Published:Updated:

சரிகமபதநி டைரி 2010

சரிகமபதநி டைரி 2010

சரிகமபதநி டைரி 2010

சரிகமபதநி டைரி 2010

Published:Updated:
##~##
மி
யூஸிக் அகாடமியின் கீழ்த் தளத்திலும், மாடியிலும் தாழ்வாரம் (Foyer) அடையாளம் தெரியா மல் மாறிவிட்டது. வி.ஐ.பி. நுழைவாயில், வெளியேறும் வாசல் எல்லாவற்றிலும் மாற்றம். டிக்கெட் கவுன்ட்டர், வெளியே வேறு மூலைக்கு இடம் பெயர்ந்துவிட்டது. திரும்பிய பக்கம் எல்லாம் கண்ணாடிக் கதவுகள். அடுத்த டிசம்பருக்குள் மினி ஹாலும் மினுமினுக்கப்போகிறது! ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரிகமபதநி டைரி 2010
1 கோடி டொனேஷன் கொடுத்து... ம்... இப்போதெல்லாம் ஏதோ ஏலம் எடுப்பது மாதிரி சபாக்களுக்கு வரவுத் தொகை உயர்ந்தவண்ணம் இருக்கிறது!

இங்கு இரவு 7 to 9.30 பாடிய மந்தா சுதாராணி, விஜயவாடாவைச் சேர்ந்தவர். ரொம்ப இனிமையாகவும் இல்லாமல், கரகரப்பாகவும் இல்லாமல் ஒரு மாதிரி நடுவாந்திரமான குரல். சுத்தமான, சம்பிரதாயமான பாடாந்திரம்.

நாடகப்ரியா ராகம், கம்பி மீது நடப்பது மாதிரி. சரியான ஒத்திகை பார்த்துக்கொண்டு வராவிட்டால், தோடி உள்ளே நுழைந்து, சமயம் பார்த்துக் காலை வாரிவிடும். சுதாராணி ஒரு மாதிரி சமாளித்துவிட, வயலின் வாசித்த பத்மா சங்கர் செக்யூரிட்டி போட்டு தோடியை விரட்டிவிட்டு, நாடகப்ரியாவை மட்டும் வாசித்தார். மோகனத்தில் 'மோகன ராமா’வும் வஸந்த பைரவியில் 'ரமா ரமண’னும் சுதாராணி ஒவ்வொன்றாக முடிக்க, வந்திருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிநடப்பு செய்துகொண்டு இருந்தார்கள்!

சரிகமபதநி டைரி 2010

'இப்படித்தான் பாடுவேன்’ என்று அடாவடி செய்ய வேண்டாம். ஆனால், தடாலடியாக எதுவும் செய்யாவிட்டால், எங்கள் ஊரில் எந்த ராணியும் பட்டத்து ராணியாக வர முடியாது!

சரிகமபதநி டைரி 2010

கல் நேர ஸ்லாட் கிடைக்கப் பெறும் ஜூனியர் பாடகர்கள் முதலில், பிரபலமான ஆடியன்ஸுக்குப் பிடித்தமான ராகங்களையும், பாடல்களையும் பாடி ரசிகர்களைக் (கொஞ்சம்போல இருந்தாலும்!)கவர்ந்து இழுக்க வேண்டும். தோடி, கல்யாணி,

ஸ்ரீரஞ்சனி மாதிரியான, அதிகம் புழக்கத்தில் இருக்கும் ராகங்களைப் பாடிப் பாடி, பக்குவப்பட்டு, கோசலத்துக்குள்ளும் அயோத்திக்குள்ளும் நுழையலாம்! முளைத்து மூன்று இலை விடுவதற்குள் புதிரான ராகத்தைப் பாடி, பின்னர் ரசிகர்களை மக்குப் பிளாஸ்திரிகளாக நினைத்து, அந்த ராகத்தின் பெயரை மைக்கில் அறிவிக்க ஆசைப்படுவானேன்?

பிரம்ம கான சபாவில் இளைஞர் ஸ்வர்ண ரேதஸ், மோகனத்தையும், 'மோகன ராமா’ பாடலையும் ரொம்ப சுமாராகப் பாடிக்கொண்டு இருந்தபோது, மனதில் ஓடிய எண்ண அலைகள் மேலே!

பாட்டில் மனம் லயிக்கச் செய்யாவிட்டால் அது இப்படித்தான் இஷ்டத்துக்கு குரங்குப் பெடல் அடித்துக்கொண்டு இருக்கும்! (ரேதஸ் அன்று கோசலம் பாடி மைக்கில் அறிவிக்கவும் செய்தார்!)

நுங்கம்பாக்கம் கல்ச்சுரல் அகாடமியில் பகல் ஒன்றரை மணிக்கு புல்லாங்குழல் கச்சேரியை ஆரம்பிக்க வேண்டும். 1.29-க்கு ஆட்டோவில் அப்பா, அம்மாவுடன் வந்திறங்கி, மேடை நோக்கி ஓடிய மாஸ்டர் விஸ்வேஷ் வருக்கு வயது 14.

சீஸனில், பெரிய ஹாலில் வாய்ப்பு கிடைத்தால், சம்பந்தப்பட்ட பெற்றோர் அதை ஜோராகப் பயன் படுத்திக்கொண்டு, கூட்டம் அழைத்து வர முனைய வேண்டும். விஸ்வேஷ்வரின் பெற்றோர், வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பதுபோல் தங்கள் உறவினர்களுக்கு நோட்டீஸ் வைத்திருந்தால், விஸ்வேஷ்வரின் வகுப்பு மாணவர்களை ஒரு மினி பஸ் வைத்து அழைத்து வந்திருந்தால்... அம்மாம் பெரிய ஹாலில் வெறும் 12 பேருக்கு அவன் வாசிக்க நேரிட்டு இருக்காது!

அபஸ்வரம் ராம்ஜியின் இசை மழலைக் குழுவைச் சேர்ந்த விஸ்வேஷ்வரின் வாசிப்பில் பிசிறு இல்லை. அபஸ்வரம் இல்லை. இடது தோள்பட்டையை அசைத்து அசைத்து வாசிப்பதிலும், பக்கவாத்தியத்தைக் கைதட்டிப் பாராட்டுவதிலும் சிறுவனின் நம்பிக்கை வெளிப்படுகிறது. தேர்ந்த புல்லாங்குழல் வித்வான் ஒருவரிடம் பயிற்சி பெற்றால், விஸ்வேஷ்வருக்கு எதிர்காலம் பளிச்!

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் பாரதிய வித்யா பவன் மினி ஹாலில் பாடிய ஈரோடு அனந்தராமன், இசை மழலையின் இன்னொரு தயாரிப்பு. சென்ற வாரம், பால கலாசாகரம் டிரஸ்ட், தபால் வழியில் பி.காம். படித்துக்கொண்டு, சி.ஏ. நுழைவுத் தேர்வும் எழுதியிருக்கும் இந்த டீன் ஏஜ் இளைஞருக்கு 'பால கலா ரத்னா’ விருது கொடுத்தது. விருதுக்கு என்ன அவசரம் என்றெல்லாம் கேட்கக் கூடாது. குழந்தையைத் தொட்டிலில் இட்டுப் பெயர் வைக்கும்போதே கிளு கிளுப்பையுடன் ஒரு விருதையும் கையில் திணித்துவிடும் கலியுகம் இது!

வயதுக்கு மீறிய கம்பீரம் இருக்கிறது அனந்தராமனின் குரலில். பூர்வி கல்யாணியிலும் சரி, தோடியிலும் சரி, பிடிகள் பெரிய மனுஷத்தனத் துடன் வந்து விழுந்தன. ஒரே குறை, சில இடங்களில் வார்த்தைகள் இவரிடம் இருந்து தெளிவாக வந்து விழுவது இல்லை. பல் தேய்த்துக் கொண்டு இருக்கும்போது பாடுவது போல் ஒருவித கொழகொழ. தவிர்க்க ஆவன செய்யவும்.  

சரிகமபதநி டைரி 2010

இந்த ஈரோடு பாகவதருக்கு ஆனாலும் ஒல்லிப்பிச்சான் உடம்பு. ஊட்டச் சத்து தேவை. போகப்போக டிசம்பரிலேயே நிறையக் கச்சேரிகள் செய்ய வேண்டி வரும். அதற்குத் தேவை நிறைய தம்!

மிருதங்க வித்வான் காரைக்குடி மணியின் சுருதி லய கேந்திரா, இசை விழாவை இரண்டு மாதம் நடத்தி, 200 கச்சேரிகள் ஏற்பாடு செய்து, தலையைப் பிய்த்துக்கொள்வது இல்லை. வீனஸ் காலனி, ஆஸ்திக சமாஜத்தில் இரண்டு நாட்கள். மூன்று கச்சேரிகள். விழா ஓவர்!

குட்டி வாட்டர் பாட்டிலில் - பேகடா. நுனி இலையின் ஓரத்தில் ஒரு சொட்டு பால் பாயசம் - ஸ்ரீரஞ்சனி. சலஃபன் பேப்பரில் சுற்றிவைக்கப்பட்ட பாதாம் அல்வா - பந்துவராளி. செக்கச் செவேலென்ற ஜாங்கிரி - தோடி! காயத்ரி வெங்கட்ராகவன், தன் கச்சேரி மெனுவில் அடுத்தடுத்து இந்த நான்கு ராகங்களை வழங்கி, இனிப்பான குரலில் களிப்பூட்டினார்.

தோடியை அத்தனை சீக்கிரத்தில் யாரும் கெடுத்து நாசப்படுத்திவிட முடியாது! அதுவும் காயத்ரி மாதிரி வலுவான அஸ்திவாரம் அமையப் பெற்றவர்கள் தோடியைக் கையாளும்போது, 'இதோ, நான் இருக்கேன்... மேடம், என்னை மறந்துடாதீங்க’ என்று சங்கதிகள் அடுத்தடுத்து அணிவகுத்து வந்து அட்டென்டன்ஸ் கொடுக்கும். ஆஸ்திக சமாஜத்தில் கொடுத்தன!

சரிகமபதநி டைரி 2010

ஆலாபனை அளவுக்குக் கீர்த்தனை, நிரவல், ஸ்வரங்களில் அன்றைய தினம் காயத்ரியிடம் நிதானம் இல்லை. ஏதோ, நோயாளியை ஸ்ட்ரெக்ச்சரில் வைத்து ஐ.சி.யு-வுக்குத் தள்ளிக்கொண்டு போவதுபோல் ஒருவித அவசரமும் பதற்றமும்!

சென்ற வருடம் வரையில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் வாசலில் நின்று, கலைஞர்களையும் மற்றவர்களையும் இன்முகத்துடன் வரவேற்றுக்கொண்டு இருந்த அதன் செயலர் கே.எஸ்.வெங்கட்ராமன், இந்த சீஸனில் அதே வாசலில் பூமாலையுடன் புகைப்படமாக. கடந்த 36 வருடங்களாக செயலாளராக இருந்து, மயிலாப்பூர் ஏரியாவில் சபாவுக்குத் தனி அந்தஸ்து பெற்றுத் தந்தவர், அண்மை யில் மறைந்த வெங்கட்ராமன். கலைஞர்களிடம் கனிவும், தேவைப்படும் நேரத்தில் கண்டிப்பும் காண்பித்து வந்தவர். அடுத்த வருடம் சபாவுக்கு 60-ம் வருட ஆரம்பம். டிசம்பர் சீஸனை வெங்கட்ராமனுக்கு அர்ப்பணிக்கலாம். சில மனத்தாங்கல் காரணமாக இங்கு சீஸனில் பாட மறுத்து வரும் ஒரு சில பிரபலங்களும் பகை மறந்து அடுத்த வருடம் பாட வேண்டும்.

இங்கு லால்குடி ஜெயராமனின் சாருகேசி வர்ணத்துடன் கச்சேரியைத் துவங்கினார் மகாராஜபுரம் ராமச்சந்திரன். எந்தக் கச்சேரிக்கும் அருமையான 'ஸ்டார்ட்டர்’ மாதிரியாக இருந்து, பாடகரின் சங்கீதப் பசியைக் கிளப்பிவிடும் சூப்பர் வர்ணம் இது!

வயலினுடன் உட்கார்ந்திருப்பது, பக்கவாத்தியம் வாசிப்பதற்கே என்பதையும், பாடகரைத்தான் பின்தொடர வேண்டும் என்பதையும் மறந்து, வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தன் சொந்தச் சரக்கை எடுத்துவிட்டார் எம்.ஏ.சுந்த ரேஸ்வரன். மேடை நிர்பந்தம் காரணமாக, பாடகரும் அவருக்கு 'சபாஷ்’ போட்டுக்கொண்டு இருந்தார்!

மோகனம், மகாராஜபுரத்தின் குடும்பச் சொத்து. இன்னும் நான்கு தலைமுறைக்கு அது காணும்! தாத்தா விஸ்வநாத ஐயரும், அப்பா சந்தானமும் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கும் ரம்மியமான மோகன ராக சங்கதிகளை மொத்தமாக சுவீகரித்துக்கொண்டு, பாடி, அனுபவித்தார் ராமச்சந்திரன்! 'ரா ரா ராஜீவ லோசன ராமா’ என்று மைசூர் வாசுதேவாச்சாரியின் கொஞ்சலையும் கெஞ்சலை யும் ரிபீட் செய்தார் ராமு! ராகம், தானம், பல்லவிக்கு சண்முகப்ரியா. ராகத்தின் நீள, அகலத்தைத் தடுக்கிவிடாமல் கடந்து வந்து கைதட்டல் பெற்றார்.

ஒரு கேள்வி மட்டும் மண்டையைக் குடைகிறது. அப்பா சந்தானம் மாதிரி, மகனுக்கு ரசிகர்கள் திரண்டு வருவதுஇல்லையே... ஏன்? நாலும் தெரிந்த நிபுணர்கள்தான் விடை காண வேண்டும்!

- டைரி புரளும்..., படங்கள்:கே.ராஜசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism