‘‘அப்பு... எங்கேடா இருக்கே நீ?’’

செ  ன்னை, ராயப்பேட்டை மணிக்கூண்டு. ‘ரஷ் ஹவர்’ பட போஸ்டர் அருகே, அழுக்கு மஞ்சள் கலரில் ஒட்டப்பட்டு இருந்த அந்த பிட் நோட்டீஸ் நம் கவனத்தைக் கவர்ந்தது!

‘வயது மூன்று. ‘அப்பு’ என்று யார் கூப்பிட்டாலும் ஓடி வருவான். அவனைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. கண்டுபிடித்துத் தருபவர்களுக்குப் பணம் தரத் தயாராக இருக்கிறேன்!’ - அறிவிப்பின் அருகில், நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் ஒரு பாக்ஸர் நாயின் படம்.

அதிலிருந்த திருவல்லிக்கேணி முகவரியைத் தேடிப் போனோம். பங்காரு நாயக்கன் தெருவில் மத்தியில் பழுப்பேறி நிற்கிறது பழைய வீடு.

‘‘செல்லம்மா... சொன்னா கேளுடி. கத்தாதே! ராமு, புஜ்ஜி, ஜெய்... எல்லாரும் இங்க வந்து

நில்லுங்கடா! ராம்போ, கவலைப் படாதே. வீட்டுக்குப் போ! அப்பு திரும்ப வந்துடுவான்டா. நிச்சயம் வருவான்!’’ - தாடியும் மீசையுமாக, சாமியார்போல் இருக்கிற தெய்வசிகாமணியின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கின்றன நாய்கள்.

‘‘இதுதான் சார் என் உலகம்! ஒருகாலத்துல நாயைக் கண்டாலே பிடிக்காது எனக்கு. ஆனா, இன்னிக்கு நாய்தான் வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு!’’ என்று தன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறார் தெய்வசிகாமணி.

‘‘முதல்ல வேலைவாய்ப்புப் பயிற்சி இயக்குநரகத்துல வேலை பார்த்துட்டு இருந்தேன். கல்யாணம் முடிஞ்ச ஆறே மாசத்துல நாகலாந்து மாநிலத்துல டெபுடேஷன் கிடைச்சுது. மூணு வருஷம்... புது இடம், புதுப் பெண்டாட்டின்னு அவ்வளவு சந்தோஷமா இருந்தேன். நான் சம்பாதிச்சது, என் மனைவி டியூஷன் எடுத்ததுன்னு சேர்த்த பணத்தையெல்லாம் என் மாமனாருக்கு அனுப்பி, சேமிச்சு வைக்கச் சொன்னேன். ஆனா, திரும்பி வந்து பணம் கேட்டா, அவர் இல்லைன்னு கை விரிச்சுட்டார்.

குடும்பத்துல சண்டை ஆரம்பிச்சுது. பேச்சு முத்தி, வார்த்தை தடிச்சு, என் பெண்டாட்டி என்னைப் பேசக்கூடாத வார்த்தையெல்லாம் பேசிட்டா. வந்த கோபத்துல கையில சிக்கினதையெல்லாம் தூக்கி அடிச்சேன். என் பையன், பொண்ணு ரெண்டு பேரையும் தூக்கிட்டுப் பொறந்த வீட்டுக்கே நிரந்தரமா போயிட்டா.

வாழ்க்கையே இருண்டு போன மாதிரி ஆயிருச்சு. உடம்பையே ரெண்டா கிழிக்கிற மாதிரி ஒரு வலி. உடம்போட வலது பக்கம் முழுக்க எதுவும் வேலை செய்யலை. யாரைப் பார்த்தாலும்

கோபம்; காரணமே தெரியாம அழுகை! டாக்டர்கிட்ட போனேன். ‘உனக்கு நரம்புலயும், மனசுலயும் பிரச்னை! நரம்பு பிரச் னைக்கு மருந்து தரேன். மனசு பிரச் னைக்கு ஏதாவது ஒரு பறவையோ, பிராணியோ எடுத்து வள! இல் லாட்டி, மனநோய்க்கு ஆளாகிடு வே’னு எச்சரிச்சார்.

அந்தச் சமயத்துல என்கூட வந்து ஒட்டிக்கிட்டவதான் ஜூலி. மூணு மாசக் குட்டியா வந்தவளுக்கு நான் தாயாவே மாறிட்டேன். ஒண்ணா தான் சாப்பிடுவோம். ஒண்ணாதான் தூங்குவோம். நான் ஐ.டி.ஐ-யில வேலை பார்க்கிறேன். சாயங்காலம் என் வருகைக்காக அவ வாசல்லயே காத்திருப்பா. என்னைப் பார்த்ததும் குஷியாகி, முன் கால்களைத் தூக்கி டான்ஸ் ஆடுவா. நமக்காகவே இது காத்துக்கிட்டு இருக்கேன்னு நினைச்சப்ப, கவலையெல்லாம் போயிருச்சு. ஜூலி ரெண்டு, மூணு குட்டி போட்டா. இப்ப மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பாக்ஸர் வகை நாய்க்குட்டி யைக் கொண்டுவந்து கொடுத் தார் ஒருத்தர். அதுதான் அப்பு.

இவங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லைன்னா, வேப் பேரி ஹாஸ்பிடலுக்கு கூட்டிட் டுப் போவேன். அங்கேர்ந்து திரும்பி வர ஆட்டோ கிடைக் காது. அதனால சொந்தமாவே ஒரு ஆட்டோ வாங்கிட்டேன். ஆட்டோவுல போறதுன்னா அப்புவுக்கு அவ்வளவு சந்தோஷம். முதல் ஆளா ஓடி வந்து நிப்பான்.

இதுக்கு நடுவுல, எனக்கு ரெண்டு தடவை ஹார்ட் அட்டாக் வந்துச்சு. இதய வால்வுல ஒண்ணு பெரிசாகிருச்சாம். அதுக்கு மருந்து சாப்பிட்டுகிட்டு இருக்கேன். தவிர, சின்ன வயசுல

இருமலுக்கு அதிகமா மருந்து சாப்பிட்டதால ஒரு பக்க நுரையீரல் கெட்டுப் போச்சாம். அறுத்து எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. உடம்பு ரொம்ப படுத்துதேன்னு கோபத்துல இருக்கிறப்ப, ஒரு நாள் அப்பு என்கிட்ட வந்து ரொம்ப சேட்டை பண்ணி னான். குழந்தையைப் போட்டு விளாசிட் டேன். அதை அவன் எதிர்பார்க்கலை போல... எவ்வளவோ கெஞ்சிக் கூப்பிட்டும் நிக்காம திரும்பித் திரும்பிப் பார்த்துகிட்டே ஓடிப்போயிட்டான்.

அவன் போய் ஒரு மாசம் ஆயிடுச்சு. எங்கே போனான், எங்கே இருக்கான்னு ஒரு விவரமும் தெரியலை. அவன் போன நாலு நாள் நான், ராம்போ, ஜூலின்னு யாருமே சாப்பிடலை. அப்பு இல்லாம ராம்போ வாக்கிங் வர மாட்டேங்குறான். எனக்கும் அப்பு இல்லாம வெறிச்சோனு இருக்கு. அதான், பிட் நோட்டீஸ் அடிச்சு ஊரெல்லாம் ஒட்டிட்டு வரேன். தெரிஞ்சவங்க, நாய் வளர்க்குறவங்க எல்லார்கிட்டேயும், அப்பு வைப் பார்த்தா எனக்குத் தகவல் தரச் சொல்லி வெச்சிருக்கேன்.

அப்பு நிச்சயம் வருவான். அவனுக்காகவும், மத்த குழந்தைகளுக்காகவும்தான் இந்த உசிரை இன்னும் கையில பிடிச்சுக்கிட்டுக் காத்துட்டு இருக்கேன்..!’’

தெய்வசிகாமணியின் கண்களில் நீர் வழிவதை, புரியாமல் பார்த்து, வாலை ஆட்டியபடி அவர் மீது இழைகின்றன அவரின் வளர்ப்புக் குழந்தைகள்!

\ எஸ்.கலீல்ராஜா
படங்கள்: உசேன்