Published:Updated:

“எங்க அப்பா ராஜாராம் பேசுறேன்!”

எஸ்.கலீல்ராஜா, டி.அருள் எழிலன், படங்கள்: கே.ராஜசேகரன்

##~##

வேலு சரவணனை, 'வேலு மாமா... வேலு மாமா’ என்று கொஞ்சிக் கொஞ்சி அழைக்கிறார்கள் குழந்தைகள். குழந்தை நாடகக் கலைஞர் வேலு சரவணன், குட்டிப் பசங்களுக்காக அவ்வப்போது சொல்லும் நீதிக் கதைகளும் ஜோக்குகளும் இங்கே கொஞ்சம்...

பென்சில் போல் நில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பென்சிலை உருவாக்குபவன் ஒரு புத்தம் புது பென்சிலைத் தயார்செய்து அதனிடம் பேச ஆரம்பித்தான். ''நீ இந்த உலகத்தின் சிறந்த பென்சிலாக இருப்பதற்கு ஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால் போதும்!'' என்றான். பென்சில் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டது. ''நீ எவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்யக்கூடிய தகுதியோடு இருந்தாலும், யாராவது ஒருவரின் கையில் உன்னை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். இரண்டாவது, உன்னைச் செதுக்கும்போது உனக்கு வலிக்கும். அதைத் தாங்கிக்கொண்டால்தான், உன்னால் சிறந்த படைப்பைக் கொடுக்க முடியும். மூன்றாவது, நீ செய்யும் தவறை நீயே திருத்திக்கொள்ளப் பழக வேண்டும். நான்காவது, உனக்குள் விஷயம் இருக்கும்வரைதான் நீ பயன்படுவாய். அது தீர்ந்துவிட்டால், தூக்கி எறிந்துவிடுவார்கள். ஐந்தாவது, காகிதமோ, தூரிகையோ எதில் நீ பதிந்தாலும், அங்கே உன் அடையாளத்தை அழுத்தமாகப் பதிக்க வேண்டும். நாம் ஓர் இடத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம் பாதிப்பு அங்கே இருக்க வேண்டும்!'' என்றான். பென்சில் தலையாட்டியது. அதை அழகான பெட்டிக்குள் வைத்து கடைக்கு அனுப்பினான். இது பென்சிலுக்கு மட்டுமல்ல, நமக்கும் பொருந்தும்!

“எங்க அப்பா ராஜாராம் பேசுறேன்!”

எதிரியின் வியூகம் உணர்!

ஓர் எலியைப் பிடிக்க பாம்பு துரத்தி வந்தது. பாம்பிடம் இருந்து தப்பிக்க எலி ஒரு கனத்த அட்டைப் பெட்டிக்குள் நுழைய, பாம்பும் பின்தொடர்ந்து வந்தது. அந்த அதிர்வில் அட்டைப் பெட்டையின் மூடி மூடிக்கொண்டது. இப்போது எலியும் பாம்பும் மாட்டிக்கொண்டன. 'நான் தப்பிக்க ஓர் ஓட்டை போட்டுக் கொடுத்தால், உன்னைச் சாப்பிடாமல் விட்டுவிடுகிறேன்’ என்று எலியுடன் ஓர் உடன்படிக்கைக்கு வந்தது பாம்பு. எலியும் தன் பற்களால் கடித்து பெரியதாக ஓட்டை போட்டுக் கொடுக்க, பாம்பு எலியைச் சாப்பிட்டுவிட்டு ஓட்டை வழியாகத் தப்பிச் சென்றுவிட்டது.

நீதி: எதிரியோடு இருக்கும்போது எப்போதும் உஷாராக இருக்க வேண்டும். அது, புத்திசாலி எலியாக இருந்தால், தான் தப்பிக்கும் அளவுக்கு ஓட்டை போட்டதும் வெளியே வந்திருக்கும்!

தொலைபேசியில்...

''மேடம் என் மகன் ராமுக்கு காய்ச்சல். இன்னைக்கு ஸ்கூல் வர மாட்டான்!''

''நீங்க யாரு பேசுறது?''

''நானா... எங்க அப்பா ராஜாராம் பேசுறேன்!''

பயாலஜி லேப்பில்

டீச்சர்: பறவையின் காலை மட்டும் பார்த்து பேரைச் சொல்லு.

மாணவன் : அதெப்படி முடியும்?

டீச்சர்: அப்போ நீ ஃபெயில்.. உன் பேர் என்ன?

மாணவன்: என் காலைப் பார்த்துக் கண்டுபிடிங்க.

“எங்க அப்பா ராஜாராம் பேசுறேன்!”
“எங்க அப்பா ராஜாராம் பேசுறேன்!”

டீச்சர்: இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் எதில் இருந்து எதுவரை ஆட்சி செய்தார்கள்?

மாணவன்: 50-ல் இருந்து 78-ம் பக்கம் வரை டீச்சர்!

அப்பா: எக்ஸாம் எப்படி எழுதியிருக்க?

மகன்: எனக்குத் தெரியாத கேள்வியை அவங்க கேட்டிருந்தாங்க.. அவங்களுக்குத்தெரியாத பதிலை நான் எழுதி வெச்சுட்டேன்!

மாணவன்: செய்யாத ஒரு விஷயத்துக்கு எனக்குத் தண்டனை கொடுப்பீங்களா மிஸ்?

டீச்சர்: சேச்சே... அது எப்படிக் கொடுக்க முடியும்?

மாணவன்: தேங்க்ஸ் மிஸ்.. நான் நீங்க கொடுத்த ஹோம்வொர்க்கைச் செய்யலை!

மகன்: அப்பா உங்களுக்கு பவர் கட் நேரத்துல எழுதத் தெரியுமா?

அப்பா: கண் தெரியாதப்பக்கூட கவிதை எழுதுவேன்டா!

மகன்: கவிதைலாம் வேண்டாம். ரேங்க் கார்டுல கையெழுத்துப் போட்டாப் போதும்!

அப்பா: ஏன் வரலாறு பாடத்துல மட்டும் மார்க் கம்மியா வாங்கியிருக்கே?

மகன்: அது என் தப்பு இல்லை. நான் பொறக்குறதுக்கு முன்னாடி நடந்ததை எல்லாம் கேட்டா, எனக்கு எப்படிப்பா தெரியும்?