தி னமும்
பகல் உணவில், ஏதாவது ஒரு கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்வது
என்றென்றும் ஆரோக்கியம் தரும்.
இந்த வாரம்... அகத்திக் கீரை.
கொஞ்சம் கசப்பான சுவையுள்ள அகத்திக் கீரை மருத்துவக் குணங்கள்
நிரம்பியது. புரதம், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து,
வைட்டமின் ஏ போன்றவை அதிக அளவில் அகத்திக் கீரையில் இருக்கிறது.
அகத்திக் கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்துச் சமைத்துச்
சாப்பிட்டால், குடல் வலிமை பெறும். அரிசி கழுவிய நீரில் அகத்திக்
கீரையை வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலும்
இதயமும் வலுவாகும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் அகத்திக் கீரைக்கு
உண்டு. பித்தத்தையும்
கபத்தையும் குறைக்கும். வாதத்தை மட்டுப்படுத்தும். உடலின்
உஷ்ணத்தைக் குறைக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும். மாலைக்
கண் நோயைக் குணப்படுத்தும்.
எந்தக் கீரையாக இருந்தாலும், கீரையை வேக வைத்த நீரை
கீழே கொட்டிவிடக் கூடாது. கீரையின் சத்துப் பொருட்கள் அந்த
நீரில் இறங்கியிருக்கும். அந்த நீரில் சூப் வைத்துச் சாப்பிடலாம்.
வாயுக் கோளாறு உள்ளவர்கள், அகத்திக் கீரையை அதிகமாகச்
சாப்பிடாமல் இருப்பது நல்லது. பொதுவாக, மாதத்துக்கு இரண்டு
நாட்களுக்கு மேல் அகத்திக் கீரையை உட்கொள்ளக் கூடாது!
|