடைப்பது எளிதல்ல!’’

‘‘உங்கள் குருநாதரின் சகோதரி, ஹீராபாய் படோடேகர் உங்களை எப்படிப் பாதித்தார்?’’

‘‘ஹீராபாய் அவர்களைச் சந்தித்தபோது, அவர் மிகப் பிரபலமான கலைஞராக இருந்தார். அவருடன் பல கச்சேரிகளில் உடன் பாடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஹிந்துஸ்தானி மேடைக் கச்சேரிகளில் பெண்கள் உட்கார்ந்து பாடக் கூடாது என்ற நியதியை மாற்றியவர் அவர். அந்தத் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் பெண் என்ற முறையில் என்னைக் கம்பீரம்கொள்ளச் செய்தது. அடக்கத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் உள்ள வேறுபாட்டை அவர் செயல்பாடுகளில் பார்த்துப் பார்த்தே நானும் பயிற்சிகொண்டேன்.’’

‘‘நவீனமயமாகிவிட்ட கல்வி முறையில், சங்கீதத்தில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்துள்ளதா?’’

‘‘ஒரு குருவிடம் கற்கும்போது முறை மட்டுமல்ல, பண்பும் ஒழுக்கமும் பயில முடிகிறது. இன்ன பள்ளியில் பயின்றோம் என்று நம்மைப் பிறர் அடையாளம் காணுகிறார்கள். மனோதர்மத்தை வளர்த்துக்கொள்ளும் பயிற்சி குருவிடம் ஏற்படுகிறது. ஒலிநாடாவின் மூலம் ஏற்படுத்திக்கொள்ளும் பயிற்சியில் இது சாத்தியமல்ல.

சங்கீதத்தின் இலக்கண முறைமையை குருவிடம் கற்றுக்கொள்ளும் அதே தருணம், சங்கீதமும் அதில் தளும்பும் ரஸ பாவங் களும் உங்களுடையதாக இருக்கும். அப்படியே பாடுவதற்கும் அடியற்றிப் பாடுவதற்கும் வேறுபாடு கடுகளவு என்றாலும், வித்தியாசம் கடலளவு!’’

‘‘உங்கள் சங்கீத வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் எது?’’

‘‘நான் ஆல் இண்டியா ரேடியோவில் பணியாற்றியபோது, அமீர் கான்ஜி அவர்களின் பாடலைப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பின்னாளில் நான் பாடிய ஒரு கச்சேரிக்கு அவர் வந்திருந்தார். அவரை ஒருவர் பேட்டி கண்ட போது தன் சங்கீதத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எவரும் உண்டென்றால் அது பிரபாவாக இருக்கும் என்றார். இந்த வார்த்தை களை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன்.’’

‘‘சங்கீதம் ஒன்றையே துணையாகக்கொண்டு பயணிப்பவர் நீங்கள். உறவுகளும்

பிரிவுகளும் உங்களைப் பாதித்துள்ளதா? அந்தத் தருணங்களை நீங்கள் எப்படிக் கடந்தீர்கள்?’’

‘‘என் வாழ்வில் நான் சங்கீதத்தை உணர்ந்து வாழ்ந்த நிமிடங்களில், அது ஒன்றே போதுமானதாகத்தான் தோன்றியது. ஆனால், உறவுகளும் பிரிவுகளும் எப்படிப்பட்ட பக்குவமான நபர்களையும் கிழித்துப்போடும். இருபத்தோரா வது வயதில் நான் என் குருவின் மரணத்தைச் சந்தித்தபோது, அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வருத்தம், கோபம், ஆத்திரம் எனப் பற்பல உணர்வுகள் என்னைக் கலங்கச் செய்தன. என் குருநாதர் இருந்த இடத்தில் வேறு ஒருவரை அமர்த்திப் பார்க்க என் இதயம் சம்மதிக்கவில்லை. அடிப்படையில் நான் வெளிப்படையான நபர் இல்லையென்பதால், இந்த இழப் பின் சோகத்தைப் பகிர்ந்து கொள்ளும் வழியும் எனக்குத் தெரியவில்லை.

நான் கனவுகளில் என் குருநாதரைத் தரிசிக்கத் தொடங்கினேன். என் சங்கீதத்தை எனக்குள் தேட அது மிகப் பெரும் கருவியாக அமைந்தது. வேறு எவரையும் குருவாகப் பாவிக்காமல் என் சங்கீதத்தை நானே சுயம்புவாக வளர்த்துக்கொள்ள அது உதவியது.

என் ஒரே சகோதரியின் கணவர் எங்கள் வீட்டுப் பணியாளரால் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது அகால மரணம் என்னை உலுக்கியது. அவரது கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு விடுதலை வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை ஜீரணிக்க முடியாத என் சகோதரி தற்கொலை செய்துகொண்டார். அவர்கள் இருவரும் எப்போதும் என்னைப் பார்த்துக்கொள்வார்கள் என நினைத்திருந்த என்னை அந்த மரணங்கள் குற்றுயிராக்கின. சங்கீதத்தின் மென்மையிலேயே பயணித்துப் பழக்கப்பட்ட எனக்கு இந்த யதார்த்த வாழ்க்கையின் கொடூரங்கள், பயத்தை ஏற்படுத்தின.

தனிமை வேறு, ஏகாந்தம் வேறு. ஏகாந்தத்தின் மௌனத்தை ரசிக்க முடிந்த என்னால், தனிமையின் சத்தத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை!

ஸ்வரங்களை வசப்படுத்தத் தெரிந்த எனக்கு, வாழ்க்கையின் அபஸ்வரங்களைக் கடக்கும் பயணம் கடினமாகவே இருந்தது. ஆனால், இசைக்கு எந்த ரணத்தையும் கடக்கும் வலிமையைத் தரும் ஆற்றல் உண்டு. உன்னதமான இசை தந்த நீட்சியாக என் வாழ்க்கை நீண்டுகொண்டுதானே போகிறது!’’

\ படங்கள்: உசேன்