Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:
##~##

விகடன் வாசகர்களுக்கு பாண்டியராஜனின் அன்பான வணக்கங்கள்...

'28 வருஷமா சினிமால இருக்கீங்களே, என்ன கத்துக்கிட்டீங்க?’னு என்னைக் கேட்டார் ஒரு நண்பர். 'இன்னமும் கத்துக்கிட்டேதான் இருக்கேன்’னு சொன்னேன். சினிமானு இல்லை... எந்தத் துறையிலும் தினம் தினம் புதுப்புது விஷயங்களைக் கத்துக்கிட்டே இருக்கணும். கற்றுக்கொள்தலின் அவசியம் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமாவுக்கு நீங்க வர ஆசைப்பட்டா, முதல் விஷயம் 'ஏமாறத் தயாரா இருங்க’னு சொல்வேன். ஏன்னா, இது ஆபத்தை நோக்கிப் போற சாகசப் பயணம். அதே சமயம் நம்ம இலக்குக்குப் போய்ச் சேர்ற வரை நாம ஓயக் கூடாது. 'சினிமாதான் என் வாழ்க்கை’னு லட்சியத்தோடு இருக்கீங்களா? உங்களுக்குச் சொல்ல என்கிட்ட பல விஷயங்கள் இருக்கு.

எங்க வீட்ல எல்லாரும் டிரைவர், மெக்கானிக்னு காக்கிச்சட்டையோடு வாழ்ந்தவங்க. அதுல இருந்து தப்பிச்சு சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான்தான். ஆனா, ஆசைப்பட்ட சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி 21 வேலைகள் பார்த்திருக்கேன். தேங்காய், எவர்சில்வர் பாத்திரம், புடவைனு ஏகப்பட்ட சரக்கு வித்திருக்கேன். அந்த காமெடிக் கச்சேரியைக் கேட்கிறீங்களா?

நண்பர்கள் இல்லைன்னா, வாழ்க்கையில் பலருக்கு வெற்றி தேவதையின் ஆசீர்வாதம் கிடைக்காது. என் நண்பர்கள் இல்லைன்னா, நான் இன்னும் கோடம்பாக்கம் வீதிகளில் வாய்ப்பு தேடி அலைஞ்சிட்டுத்தான் இருந்திருப்பேன். என் மகன்களைப் பத்தி எனக்கே தெரியாத பல விஷயங்கள் என் நண்பன் செந்திலுக்குத் தெரியும். நட்பின் அருமையை, அதைப் பராமரிக்கிற அழகைப் பற்றி கொஞ்சம் பேசலாமா?

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

சினிமா, எனக்கு ஏகப்பட்ட வரம் கொடுத்திருக்கு. எம்.ஜி.ஆர்-கிட்ட வாங்கிய முத்தம் அதுல முக்கியமான ஒரு வரம். இன்னும் அந்த முத்தத்தின் ஈரம்கூட காயலை. இப்படி இன்னும் பல அற்புத வரங்களைப் பற்றி பேசுறேன்.

12.12.13-ல் இருந்து 18.12.13 வரை 044-66802911* என்ற எண்ணில் அழையுங்கள். சினிமா, வாழ்க்கை, நண்பர்கள், கனவுகள்னு பகிர்ந்துக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. தினம் ஓர் ஆச்சர்ய அனுபவம் சொல்றேன்.

அன்புடன்,

பாண்டியராஜன்.

*அழைப்பு சாதாரண கட்டணம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism