‘இப்போ நான் புத்தம் புதுசே!’

‘‘ம  ல்ட்டி காம்ப்ளெக்ஸ் ஷாப்பிங் மால்களும், சாஃப்ட்வேர் கம்பெனிகளும், கிளை விரித்துப் பரவும் மேம்பாலங்களும், பளபளப்பான அடுக்குமாடிக் குடியிருப்புகளும் நிறைந்து காணப்பட்டாலே ஒரு நகரம் வளர்ச்சி அடைந்துவிட்டதாகக் கருதிவிடமுடியாது! ஏழை எளிய மக்கள் வசிக்கும் சேரிப் பகுதிகளில் உண்டாகும் மாற்றம்தான் உண்மையான வளர்ச்சிக் கான அடையாளம்! அதிலும் 1,100 குடிசைப் பகுதிகளை உள்ளடக்கிய சென்னை சேரிப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றாமல் சிங்காரச் சென்னை சாத்தியமில்லை என்பதை உணர்ந்ததால், நாங்கள் இந்த முயற்சியில் இறங்கினோம்!’’ - மென்மையாக ஆரம்பிக்கிறார் ‘சென்னை வெலிங்டன் கார்ப்பரேட் ஃபவுண்டேஷனி’ன் தலைவர் வி.நாராயணன்.

‘‘கஞ்சா, சாராயம் தொடங்கி டெங்கு, மலேரியா காய்ச்சல் வரைக்கும் சென்னை மாநக ரத்தை அச்சுறுத்தும் அனைத்துக்கும் முதல் புகலிடமாக இருப் பது, கச்சடாவாக இருக்கும் சேரிப்

பகுதிகள்தான். மெட்ரோபாலிடன் நகரமாக நாலு கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டு இருக்கும் சென்னையின் முகத்தை இதுபோன்ற சேரிகள் பொலிவிழக்கச் செய்துவிடுகின்றன. அதனால்தான், அரசாங்கம் செய்யட்டும் என்று எதிர்பார்க்காமல் எங்களால் முடிந்தவரை, சேரிகளைப் பக்காவான காலனிகளாக மாற்ற முடிவெடுத்துச் செயல்படுகிறோம்!’’ என்கிறார் நாராயணன்.

மிகக் குறுகிய காலத்தில், சென்னை கே.கே.நகரில் உள்ள அன்னை சத்யா நகரில் இந்த அமைப்பு அரங்கேற்றி இருக்கும் மாற்றங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன.

‘‘கழிவுநீர் வாய்க்கால் இல்லாம, சாக்கடை தெருவுக்குள் ஓடி, தெருவே சேறும் சகதியுமா இருக்கும். கழிப்பறை வசதி இல்லாததால பசங்க, பெரியவங்க எல்லோருக்கும் வெட்ட வெளிதான் கழிப்பறை! ராத்திரி புழுக்கமா இருக்குனு வீதியில படுத்துத் தூங்கினா, பக்கத்துல நாய், பன்னிங்க எல்லாம் வந்து படுத்துக் கும். அவ்வளவு ஏங்க... முன்னெல்லாம் இந்த ரோட்டுல நீங்க இப்படி நடந்து வந்து பேட்டி எடுத்திருக்க முடியாது. அந்தளவுக்கு அந்தலை சிந்தலையா இருக்கும்! ஆனா, இப்ப பாருங்க... கான்கிரீட் சாலை, வீட்டுக்கு வீடு தனித் தனி கழிப்பறை, தண்ணீர்க் குழாய் இணைப்புனு எங்க வாழ்க்கையே உசந்துபோச்சு!’’ என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார் சத்யா நகர்வாசி சாந்தி. இந்த மாற்றங்களைச் சாத்தியப்படுத்திய வெலிங்டன் கார்ப்பரேட் ஃபவுண்டேஷன், சென்னையைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரபல தொழிலதிபர்கள் இணைந்து உருவாக்கிய அறக்கட்டளை. இவர்கள் தொடர்ந்து குடிசைப் பகுதிகளைப் புனரமைப்பதில் தங்களை மும்முர மாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.

‘‘இப்படி ஒரு முயற்சியில் இறங்கலாம்னு தீர்மானிச்சப்ப, ‘அது ரொம்ப ஆபத்தான வேலையாச்சே! ஏரியா ரவுடிகள் பிரச்னை செய்வாங்க. நீங்க சுத்தப்படுத்திக் கொடுத்தாலும் பழையபடி நாசமாக்கிருவாங்க’னு ஏகப்பட்ட எதிர்ப்பு! அதுல உண்மையும் இருந்துச்சு. அதனால, நாங்க வெறுமே குடிசைப் பகுதியை மட்டும் சுத்தமாக்கித் தராம, அங்கே குடியிருக் கிறவங்க மனநிலையையும் மாத்தணும்னு முடிவெடுத்து, அன்னை சத்யா நகர் குடியிருப்போர் நலச்சங்கம், ஸ்ரீநிதி சிதம்பரம் நடத்தும் ஆய்வு நிறுவனம், கைங்கர்யா அமைப்பு, சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம், சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் ஆகியோரின் உதவியோடு இந்த நல்ல விஷயத்தைச் சாதிச்சுட்டோம்.

சுகாதாரத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வாலன்ட்டியர்களை நியமிச்சிருக்கோம். 20 மகளிர் சுய உதவிக் குழுக்களையும் ஆரம்பிச்சிருக்கோம். நோய் வருமுன் காப்பதற்கு ஒரு ஹெல்த் சென்ட்டரையும் இங்கே அமைச் சிருக்கோம். எல்லாத்தையும்விட, இப்பகுதி மாணவர்களின் படிப்பில் அக்கறையெடுத்து, டியூஷனுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம். எல்லா மாணவர்களும் இப்ப ஆர்வமா பள்ளிக்கூடத்துக்குப் போறாங்க!’’ என்கிறார் ‘வெலிங்டன் கார்ப்பரேட் ஃபவுண்டேஷனை’ச் சேர்ந்த பைரவன். இவர் முன்னாள் ஹிந்துஸ்தான் லீவர் அதிகாரி.

‘‘மகளிர் சுய உதவிக் குழுவுல இருந்து குறைஞ்ச வட்டிக்குக் கடன் கொடுக்கிறோம். குழுவுல இருந்து ஒரு சமூக நலக் கூடமும் கட்டியிருக்கு. அங்கே தையல் வகுப்புகள், முதியோர் கல்வி, பசங்களுக்கு டியூஷன், கம்ப்யூட்டர் கிளாஸ் எல்லாம் நடக்குது’’ என்று உற்சாகமாகச் சொல்கிறார் சுய உதவிக் குழு நடத்திவரும் செண்பகம்.

‘‘சென்னை குடிசைமாற்று வாரியம் செய்ய வேண்டிய வேலைகள் இவை. வருடந்தோறும் குடிசை மாற்று வாரியத்துக்கு ஒதுக்கீடு செய்யும் பணத்தின் அளவுதான் கூடிக்கிட்டே போகுதே தவிர, குடிசைப் பகுதிகள் மாறினதாகத் தெரியலை. சமூக அக்கறையுள்ள தனியார் நிறு வனங்கள் மற்றும் எல்.ஐ.சி., வங்கிகள் போன்ற அரசு நிறுவனங்களும் இந்த குடிசைப் பகுதிகளைத் தத்தெடுக்க முன் வரலாம். எல்லோரும் ஒரு கை கொடுத்தால், குடிசைப் பகுதி களே இல்லாமல் செய்துவிட முடியும்’’ என்கிறார் பைரவன் உறுதியாக.

அப்படிச் செய்தால், சென்னையை சிங்காரிக்கும் முதல் கட்ட ஒப்பனையாக அது அமையும்!

\ சாருகேசி, தளவாய்சுந்தரம்
படங்கள்: ‘ப்ரீத்தி’ கார்த்திக்