Published:Updated:

'பாரதி’ பத்மநாபன்

தமிழ்மகன், படம்: ஆ.முத்துகுமார்

'பாரதி’ பத்மநாபன்

தமிழ்மகன், படம்: ஆ.முத்துகுமார்

Published:Updated:
'பாரதி’ பத்மநாபன்

ற்று முன் நடந்த ஒரு விபத்தை விவரிக்கும்போதே ஏகப்பட்ட முரண்பாடுகள் உருவாகிவிடும். யார் யாரை இடித்தார்கள், இடித்து விட்டுச் சென்ற கார் என்ன நிறம், எந்தப் பக்கத்தில் இருந்து எந்தப் பக்கம் சென்றது என ஆளுக்கொரு தகவல் தருவார்கள்.

பாரதி இறந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு, பாரதியைப் பற்றிய தகவல்களைத் தேடத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
தொடங்கிய பத்மநாபனுக்கு எத்தனை மாறுபட்ட கருத்துகள் கிடைத்திருக்கும்? தன் வாழ்நாள் பணியாக, பாரதி பற்றிய தகவல்களை அவருடன் நெருங்கிப் பழகிய பலரையும் சந்தித்துச் சீர்படுத்திய பெருமையும் பொறுமையும் கொண்டவராக இருந்தார் ரா.அ.பத்மநாபன்.

இதற்காக பாரதி வாழ்ந்த எட்டயபுரம், மதுரை, கடையம், புதுச்சேரி, சென்னை என எல்லா இடங்களுக்கும் பலமுறை பயணித்தார். பாரதியோடு பழகிய பாரதிதாசன், குவளைக்கண்ணன், நீலகண்டப் பிரம்மச்சாரி, மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், வ.ரா., நெல்லையப்பர், புதுவையில் இருந்த பணிப்பெண் அம்மாக்கண்ணு, பேராசிரியர் சுப்பிரமணிய ஐயர், பாரதியின் இளைய சகோதரர் சி.விஸ்வநாதன், பாரதியாரின் துணைவியார் செல்லம்மா, மகள்கள் தங்கம்மா, சகுந்தலா... எனத் தேடித் தேடி தகவல்களைத் திரட்டி சரிபார்த்தார். அரசின் ஆதரவில் ஓர் ஆராய்ச்சிக் குழு செய்யவேண்டிய காரியத்தை ஒரு தனிமனிதர் செய்தார்.

பாரதியின் அரிய புகைப்படங்களை, அவர் எழுதிக் காணாமல்போன 'சந்திரிகையின் கதை’ கையெழுத்துப் பிரதிகள், தலையங்கங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தினார்.

'பாரதி’ பத்மநாபன்

1934-ல் ஆனந்த விகடனில் பணியாற்றியபோது முதன்முதலாக பாரதியாரின் புகைப்படம் ஒன்றைப் பார்த்தார் பத்மநாபன். அன்று தொடங்கிய தேடல், 1957-ல் நூல் வடிவம் பெற்றது. ''பாரதியார் புகைப்படங்களாக நமக்குக் கிடைத்திருக்கும் ஐந்து புகைப்படங்களில் மூன்று, இவர் தேடிக் கண்டுபிடித்தவை'' என்கிறார் ஆராய்ச்சியாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி.

பாரதியார் சரித்திர நூலை 'சித்திர பாரதி’ என வெளியிட்டார். பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் அடங்கிய அரிய தொகுப்பு அது. பாரதியாரின் சரித்திர நூலைப்போலவே பல சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாறுகளைத் தொகுத்தார்.

வ.வே.சு. ஐயர், நீலகண்டப் பிரம்மச்சாரி, சுப்பிரமணிய சிவா, வ.உ.சி. போன்ற வீரர்களின் வாழ்க்கை நூல்களை அவர்களோடு பழகியவர்களின் குறிப்புகளைக்கொண்டு ஆதாரத்துடன் வெளியிட்டார். எழுதிய நூல்கள் 32. விகடன், தினமணி, இந்து உள்ளிட்ட பல இதழ்களில் பணியாற்றிய இவர், கடந்த குடியரசு தினத்துக்கு மறுநாள் 97-வது வயதில் சென்னையில் மறைந்தார்.

பாரதியாரை தமிழ் சமூகத்திடையே வீரியமாக ஊடுருவச் செய்த இவரின் அளப்பரிய பணிக்கு தலை வணங்குவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism