Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

விகடன் வாசகர்களுக்கு எழுத்தாளர் ச.தமிழ்செல்வனின் வந்தனங்கள்...

மேஜர் ஜெயபால் சிங், பிரிட்டிஷ் விமானப் படையில் தலைமை வகித்தவர். இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் அதிலிருந்து விலகி, இந்திய விடுதலைக்காகப் போராடினார். அவரைக் கைதுசெய்த ஆங்கில அரசாங்கம், 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டபோது, 'நாடு அழைத்தது, போனேன்’ என்றார். இப்போது நம் பக்கத்து வீட்டு நண்பர்கள் ஆரம்பித்து தேசம் வரை உதவிக்காக நம்மை அழைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், அந்த மொழிதான் நமக்குப் புரிவதில்லை. அதை அறிவோமா?

நாம் எல்லோருமே அன்பு நிறைந்தவர்கள். ஆனால், ஏனோ அதைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள தயங்குகிறோம்; தாமதிக்கிறோம். ஏன் இப்படி?

'ஒரே வீட்டில் வாழ்கிறோம். ஆனால், ஒவ்வொரு வீடாக வாழ்கிறோம்’ இதுதான் இன்றைய குடும்பங்களின் நிலை. 'சாப்டாச்சா?’, 'சாப்பாடு ரெடியா?’, 'போயிட்டு வர்றேன்’... பல வீடுகளில் அதிகபட்ச உரையாடல்கள் இவ்வளவுதான். இதை எப்படி மாற்றிக்கொள்ளலாம்? பேசலாம் நண்பர்களே...

'எனது’ என்ற வார்த்தைதான் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். அந்த வார்த்தை அவசியம்தானா? அதை எப்படி விரட்டுவது?

ஒருகாலத்தில் தாய்வழி சமூகமாக இருந்து, பெண்ணை தெய்வமாக வணங்கியவர்கள் நாம். இன்றைக்கு அவள் வாழத் தகுதி இல்லாத நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறோம். அந்த வருத்தங்களைப் பகிர்ந்துகொள்ளவா?

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

பயிர்கள் செழித்து வளர மட்டுமல்ல, உறவுகள் செழித்து வளரவும் இடைவெளி தேவை. அது எப்படிப்பட்ட இடைவெளி?

28.11.13 முதல் 4.12.13 வரை 044-66802911* என்ற எண்ணுக்கு அழையுங்கள். கவிதையான வாழ்க்கையை, தினம் ஒரு கவிதையாக வாசிக்கக் கற்றுக்கொள்வோம்.

அன்புடன்,

ச.தமிழ்செல்வன்.

*அழைப்பு சாதாரண கட்டணம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு