Published:Updated:

லவ் யூ பாட்டி!

ஆ.அலெக்ஸ்பாண்டியன்

லவ் யூ பாட்டி!

ஆ.அலெக்ஸ்பாண்டியன்

Published:Updated:
##~##

வட அமெரிக்காவைச் சேர்ந்த திருமணப் புகைப்படக்காரர் ஜேசன் லீ. இவருக்கு கிறிஸ்டின், கேலா என இரண்டு மகள்கள். ஜேசனின் தாயாருக்கு பேத்திகள் என்றால் கொள்ளைப் ப்ரியம். ஆனால், அவர் புற்றுநோய் பாதிப்புக்குச் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஜேசனின் மகள்களுக்கு அடிக்கடி  சளி, இருமல்... என சுவாசம் தொடர்பான பிரச்னைகள். இதனால் பாட்டியும் பேத்திகளும் சந்திக்க முடியாத சூழல். பேத்திகளைச் சந்திக்க முடியாத தன் அம்மாவின் மனக்குறையைப் போக்க, இரு மகள்களையும் விதவிதமாகப் படம் எடுத்து பிரத்யேக வலைதளத்தில் பதிவேற்றத் தொடங்கினார் ஜேசன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேத்திகளின் அனைத்து குறும்புச் சேட்டைகளையும் பார்த்து ரசித்தார் பாட்டி. ஒருகட்டத்துக்குப் பிறகு வழக்கமான குறும்புகள் போக, காற்றில் சைக்கிள் ஓட்டுவது, அந்தரத்தில் பறப்பது, சுவற்றில் தொங்குவது, கிறிஸ்துமஸ் ஸ்பெஷல், விடுமுறை ஸ்பெஷல், வீட்டுக்கு வந்த புதிய நாய்... என விதவிதமான வித்தியாசமான போட்டோ மேஜிக் ஐடியாக்களைப் பதிவிடத் தொடங்கினார் ஜேசன்.

இப்போது கிறிஸ்டின் மற்றும் கேலா இருவரும் இணைய செலிபிரட்டி சகோதரிகள்! அக்கா - தங்கை ஆல்பத்தில் இருந்து இங்கே சில க்ளிக்ஸ்...

லவ் யூ பாட்டி!
லவ் யூ பாட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism