Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

Published:Updated:

மேற்கத்திய இசை... இத்தனை ஈஸியா?

விகடன் வரவேற்பறை

வெளியீடு: தி மியூசிக் ஸ்கூல் பப்ளிகேஷன்ஸ்,
ளாட் நெ.58, G-1, ஸ்டேட் பேங்க் காலனி,
2-வது தெரு, சாலிகிராமம்,
சென்னை -93.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விலை:

விகடன் வரவேற்பறை

7,000
சலுகை விலை:

விகடன் வரவேற்பறை

5,000

'குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்’ என்ற வரிகளைச் சிலாகிப்பவர்கள், இந்த நூலையும் சிலாகிப்பார்கள்.

குருநாதர் இல்லாமல் இசையைக் கற்பது சாத்தியமா? அந்த அதிசயத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் பயிற்சி. இப்படியாக 10 மாதங்கள். 'முழுமையான மேற்கத்திய இசைப் பயிற்சிக்கு இத்தனை குறுகிய காலம் போதுமா?!’ என்ற வியப்பே நம்மை நூலுக்குள் செல்லும் ஆர்வத்தை உண்டாக்குகிறது.

##~##

இசைப் பாடத்தை எளிமையாக எழுதுவது மிகப் பெரிய சவால். கீ போர்டில் இருக்கும் வெள்ளைக் கட்டை, கறுப்புக் கட்டை என்பதில் தொடங்கி ஸ்டேவ், மியூசிக் நொட்டேஷன்... என விரிகிறது இந்த நூல். ஒவ்வொரு நாள் பயிற்சி, அதைத் தொடர்ந்து சிறிய தேர்வு, ஆடியோ விளக்கம்... என கை பிடித்துக் கற்றுத்தருகிற சுகம் நம்மை இசைக்கு நெருக்கமாக்குகிறது.

ஒளிப்பதிவாளர் செழியனின் மொழிநடை அபாரமானது; அக்கறையானது. பொதுவாகப் பலருக்கும் அந்நியமாக இருக்கும் இசை நுணுக்கங்கள், இவருடைய நடையில் பயிலும்போது தோழமைகொள்கிறது. நேரில் பேசுகிற பாந்தமான நடையில் இசைப் பாடங்களை மெள்ளக் கற்றுத்தருகிறார். கற்பவரின் கவனம் சிதையாத, சோர்வு தட்டாத உளவியல் அணுகுமுறை!

இசை மீது அவருக்கு இருந்த நாட்டம், இசையை ஏன் கற்க வேண்டும், எப்படிக் கற்க வேண்டும் என்பதை எல்லாம் முன்னுரையில் நறுக் சுருக்காகத் தெளிவுபடுத்தியிருக்கிற விதமே அதற்குச் சான்று.

'ஆக்டேவ் என்றால் என்ன? மிடில் ஆக்டேவ், ஹையர் ஆக்டேவ் என்பதன் வேறுபாடுகள் என்ன?’ என்பவை சுவாரஸ்யமாக விளக்கப்பட்டிருக்கின்றன. சிமிலர் மோஷன், கான்ட்ரரி மோஷன் போன்ற பயமுறுத்தும் பதங்களை அவர் எப்படி விளக்கியிருக்கிறார் பாருங்கள்.

'ஒருவர் மாடிப் படியில் ஏறிச் செல்கிறார். அவரை எட்டுப் படிகள் பின்னால் இருந்து நீங்கள் பின்தொடர்கிறீர்கள். இருவரும் ஒரே திசையில் செல்கிறீர்கள். இதுதான் 'Similar Motion’. மாடிப் படியில் ஒருவர் மேலே ஏறிச் செல்கிறார். இன்னொருவர் கீழே இறங்கிச் செல்கிறார். இது Contrary Motion’. Similar  Motion-ல் தூரம் அதிகரிக்காது, அப்படியே இருக்கும். Contrary Motion-ல் எதிர் எதிராகப் பிரிவதால் இடைவெளி அதிகரிக்கும். இப்படித்தான் இசையை நடைமுறையோடு ஒப்பிட்டு விளக்குகிறார்.

Clef, Chord, Staff போன்ற மேற்கத்திய இசைப் பதங்களை, இந்தப் பயிற்சி நூல் சுவாரஸ்யமாகக் கற்பிக்கிறது. உதாரணத்துக்கு, ostinato என்பதை இப்படி விவரிக்கிறார். 'சில நோட்கள் குறிப்பிட்ட ரிதத்துடன் இணைந்து பாடல் முழுக்கவோ அல்லது சில இடங்களிலோ திரும்பத் திரும்ப வரும். 'ஊர்வசி... ஊர்வசி.... டேக்இட் ஈஸி ஊர்வசி...’ பாடல் முழுக்கவே ஒரு குறிப்பிட்ட ரிதத்தில்தான் ஒலிக்கும். இதுதான் ostinato. இது Rap, Pop இசைப் பாடல்களில் அதிகம் இருக்கிறது. திரை இசையில் இளையராஜாவின் பாடல்களில் இப்படியான ஓர் இசை தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதைக் கேட்க முடியும்.’

இந்தப் புத்தகத்தின் 10 தொகுதிகள் சொல்லும் வழிகாட்டல், பயிற்சியை முறையாகக் கடைப்பிடித்தால் மேற்கத்திய இசையின் அடிப்படையை முறையாகக் கற்றுத் தேற முடியும் என்று ஊக்கம் தருகிறது 'ஒலி-ஒளி ஓவியர்’ செழியனின் படைப்பு!

என்னமோ ஏதோ...

விகடன் வரவேற்பறை

இசை: இமான்
பாடல்கள்: கார்க்கி
வெளீயிடு: சோனி மியூசிக்
விலை :

விகடன் வரவேற்பறை

99

'நீயென்ன பெரிய அப்பாடக்கரா?’ பாடல் சூப்பர் சுவாரஸ்யம்! சீரான, மென்மையான வெஸ்டர்ன் பீட், இடையிடையே சாக்ஸபோன் ஸ்பரிசம், நடுநடுவே பேண்ட் வாத்தியத் துள்ளல்... இவற்றுக்கு இடையே காதலன்-காதலி இருவருக்குள்ளான டாம் அண்ட் ஜெர்ரி டிஷ்யூம் வரிகள் என ஈர்க்கிறது இளமை காம்போ. 'போடி போ... ஜாலிக்காக ஒருத்தன்... தாலிக்காக ஒருத்தன்...’ என்று இவன் சதாய்க்க, 'போடா டேய்... போடா டேய்... புள்ளை பெக்க ஒருத்தி...’ என்று அவள் மல்லுக்கட்ட, ஜாலி ஹோலி ரங்கோலி! 'லூஸுப்பெண்ணே’ என்று பெண்களை மட்டும் திட்டாமல், 'உலகில் உள்ள பொண்ணுல அழகி நான்தான்னு நீ சொன்ன... எவளோ ஒரு கிறுக்குக்குப் புருஷனாக ஏன் போய் நின்ன?’ என்று பெண்ணுக்கும் சரிநிகர் ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார் கவிஞர் கார்க்கி.

'மொசலே மொசலே...’ தீபக், பூஜாவின் எனர்ஜெட்டிக் குரல் பாடலை ரசிக்க வைக்கிறது. 'காற்றே காற்றே’ புகழ் வைக்கம் விஜயலட்சுமியின் குரல் மனதைச் சொடுக்குகிறது 'புதிய உலகை.... புதிய உலகை’ பாடலில். விஜயலட்சுமி குரலுக்கு வழிவிட்டுப் பக்கத்துணையாகப் பயணிக்கிறது இசை. 'யாரும் தீண்டிடா இடங்களில் மனதைத் தீண்டினாய்... யாரும் பார்த்திடா சிரிப்பை என் இதழில் தீட்டினாய்...’ என பாடல் வரிகளும் தன் பங்குக்கு அடர்த்தி சேர்க்க, வசியம் செய்கிறது பாடல்!

விகடன் வரவேற்பறை

முட்டுச்சந்து டாஸ்மாக்கின் மூலை டேபிள் அருகில்.. 

இயக்கம்: பாலாஜி சண்முகம்
வெளியீடு: பத்து டாக்கீஸ்.

'டாஸ்மாக்கில் ஒருநாள்’ கதை! திருமலை, அப்துல், சுரேஷ், மார்ட்டின், ஆறுமுகம், சிற்றரசு... என ஆறு பேர் டாஸ்மாக்கின் சுவர் பார்த்த மேசையில் அமர்ந்து சரக்கு அடித்துவிட்டு சலம்புவதே கதை. (அனைவரின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்தைக் கூட்டினால் டாஸ்மாக் என்ற வார்த்தை வரும்!) காதல் தோல்வி இளைஞன், 'அந்த ஸ்டேஷன்ல டிரெய்ன் நிக்காதா? டிரெய்ன்ல நாம ஏறணும்னாதான் டிரெய்ன் நிக்கணும். டிரெய்ன் நம்ம மேல ஏறணும்னா நாம நின்னாப் போதும்’ என்று விரக்தியாகச் சொல்வது, 'உனக்காக ராத்திரி பகலா உழைப்பேன்மா’ என்று வெளிநாடு செல்லும் பாய் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அவர் குடிக்கும் 'டே-நைட்’ பிராண்ட் மதுவைக் காட்டுவது என ரசனை அத்தியாயங்கள். இறுதியில் சுவற்றில் ஒட்டப்பட்ட மதுப்புட்டி லேபிள்கள் தமிழ்நாடு மேப் போலவே இருப்பது... நச்!

விகடன் வரவேற்பறை

வரலாற்று ராட்டை!
www.raattai.wordpress.com

ந்திய வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் வலைப்பூ! காந்தி, அம்பேத்கர், பெரியார் என்று இந்திய அரசியல் வரைபடத்தை மாற்றி எழுதிய மகத்தான தலைவர்களின் சிந்தனைகள், அவர்களைப் பற்றிய ஆய்வுகள், அவர்களின் எழுத்துகள், புத்தகங்கள் என ஏகமான தகவல்கள்.  குறிப்பாக, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக ஏராளமான இலவச மின் நூல்களுக்கான இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிறு கட்டுரையும் வரலாற்று ஆதாரத்துடனே எழுதப்பட்டுள்ளது. 'ராட்டை’ என்ற பெயரில் இந்த வலைதளத்தை நடத்துபவரின் காந்தி மீதான பற்றை, அனைத்து இடுகைகளிலும் உணரலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism