Published:Updated:

“உலகத்தை ஃபோகஸ் செய்யுங்கள்!”

சார்லஸ், படங்கள்: ஒச்சப்பன்

##~##

 துரையை, அதன் மனிதர்களை அத்தனை அழகாக, இயல்பாகப் படம்பிடிக்கிறார் 'ஒச்சப்பன்’ என்ற புனைப்பெயரில் இருள் - ஒளிக் கவிதைகள் எழுதும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஹெங்க் ஜேக்கப். 64 வயதான ஹெங்க், 1987 முதல் ஒவ்வொரு வருடமும் தமிழகத்துக்கு, குறிப்பாக மதுரைக்கு வந்து செல்கிறார்.

''ஹெங்க், எப்படி ஒச்சப்பன் ஆனார்?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''மதுரையில் ரிக்ஷா ஓட்டிக்கொண்டிருந்த 'ஒச்சப்பன்’ என்பவர்தான், மதுரையின் கலாசாரத்தையும் அதன் அழகியலையும் எனக்குக் காண்பித்தார். அதனால், அவர் பெயரை என் பெயரோடு சேர்த்துக்

“உலகத்தை ஃபோகஸ் செய்யுங்கள்!”

கொண்டேன்!''

''குறிப்பாக, மதுரை மீது ஏன் இத்தனை ஆர்வம்?''

''நான் பெல்ஜியத்தில் கட்டடக் கலைப் படித்துக் கொண்டிருந்தபோது, படிப்பு விஷயமாக முதல்முறையாக இந்தியாவுக்கு வந்தேன். வட இந்தியாவில் கட்டடங்களைப் பார்த்துவிட்டு மதுரைக்கு வந்தேன். அந்த நகரத்தின் பண்பாடு, உபசரிப்பு, அவர்களின் பண்டிகைக் கால கொண்டாட்டங்கள் எல்லாமே என்னை உற்சாகப்படுத்தின. அந்த ஒவ்வொரு கொண்டாட்டமும் வரலாறோடு பின்னிப் பிணைந்திருந்து என்னை ஆச்சரியப்படுத்தியது. அதோடு தமிழர்களின் அன்பும் விருந்தோம்பலும், மதுரையை எனது இன்னொரு ஹோம்-டவுன் ஆக்கிவிட்டது!''

“உலகத்தை ஃபோகஸ் செய்யுங்கள்!”
“உலகத்தை ஃபோகஸ் செய்யுங்கள்!”
“உலகத்தை ஃபோகஸ் செய்யுங்கள்!”

''சுமார் 25 வருடங்களாக மதுரைக்கு வந்து செல்கிறீர்கள்... இங்கு உங்களை அதிகம் ஈர்த்தது எது?''

''மதுரை அருகே, மாங்குளம் அருகில் 'பறைமடையாம்பட்டி’ என்ற கிராமம்தான் என்னை மீண்டும் மீண்டும் மதுரைக்கு இழுக்கிறது. என்னைப் பொறுத்தவரை பறைமடையாம்பட்டியை நான் 'சொர்க்கம்’ என்பேன். நவீன வாழ்க்கை முறை, விஞ்ஞான வளர்ச்சி என எந்த பொல்யூஷனும் இல்லாமல், ஓர் ஓவியம் போல இருக்கிறது அந்தக் கிராமம். அந்த ஊர் மக்களும், தமிழ்க் கலாசார அடையாளங்களை அழிந்துவிடாமல் பராமரித்து வருகிறார்கள். அவர்களின் அந்த அக்கறையைப் பதிவுசெய்வது மட்டுமே என் கடமையாகக்கொண்டு செயல்படுகிறேன். நான் எடுக்கும் படங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்குச் சொந்தமானது. அதனால் இதுவரை என் படங்கள் எதையும் விருதுகளுக்கு அனுப்பும் பழக்கமோ, பணத்துக்கு விற்கும் பழக்கமோ இல்லை!''

“உலகத்தை ஃபோகஸ் செய்யுங்கள்!”
“உலகத்தை ஃபோகஸ் செய்யுங்கள்!”

''இப்போது செல்போன் வைத்திருக்கும் எல்லோருமே புகைப்படக்காரர்கள்தான். அப்படியான வளரும் புகைப்படக் கலைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?''

''போட்டோகிராஃபி என்பது உரையாடல் போன்றது. புகைப்படத்துக்கும் மொழி உண்டு. நீங்கள் எடுக்கும் படத்துக்கு எந்த விளக்கமும் தேவைப்படக் கூடாது. அதனால் உங்களை அல்ல, உலகத்தை ஃபோகஸ் செய்யுங்கள். படம் எடுப்பதற்கு முன்பு அங்குள்ள சூழலைப் புரிந்துகொள்ளுங்கள். அது உங்கள் படத்தில் பிரதிபலிக்க வேண்டும். அப்படிப் பிரதிபலித்தால், பிறகு நீங்கள் படத்தைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இருக்காது. உங்கள் படங்களே நூற்றாண்டுகள் தாண்டியும் பேசும்!''