உங்க ஆரோக்கியம் எத்தனை கிலோ?

‘‘உ  ங்க நண்பர்கள் யார் யார்னு சொல்லுங்க; நீங்க எப்படிப்பட்டவர்னு நான் சொல்றேன்’னு ஒரு வசனம் உண்டு. அது போல, உங்க எடை என்னன்னு சொல்லுங்க; உங்க ஆரோக்கியம் எந்த அளவுக்கு இருக்குன்னு நான் சொல்றேன்’’ என்று புன்னகைக்கிறார் அம்ஸ்ராஜா. இந்திய கிரிக்கெட் அணிக்கு பிஸியோ தெரபிஸ்ட்டாக இருந்தவர். இப்போது தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் இவர்தான் பிஸியோ தெரபிஸ்ட்.

‘‘ஆமாம். நமது ஆரோக்கியத்தின் ரகசியம் நமது எடையில்தான் இருக்கிறது. உயரத்துக்கு ஏற்ற எடைதான் ஆரோக்கியத்துக்கான அடிப்படை விஷயம். நாம் சரியான எடையில் இருந்தால், நம் இதயம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயங்கிக்கொண்டு இருக்கும். தவிர, நம் உயரத்துக்குரிய எடையைவிட அதிக எடை இருந்தால், நமது மூட்டுக்கள் பாதிக்கப்படும். அதிக எடையைச் சுமந்து சுமந்து, அவை சீக்கிரமே தேய்ந்து பிரச்னைகளை உண்டுபண்ணும். அதுவே, தேவையான எடைக்கும் குறைவாக இருந்தால், ஃபிட்னெஸ் இல்லை - அதாவது, நம் உடல் கட்டுறுதி யாக இல்லை என்று அர்த்தம். அதற்குக் காரணம், போதிய சத்துக்கள் இல்லாததுதான். ஆகவே, ஆரோக்கியத்துக்கான முதல்படி, உயரத்துக்கேற்ற எடைதான்’’ என்கிறார் அம்ஸ்ராஜா.

‘‘உயரத்துக்கேற்ற எடை என்பது என்ன? ஒவ்வொரு உயரத்துக்கும் இவ்வளவு எடை இருக்க வேண்டும் என்று ஒரு அட்டவணை இருக்கிறது. பெரும்பாலான மருந்துக் கடைகளில் இந்த

அட்டவணை கிடைக்கும். அதை வாங்கிப் பார்த்து, நாம் நம் உயரத்துக்கேற்ற சரியான எடையில் இருக்கிறோமா என்று தெரிந்துகொள்ளலாம். உடற்பயிற்சி செய்யாததாலும், நாள் பூரா ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பதாலும் எடை கூடி, தொப்பை விழுகிறது. தொப்பையைக் குறைக்க சிட் - அப்ஸ், குனிந்து நிமிர் வது போன்ற உடற் பயிற்சி களைச் செய்கிறார்கள். தொடையோடு வயிறு உரசுகிற இதுபோன்ற குனிந்து நிமிரும் பயிற்சி களால் தொப்பை குறை யாது என்பதுதான் உண்மை. இப்படி முன் பக்கம் மட்டும் உடற்பயிற்சி செய்துவிட்டு, முதுகுக்குப் பயிற்சி தராமல் விட்டுவிடுவதால், முதுகு வலி வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, உடம்பின் எல்லா பாகங்களுக்கும் ஒரே மாதிரி சீரான பயிற்சி கிடைக்கும்படியாக உடற்பயிற்சி செய்வதே முறை.

ஜிம் போக இயலாதவர்கள் வாக்கிங், ஜாகிங், ஸ்விம்மிங் இந்த மூன்று உடற்பயிற்சி களையுமோ அல்லது ஏதாவது ஒன்றையோ மேற்கொள்ளலாம். பெரும்பாலானவர்கள் அதிகபட்சம் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு, முடித்துக்கொள்கிறார்கள். முதல் 20 நிமிட உடற்பயிற்சியால், உடலின் சர்க்கரை அளவு மட்டும்தான் குறையும். அடுத்த 20 நிமிட உடற்பயிற்சியில்தான் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சத்துக்கள் குறைய ஆரம்பிக்கும். எனவே, தினமும் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்; அல்லது வாக்கிங் போக வேண்டும். சரியான எடையில் இருப்பவர்கள் 20 நிமிட வாக்கிங் அல்லது உடற்பயிற்சி யோடு நிறுத்திக்கொள்ளலாம். தவிர, வாரம் முழுவதும் உடற்பயிற்சி செய்வது தேவை இல்லாதது. வாரத்துக்கு நான்கு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே போதும்.

‘வாக்கிங்’ என்றாலே, மூச்சிரைக்க இரைக்க நடக்க வேண்டும் என்று பலர் நினைக்கி றார்கள். அது தேவையில்லாத ஒன்று. நடந்து கொண்டே நாம் பேசினால், அது உடன் வருபவர்களுக்குத் தெளிவாகப் புரிய வேண்டும்; அந்த வேகத்தில் நடப்பதே சரி! இதனால், எடை அதிகம் உள்ளவர்களின் உடலில் உள்ள கொழுப்புச் சத்துக்கள் குறையும். அதுவே, உடல் எடை குறைவாக உள்ளவர்கள் வாக்கிங் மற்றும் உடற்பயிற்சிகளை முறையாகச் செய்தால், நேரத்துக்குப் பசியெடுக்க ஆரம்பிக்கும். அச்சமயத்தில் புரோட்டீன், கார்போஹைட் ரேட் அதிகமுள்ள பயறுகள், கீரை வகைகளைச் சாப்பாட்டில் சேர்த்து உண்டால், உடல் எடை கூடும்.

உடம்பின் ஃபிட்னெஸ் கூடியவுடன், உடற்பயிற்சிகளையும் அதற்கேற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். வாக்கிங் போய்க்கொண்டு இருப்பவர்கள், உடலின் ஃபிட்னெஸ் கூடிய தும், ஜாகிங்குக்கு மாற வேண்டும்.

இன்று பெரும்பாலானவர்களுக்குக் கழுத்து, முதுகு, முட்டி ஆகியவற்றில் தேய் மானம் ஏற்பட்டு, வலி உண்டாகும் பிரச்னை இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட பாகங்களைப் பலப்படுத்தும் சின்னச்

சின்ன உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால் வலி நீங்கும். உடல் நிலை, வயது இவற்றுக்கு ஏற்ப இந்த உடற்பயிற்சிகள் மாறுபடும். எனவே, பிஸியோ தெரபி நிபுணரிடம் ஆலோ சித்து, அவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளைச் செய்வது நல்ல பலன் தரும்.

உடற்பயிற்சி போலவே நாம் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய இன்னொரு விஷயம், சுவாசப் பயிற்சி. இன்றைய இயந்திர வாழ்க்கையில், நாம் சரியாகச் சுவாசிப்பதில்லை என்பதுதான் உண்மை. சரியான சுவாசம் இருந்தாலே, உடலின் பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். எனவே, ‘பிராணயாமா’ எனப்படும் யோகா வைக் கற்றுக்கொண்டு, தினமும் அதிகாலையில் 20 நிமிடங்கள் சுவாசப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மத்த உடற்பயிற்சிகள் மாதிரி, இதில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்கூடாக உணர முடியாது. இதனால் பல பேர் போரடித்துப் போய், இதைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். அது தவறு!

பெண்களைப் பொறுத்தவரை, இரவு உணவுதான் அவர்களுக்கு எதிரி. இரவில் உணவு அதிகம் மீதமாகி விட்டதே, நாளைக்கு அத்தனையும் கெட்டுப்போய் வீணாகிவிடுமே என்று கவலைப்பட்டு, தேவைக்கு அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் பல குடும்பப் பெண்களுக்கு இருக்கிறது. இதனால், அவர்களின் உடல் எடை அதிகரித்து விடுகிறது. உணவை வீணாக்குவது தவறு தான். அதைவிடத் தவறு, தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவது!

அதேபோல, சமையலறையில் அதிக நேரம் நிற்பதால் பெண்களின் கழுத்து, முதுகு, குதிகால் இந்த மூன்று பகுதிகளும் பாதிக்கப்பட்டு, வலி உண்டாகும்.  M.C.R. ( Micro Cellular Rubber), M.C.P (Micro Cellular Pollymore)  என இரண்டு வகைகளில் மிருதுவான செருப்புகள் மார்க்கெட் டில் கிடைக்கும். அவற்றை வாங்கி அணிந்தால், பாதங்களில் உடல் எடை சமச்சீராகப் பரவும். குதிகால் வலி ஏற்படாது.

நாம் எப்படி அமர்கிறோம் என்பது கூட மிக முக்கியம். சரிந்து அமர்வதால், உடலின் முன்பகுதி எடை முதுகுத்தண்டின் மீது அழுத்தம் கொடுக்கும். இதனால் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு, முதுகு வலி ஏற்படும். நிமிர்ந்து அமர்வது மட்டுமே இந்தப் பிரச்னையைச் சரி செய்யும் ஒரே வழி!

மொத்தத்தில், நமது பழக்க வழக்கங்களையும் உணவு முறையையும் திட்டமிட்டுச் சரி செய்துகொண்டால் போதும்... ஆரோக்கியமான வாழ்க்கையை அனைவரும் பெறலாம்!

\ எஸ்.கலீல்ராஜா
படம்: சு.குமரேசன்