Published:Updated:

கெமிக்கல் ஸ்டார் யாரு?

ம.கா.செந்தில்குமார்

கெமிக்கல் ஸ்டார் யாரு?

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
##~##

''டெண்டிஸ்ட் கிளினிக்ல இருக்கேன். ஃபைவ் மினிட்ஸ்ல முடிச்சிருவீங்கள்ல!'' - 'ரேபிட் ஃபயர் ரவுண்ட்’ ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தார் குஷ்பு.

''இப்பத்தான் மூணு தெரு தள்ளி புது வீட்டுக்குக் குடிவந்திருக்கேன். இன்னும் எதுவும் செட் பண்ணலை. டி.டி.ஹெச். கனெக்ஷனுக்கு ஆள் வரலை. பேப்பர் படிச்சு, நியூஸ் பார்த்து ஒரு வாரத்துக்கு மேல ஆகுது. டாப்பிக்கல் கேள்விகள்ல நிச்சயம் சிக்கிக்குவேன்!'' - பலப்பல காரணங்களை அடுக்கினார் நீலிமா ராணி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நீங்க சினிமா பத்தியும் கேப்பீங்களே... ஆனா, பேப்பர்ல சினிமா, விளையாட்டுப் பக்கங்களை பாக்காமலேயே புரட்டுற ஆளு நான். கொஞ்சம் கஷ்டம்தான்!'' - 'முன்ஜாமீன்’ எடுத்துக்கொண்டார் பழ.கருப்பையா.

''ண்ணா... என்னங்ணா... ஒரு வரி டயலாக்கையே படிச்ச அடுத்த நிமிஷம் மறக்குற ஆளு நானு... என்கிட்ட போய் ஜெனரல் நாலெட்ஜ் கேட்டீங்கன்னா...!'' - கடைசி வரை 'எஸ்கேப்’ வியூகம் வகுத்துக்கொண்டே இருந்தார் 'நான் கடவுள்’ ராஜேந்திரன்.

தி.மு.க-வில் இருந்து தற்காலிகமாக விலக்கப்பட்டிருக்கும் மு.க.அழகிரி, மத்திய அரசின் எந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர்?

பதில்: ரசாயனம் மற்றும் உரத் துறை

குஷ்பு: ''கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்ட்டிலைசர்ஸ். திருவான்மியூர்ல நடந்த என் முதல் பொதுக்கூட்ட ஸ்பீச் கேட்டுட்டுப் பாராட்டினார். மதுரையில் சில தடவை அவரைப் பார்த்துப் பேசியிருக்கேன்!''

நீலிமா ராணி: ''கெமிக்கல்ஸ். 'பண்ணையாரும் பத்மினியும்’ ஷூட்டிங் மதுரைல நடந்துச்சு. அப்ப, 'இந்தப் பக்கம் நிறைய கெமிக்கல் ஃபேக்டரி வரப்போகுது. அதுக்குக் காரணம் அழகிரி சார்தான்’னு அங்கே பேசிட்டு இருந்தாங்க. அவர் கெமிக்கல் மினிஸ்டரா இருக்கார்னு அப்பத்தான் எனக்குத் தெரியும். அந்த நியூஸ் இப்போ யூஸ் ஆகிருச்சு. ஹேய்... சூப்பர்ல!''

பழ.கருப்பையா: ''உரத் துறை. ஆனா, அந்த அமைச்சர் பதவியை வைச்சு மக்களுக்கு அவர் என்ன பண்ணினார்னு மட்டும் கேட்டுராதீங்க!''

ராஜேந்திரன்: ''முதல் கேள்வியே மெர்சலா இருக்கே..! அண்ணன் அமைச்சரா இருந்தாங்கனு தெரியும். அப்புறம் அதுல இருந்து விலகிட்டார்னுகூடக் கேள்விப்பட்டேன். ஆனா, என்ன துறைனு தெரியலையே!''

கெமிக்கல் ஸ்டார் யாரு?

குறிப்பிட்ட வருடத்துக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து லேட்டஸ்ட் கரன்சியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. அது எந்த வருடம்?

2005. அந்த வருடத்துக்கு முன் அச்சடிக்கப்பட்ட கரன்சிகளின் பாதுகாப்பு அம்சக் குறைபாடுகள், எளிதாக கள்ள நோட்டுகளை அச்சடிக்க வழிவகுக்கின்றன என்பதால், இந்த வாபஸ் நடைமுறையை அமல்படுத்தியது ரிசர்வ் வங்கி!

குஷ்பு: ''2005. இந்தியாவுல மூணு லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் இருக்கு. அதை வெளியில கொண்டு வரணும்னு தான் இந்த அறிவிப்பு. ஆனா, எத்தனை பேர் அப்படி மாத்துவாங்கனு தெரியலை!''

நீலிமா ராணி: ''ஒருவேளை சுதந்திரத்துக்கு முன்னாடி அச்சடிச்ச நோட்டெல்லாம் செல்லாதுனு சொல்லிட்டாங்களோ? அப்ப இருந்த பிரிட்டிஷ் பீரியட்ல இப்ப நாம யூஸ் பண்ற ரூபாய் நோட்டுகளா இருந்துச்சு... இருக்காதே. தெரியலைங்க!''

பழ.கருப்பையா: ''2005.''

ராஜேந்திரன்: ''இதை நான் படிச்சேன். ஆனா, நம்மட்ட அவ்வளவு பணம்லாம் இல்லை. அதனால நமக்குப் பிரச்னை இல்லைனு நினைச்சு அப்பவே மறந்துட்டேன்!''

'சோலார் ஸ்டார்’ என்று தமிழகத்தில் கலாய்க்கப்படுபவர் யார்?

ராஜகுமாரன்.

குஷ்பு: ''யார்னு தெரியலையே!'' என்றவர் பதிலைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். சின்னதாக சிரித்துக்கொள்கிறார்.

நீலிமா ராணி: ''தேவயானி மேடம் ஹஸ்பண்ட் ராஜகுமாரன் சார். ஒருநாள் பேப்பர் புரட்டிட்டு இருந்தப்ப, 'திருமதி தமிழ் 75-வது நாள்’ விளம்பரம் பார்த்தேன். ஆச்சரியமா இருந்துச்சு. அந்தப் படம் ஹண்ட்ரட் டேஸ் ஓடுச்சா?''

பழ.கருப்பையா: ''என்னது 'சோலார் ஸ்டாரா? அப்படி ஒரு பட்டம் யாருக்கும் கொடுத்திருக்காங்களா என்ன?'' என்று ஆச்சரியப்பட்டவரிடம், தேவயானியின் கணவர் ராஜகுமாரன், 'திருமதி தமிழ்’ படத்தில் தனக்குத்தானே அந்தப் பட்டத்தைச் சூட்டிக்கொண்டார் என்று சொன்னதும், ''ஓ... தேவயானி வீட்டுக்காரரா? அந்தப் படம் ரிலீஸ் ஆகிடுச்சா? என்னது, 100 நாள் ஓடுச்சா?'' என்று மேலும் மேலும் அதிர்கிறார்.

ராஜேந்திரன்: ''சினிமாவுல இருந்து கேட்டா தப்பிச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா, அதுலயும் சூது பண்ணிட்டீங்களே..!'' என்றவர் பதிலைத் தெரிந்துகொண்டதும், ''அவர் நம்ம தொடர்பு எல்லையில இல்ல... அதனால தெரியலை!'' என்று சமாளித்தார்.

கெமிக்கல் ஸ்டார் யாரு?

சமீபத்தில் எந்த மத்திய அமைச்சரின் வீட்டின் முன் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது?

நாராயணசாமி.

குஷ்பு: ''நாராயணசாமி. டெல்லி ஃப்ளைட்ல அடிக்கடி பார்ப்பேன். 'என்னம்மா... நல்லா இருக்கீங்களா?’னு நலம் விசாரிப்பார்!''

நீலிமா ராணி: ''ஓ மை காட். வெடிகுண்டா?'' என்று அதிர்ச்சி காட்டி அப்பீட் ஆகிறார்.

பழ.கருப்பையா: ''என்னது பைப் வெடிகுண்டா?'' என்று அதிர்ச்சியானவரிடம் பதிலைச் சொன்னதும், ''அட... நம்ம நாராயணசாமியா? அவர் வீட்டு வாசல்ல வெடிக்காம இருந்த ஒரு வெடிகுண்டைக் கண்டெடுத்தாங்கனு படிச்சேன். ஆனா, நீங்க ஏதோ மும்பை, கொல்கத்தாவுல கண்டெடுத்த மாதிரி கேட்டதும் குழம்பிட்டேன். 'இந்தப் பதிலை நான் மிஸ் பண்ணிட்டேன்’னு நியாயமா எழுதிடுங்க தம்பி!''

ராஜேந்திரன்: ''ண்ணா தேங்ஸுங்கோ..! சைபர் மார்க்னு நினைச்சிட்டு இருந்தேன். தெரிஞ்ச கேள்வியை கேட்டு தெம்பு வர வைச்சுட்டீங்க. பாண்டிச்சேரிக்காரர்... அமைச்சர் நாராயணசாமி வீட்டு வாசல்ல இருந்து எடுத்தாங்க!''

குடிநீர்க் கட்டணம் பாக்கி வைத்திருந்தோர் பட்டியலில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற இந்தியர் யார்?

சச்சின் டெண்டுல்கர்.

குஷ்பு: ''சச்சின் டெண்டுல்கர். இந்தியாவுக்கான பெருமை. முன்னேறணும்னு நினைக்கிறவங்களுக்கு முன்னுதாரணம். ஏமாத்தணும்னு நினைச்சிருக்க மாட்டார். மறந்திருப்பார்!''

நீலிமா ராணி: பதிலைக் கேட்டுத் தெரிந்துகொண்டவர், ''ரொம்ப எளிமையான மனிதர். கிரவுண்ட்ல கோபம் வர்ற மாதிரி டீஸ் பண்ணாலும், ரொம்ப கண்ணியமா நடந்துப்பார். ஜெம் ஆஃப் எ பெர்சன். அவரா..? சான்ஸே இருக்காது. வீட்ல யாராவது கட்ட மறந்திருப்பாங்க!''

பழ.கருப்பையா: ''உலகப் புகழ்பெற்ற அந்த இந்தியர் அவ்வளவு ஏழ்மையான ஆளா?'' என்று ஆச்சரியப்பட்டவரிடம் பதிலைச் சொன்னதும் இன்னும் ஆச்சரியம் காட்டுகிறார். ''தம்பி உலகத்துல புரொடக்ட்டிவ் ஃபோர்ஸ், நான்- புரொடக்ட்டிவ் ஃபோர்ஸ்னு ரெண்டு பேர் இருக்காங்க. அதாவது, ஒரு பொருளையோ, சேவையையோ கண்டுபிடிக்கிற, மக்களுக்காக தயாரிக்கிற விவசாயிகள், விஞ்ஞானிகள் எல்லாம் உற்பத்திச் சக்திகள். இவங்கதான் புரொடக்ட்டிவ் ஃபோர்ஸ். இவங்களுக்கு எந்தச் சலுகையும் நாம தர்றதே இல்லை. உற்பத்தி சக்தி அல்லாத நாட்டுக்காக, மக்களுக்காக எந்த நல்ல விஷயத்தையும் செய்யாதவங்க நான்-புரொடக்ட்டிவ் ஃபோர்ஸ். அவங்கதான் அரசபோக வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்க. இந்த டெண்டுல்கர்கூட ஏற்கெனவே வெளிநாட்டு காரை இறக்குமதி பண்ணிட்டு வரி கட்டலைனு ஒரு விவகாரத்துல சிக்குனார்ல!''

ராஜேந்திரன்: ''உள்ளூர் புகழ் இந்தியர்களைப் பத்தியே டப்பா டான்ஸ் ஆடுது. இதுல, உலகப் புகழ்பெற்ற இந்தியரா? ம்க்கும்!'' என்றவர் பதிலைத் தெரிந்து கொண்டதும், ''சமயத்துல வேலைப் பரபரப்புல கரன்ட் பில், டெலிபோன் பில் கட்ட மறந்திருப்போம்ல... அப்படி அவரும் பிஸியா இருந்ததுல மறந்திருப்பாரோ என்னவோ?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism