Published:Updated:

அ.தி.மு.க-வின் புதிய பிரிவு!

நானே கேள்வி... நானே பதில்!

அ.தி.மு.க-வின் புதிய பிரிவு!

நானே கேள்வி... நானே பதில்!

Published:Updated:
##~##

'' 'விஜய்’ படத்துக்கு 'ஜில்லா’ என்று பெயர் வைத்திருக்கிறார்களே?''

'' 'மாவட்டம்’ என்று தூய தமிழில் வைத்தால் மட்டும், கேளிக்கை வரிவிலக்கு கிடைத்துவிடுமா என்ன?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஆர்.கே.சுந்தரம், வடபழநி.

''குழந்தைகளின் உலகம் எப்படிப்பட்டது?''

''அழகானது; எளிமையானது; சுவாரஸ்யமானது. சமயத்தில் அழகாக அதிரவைப்பது. என் தோழியின் குட்டிப்பையன் ஓடிவந்து அவளிடம், 'அம்மா, நான் babies எப்படி Make  பண்றதுனு தெரிஞ்சுக்கிட்டேன்’ என்றான். நாங்கள் சற்று ஷாக் ஆனோம். அவனே தொடர்ந்தான்... 'Baby-யில் இருக்கற 'y’யை எடுத்துட்டு, 'ies’ போட்டா babies  வருமே... ஸ்கூல்ல சொன்னாங்க’ என்றான். ரிலாக்ஸ் ஆனோம்!''

- கே.சரஸ்வதி, ஈரோடு.

அ.தி.மு.க-வின் புதிய பிரிவு!

''பெரிய இடத்து வழக்குகளில் தீர்ப்புகளைப் பார்க்கையில், நீதி மன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையும் போல தெரிகிறதே?''

''ஒரு பேட்டியில் கலைஞர் மு.கருணாநிதி சொன்னது.

'நான் நீதிமன்றங்களைப் பெரிதும் மதிக்கிறேன். நீதிபதிகளுக்கு மேலாக’

மக்களிடம் நம்பிக்கை குறைவது நீதிமன்றத்தின் மீது அல்ல; நீதிபதிகளின் மீதே!''

- சுரா.மாணிக்கம், கந்தர்வகோட்டை.

''சட்டம் தன் கடமையைச் செய்கிறதா?''

''செய்கிறது. நம்முடைய முறை வரும்போது!''

- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

 ''வாழ்க்கையைப் பற்றி நாலு பேர் நாலு விதமாகச் சொல்கிறார்களே?''

''கவிஞர் அப்துல் ரகுமான் புதுவிதமாகச் சொல்கிறார், 'வாழ்க்கை என்பது துப்பறியும் நாவல். ஆனால், அதன் கடைசிப் பக்கம் காணாமல் போயிருக்கும்.’ ''

- தாமு, தஞ்சாவூர்.

அ.தி.மு.க-வின் புதிய பிரிவு!

''தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் செய்த பகுத்தறிவுப் புரட்சி என்ன?''

''இல்லங்களில் நடைபெறும் சுபவிழாக்களின் போது ஏற்படும் மின்தடைகளை, 'அபசகுனம்’ என நினைத்ததை மக்கள் மனதிலிருந்து தகர்த்து எறிந்ததே!''

- எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.

''அ.தி.மு.க-வில் புதிதாக உருவாக்கப்பட வேண்டிய பிரிவு எது?''

'இ.ப.செ’தான்... இலை பரப்புச் செயலாளர்!

- புதூர்பாலா, நாமக்கல்

ல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம் அல்லது செல்போனில் QA (space)  விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எண்ணுக்கு  எஸ்.எம்.எஸ். செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism