Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

##~##

விகடன் வாசகர்களுக்கு 'பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜனின் அன்பு வணக்கங்கள்...

நீரும் நீர் சார்ந்தோ, காடும் காடு சார்ந்தோ, மலையும் மலை சார்ந்தோ... நீங்க எங்கே வாழ்ந்தாலும், இயற்கையும் இயற்கை சார்ந்துதான் இருக்கணும். ரேடார் தொழில்நுட்பத்தை மனிதன் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, அந்த நுட்பத்தை முதலில் பயன்படுத்தியவை வெளவால்கள். ஹெலிகாப்டர் பறக்கும் தொழில்நுட்பமும் தும்பிகள் பறக்கும் விதமும் ஒன்று. இப்படி இயற்கையைப் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களைத் தெரிஞ்சுக்கலாமா?

ஜப்பானின் 'மாசனோபு ஃபுகோக்கா’தான் உலகின் தலைசிறந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி. அந்த ஒரு நபரின் எண்ணங்கள் எத்தனை ஏக்கர் காடுகளையும் நிலங்களையும் காப்பாத்தி இருக்கு தெரியுமா? அவரைப் பற்றி செழுமையான தகவல்களைச் சொல்றேன்.

மத்திய உணவுக்கிடங்கில், டன் கணக்கில் உணவுத் தானியங்களை எலிகள் தின்றுக் கொழுக்கின்றன. இந்த அவலத்தின் பின்னணி அரசியலையும் ஆபத்தையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க!

மொரிஷியஸ் நாட்டு கல்வேரியா மேஜர் மர இனப்பெருக்கத்தில், முக்கியப் பங்கு வகித்த 'டோடோ’ பறவையை, அங்கு இருந்த டச்சுக்காரர்கள் கொன்று, நாய்களுக்கும் பூனைகளுக்கும் உணவாக்கினார்கள். ஆனால், அந்த டோடோவை உயிரியல் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அப்படியென்ன விசேஷம் டோடோவிடம்?

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

'நீரின்றி அமையாது உலகு’னு சொன்ன வள்ளுவருக்கு நீர்நிலையை அழித்துதான், சென்னையில் வள்ளுவர் கோட்டம் கட்டியிருக்கிறோம். தமிழகத்தில் குண்டு பல்பு பயன்பாட்டுக்கு தடை விதிச்சாலே, 2,000 மெகாவாட் மின்சாரத்தைச் சேமிக்க முடியும்.

உணவு என்பது பசிக்கும் ருசிக்கும் மட்டுமல்ல, மரபணுக்களோடும் தொடர்புடையது. 25 வருடங்களுக்கு முன்னால், நூடுல்ஸ் ஒரு வெளிநாட்டு உணவு. ஆனால், இப்போது அதுதான் நம் குழந்தைகளின் காலை உணவு. எந்த அளவுக்கு இயற்கையைத் துச்சமா மிதிக்கிறோம் தெரியுமா?

21.11.13 முதல் 27.11.13 வரை 044-66802911* என்ற எண்ணுக்கு அழைப்பு விடுங்கள். நம் அன்றாட வாழ்வுக்கு அவசியமான பல விஷயங்களை, இயற்கையுடனான நமது பிணைப்பை, காரணங்களோடு விளக்குகிறேன்.

அன்புடன்,

சுந்தர்ராஜன்.

*அழைப்பு சாதாரண கட்டணம்