ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!
விகடன் வாசகர்களுக்கு கு.ஞானசம்பந்தனின் அன்பு வணக்கங்கள்...
கோடைக்காலம், குளிர்காலம், மழைக்காலம் எல்லாம் நம் ஊரில் தனித்தனியாகத்தானே வரும். ஆனால், ஆஸ்திரேலியாவில் இவை எல்லாம் ஒரே நாளில் வருகின்றன. மெல்பர்ன் நகரில் காலையில் வெயில் அடிக்கும்; மதியம் மழை பெய்யும்; இரவில் குளிர் பின்னி எடுக்கும். அங்கு சென்று மாட்டிக்கொண்ட அனுபவத்தை நகைச்சுவையோடு சொல்லவா?
'கங்காரு’ என்றால் ஆஸ்திரேலியாவின் 'அபோரிஜீனிஸ்’ என்ற பழங்குடி மொழியில் 'எனக்குத் தெரியாது’ என்று அர்த்தம். அந்தப் பெயர் எப்படி கங்காருக்கு வந்தது தெரியுமா? எனக்குத் தெரியும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க காரணமானவர், உலகத் தமிழ் மாநாடுகளை ஒருங்கிணைப்பதிலும் பெரும்பங்காற்றியவர் தனிநாயகம் அடிகளார். அவரின் நூற்றாண்டைத்தான் சமீபத்தில் கொண்டாடினோம். அவரைப் பற்றி இன்னும் நிறைய சுவராஸ்யத் தகவல்கள் சொல்லவா?

வெளிநாட்டு விமான நிலையம். ஃபாரினர்ஸ் இருவரிடையே சண்டை. ஒருத்தர் திட்டிக்கொண்டே இருக்க, இன்னொருத்தர் அமைதியாக இருந்தார். உடன் இருந்தவர் திட்டு வாங்குபவரைப் பார்த்து 'என்ன சார், இப்படித் திட்டுறாரு. சும்மாவே இருக்கீங்களே’ என்று கேட்க, அதற்குத் திட்டு வாங்கியவர் அமைதியாகச் சொன்னார்... 'பேசாம இருங்க சார், அந்த ஆளு என்னைத் திட்டிக்கிட்டே ஜப்பானுக்குப் போறான். அவன் லக்கேஜ் லண்டன் போகுது. ஜப்பான் போய் டவுசரோடதான் திரிவான்.’ இதைத்தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள் 'பதறாதக் காரியம் சிதறாது!’ சிதறாமல் இருக்கும் சூட்சமம் சொல்லவா?
5.12.13 முதல் 11.12.13 வரை 044-66802911* என்ற எண்ணில் அழையுங்கள். 'காமெடி கலாட்டா’, 'வாழ்க்கைக்கான கருத்து’ என்று தினம் ஒரு செய்தி கேட்கலாம்.
அன்புடன்
கு.ஞானசம்பந்தன்.
*அழைப்பு சாதாரண கட்டணம்படம்: பா.காளிமுத்து