Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நம்பினால் நம்ப மாட்டேன்!

நானே கேள்வி... நானே பதில்!

நம்பினால் நம்ப மாட்டேன்!

Published:Updated:
##~##
'' 'எனக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், கடவுளுக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறது’ என்கிறாரே கருணாநிதி?''

''ஒருவேளை, என்னை நம்பும் யாரையும் நான் நம்ப மாட்டேன் என்பதைத்தான் வேறு வார்த்தைகளில் இப்படிச் சொல்கி றாரோ?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

    - மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

'''கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்கிறார்களே, அப்படி என்றால்...''

''தேர்தல் நேரம். ஒரு ஓட்டுக்கு

நானே கேள்வி... நானே பதில்!

1,000 வீதம் விநியோகித்துக்கொண்டு வருகிறார்கள். உங்கள் வீட்டு வாசலுக்கும்  வந்துவிட் டார்கள். உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது. ஆனால், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை. இப்போது புரிகிறதா எட்டும் சமாசாரம்?''

- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.

'''ராமதாஸ் அடுத்த தேர்தலைப்பற்றிச் சிந்திப் பவர் இல்லை. அடுத்த தலைமுறையைப்பற்றிச் சிந்திப்பவர்’ என்கிறாரே அன்புமணி?''

''உண்மைதானே! ராமதாஸ் சென்ற தலைமுறை. அன்புமணி அடுத்த தலைமுறை!''

     - ப்ரியதர்ஷினி, சென்னை-78.

நானே கேள்வி... நானே பதில்!

''சமீபத்தில் அடித்த ஷாக்?''

''ஒரு விஷயத்தைப் படித்தபோது ஏற்பட் டது. முகேஷ் அம்பானி, மும்பையில் புதிதாக வீடு கட்டி இருக்கிறார். முதல் மாத மின் கட்டணமே

நானே கேள்வி... நானே பதில்!

70 லட்சம் . இத்தனைக்கும் இந்த வீட்டில் முகேஷ், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள்தான் வசிக் கின்றனர். நாடு எங்கும் மின் பற்றாக்குறை இருக்கிறது என்று புலம்புகிறோம். 'மின் சிக்கனம் தேவை இக்கணம்’ என்று ரைமிங் ஆக அறிவுறுத்தப்படுகிறோம். ஒரு தனி நபர், தன் குடும்பத்துக்கு அளவுக்கு அதிகமாக மின்சாரத்தை நுகர்வது குற்றம் ஆகாதா?''

பா.ஜெயவேல்,செங்கல்பட்டு.

''ஒருதலையாகக் காதலிப்பவர்கள்பற்றி..?''

''ரயிலுக்காகப் பஸ் நிலையத்தில் காத்திருப்பவர்கள்!''

- ஜி.கே.நிதி, வந்தவாசி.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism