Published:Updated:

இந்திய ராஜாவுக்கு செக்!

சார்லஸ், படம்: பொன்.காசிராஜன்

##~##

 விஸ்வநாதன் ஆனந்த், ஆறாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வெல்வாரா? 43 வயதான உலக சாம்பியன் ஆனந்த், 22 வயதுடைய மேக்னஸ் கார்ல்ஸனுடனான மோதலில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்துவருகிறார். வெளிநாடுகளில் வெற்றி கண்டவர், சொந்த மண்ணில் திணறுவதில் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்.

• ஹயாத் ரிஜென்சி ஹோட்டலின் 6-வது மாடியில் கார்ல்ஸனும், 10-வது மாடியில் ஆனந்தும் தங்கியிருக்கிறார்கள். ஆனந்தின் ஆட்களும், கார்ல்ஸனின் ஆட்களும் உளவுபார்க்க வந்துவிடக் கூடாது என்பதற்காக, இரண்டு தரப்புகளுமே தனித்தனியே பாதுகாப்பு ஆட்களை நிறுத்தியிருக்கின்றன.

•  இரண்டு போட்டிகளுக்கு நடுவே ஒரு நாள் ஓய்வு. அந்த நாட்களில் கார்ல்ஸன் மாமல்லபுரம் பறந்துவிடுகிறார். அங்கே பீச் வாலிபால், மசாஜ் என ரிலாக்ஸ் செய்துவிட்டு, அடுத்த நாள் போட்டிக்குத் தயாராகிறார்.

•  ஹயாத் ஹோட்டலின் அருகேதான் விஸ்வநாதன் ஆனந்தின் வீடு. எனவே, ஓய்வு நாட்களில் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். கார்ல்ஸனுடன் அவரது தந்தையும், மூன்று சகோதரிகளும் நார்வேயில் இருந்து வந்திருக்கிறார்கள். ஆனந்துக்கு அவரது மனைவி அருணாதான் மேனேஜர்.

•  நார்வேயில் இருந்து கார்ல்ஸனுடன் அவரது செஃப்பும் வந்திருக்கிறார். கார்ல்ஸனுக்கு எப்போதும் காரம் ஆகவே ஆகாது. பாஸ்தா, சால்மன்... என ஐரோப்பிய உணவுகள்தான் இங்கேயும். போட்டி தொடர்ந்து 20 நாட்கள் நடப்பதால், கார்ல்ஸனின் உடல்நிலை சீராக இருக்கவேண்டும் என்பதற்காக, ஸ்ட்ரிக்ட் டயட்.

இந்திய ராஜாவுக்கு செக்!

•  முன்னாள் உலக சாம்பியனும், கார்ல்ஸனின் ஆதரவாளருமான கேரி காஸ்ப்ரோவ், ஆனந்த் - கார்ல்ஸன் முட்டலைப் பார்க்க இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். 'ஆனந்திடம் திறமை குறைந்துவிட்டது. அவர் ஓய்வுபெற வேண்டும்’ என்று தொடர்ந்து ஆனந்தை விமர்சித்துவரும் கேஸ்பரோவை, 'பார்வையாளர் வரிசையில் முதல் இரண்டு வரிசைகளுக்குள் உட்காரவைக்கக் கூடாது’ என சொன்னது ஆனந்த் தரப்பு. இந்தத் தகவலை செஸ்

இந்திய ராஜாவுக்கு செக்!

அமைப்பாளர்கள் கசியவிட, காஸ்பரோவ் பற்றி ஆனந்திடம் கேள்விகளால் குடைந்துவிட்டது மீடியா. இதனால் ஆனந்த் செம அப்செட்.

•  இருவருமே எதிராளியின் திட்டங்களை முழுவதுமாக அறிந்துகொள்ள, நிதானமான ஆட்டம் ஆடினார்கள். இதனால் முதல் நான்கு போட்டிகள் டிரா. ஆனால், அதன் பிறகு அதிரடி ஆட்டம் ஆட ஆரம்பித்திருக்கிறார் கார்ல்ஸன்.

•  ஐந்தாவது போட்டியில் வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தும் தோல்வியைத் தழுவினார் ஆனந்த். இது கார்ல்ஸனுக்குக் கிடைத்த முதல் வெற்றி. 'தவறான காய் நகர்த்தல்களால் ஆனந்தைப் பதற்றமடைய வைத்து, அவரிடம் இருந்து வெற்றியைப் பறிக்க வேண்டும் என்பதுதான் கார்ல்ஸனின் ப்ளான்.