Published:Updated:

காதல்... காதல்... மேலும் காதல்!

ஆ.அலெக்ஸ்பாண்டியன்

##~##

 ணினியுடன் எட்டு மணி நேர வேலை, திருமணம், குடும்பம், இ.எம்.ஐ., இன்க்ரிமென்ட், எதிர்காலம் பற்றி அன்லிமிட்டெட் கவலை... என வாழும் லட்சக்கணக்கான இந்திய இன்ஜினீயர்களில் ஒருவராகத்தான் சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தார் ரவீந்தர் சிங். ஆனால் இப்போது, இந்திய இளமைப் பட்டாளத்தை வாசிக்கவைக்கும் பெஸ்ட் செல்லிங் எழுத்தாளர்!

வட இந்தியக் காதல் ஜோடிகள் அளிக்கும் காதலர் தினப் பரிசுகளில் ரவீந்தரின் நூல்களும் தவறாமல் இடம் பிடிக்கின்றன. காதல் புகழ் பாடும் நாவல்கள் மூலமாகவே ஃபோர்ப்ஸ் இதழின் டாப் 100 பிரபல இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்ற ரவீந்தர், எழுத்தாளரான கதை ரொம்பவே சுவாரஸ்யம்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''கொல்கத்தாவின் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவன். வறுமையான சூழல். வாழ்க்கையில் நான் ஆசைப்பட்ட இரண்டு விஷயங்கள்... ஐ.டி நிறுவன வேலையில் மாதம் 10,000 சம்பளம்; ஒரு வெஸ்பா ஸ்கூட்டர். இது இரண்டுமே கைக்கெட்டும் சமயம், வீட்டில் என்னைத் திருமணம்

காதல்... காதல்... மேலும் காதல்!

செய்துகொள்ளச் சொன்னார்கள். திருமண வெப்சைட் மூலமாக குஷி அறிமுகமானார். கட்டாயத்தின் பேரில் நடந்த அந்தச் சந்திப்பு, பின்னர் காதலாகியது. ஒரு பிப்ரவரி 14-ல் நிச்சயதார்த்தத்துக்கு தேதி குறித்துக் காத்திருந்தபோது, குஷி ஒரு விபத்தில் சிக்கினாள். மருத்துவமனையின் ஐ.சி.யு. பிரிவில் குஷி கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்க, கையில் நிச்சயதார்த்த மோதிரம், கண்களில் நீர்,        நெஞ்சில் காதல்... என அந்தச் சூழலைக் கடக்க முடியாதவனாக தவித்துக்கொண்டிருந்தேன். ஆனால், காலத்துக்கு இரக்கமே இல்லை. குஷியை என்னிடமிருந்து பறித்துக்கொண்டது.

என் காதல் கதை, முடிவே இல்லாமல் பாதியில் நின்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குஷியை என் வாழ்க்கைக்குள் மீண்டும் கொண்டுவர மனசு துடித்தது. அப்போது எனக்குக் கிடைத்த வடிகால்தான் எழுத்து. மூன்று புள்ளிகளோடு முடிந்த ரவீந்தர்-குஷி காதல் கதையை, கமா போட்டு எழுதத் தொடங்கினேன். அதன் பிறகு நடந்த எதுவுமே நான் எதிர்பார்க்காதது!'' - தன்னைப் பற்றி ரவீந்தர் சிங் சுருக்கமாகச் சொல்வது இது!

தனக்கும் குஷிக்கும் இடையிலான காதலையே 'I Too Had a Love Story’ நாவலாக எழுதினார் ரவீந்தர். வெளியான நான்கு மாதங்களில் 10,000 பிரதிகள் விற்று ரெக்கார்ட் அடிக்க, ரவீந்தர் பெயரோடு 'பெஸ்ட் செல்லிங் எழுத்தாளர்’ அடைமொழி சேர்ந்துகொண்டது. ஃபேஸ்புக், ட்விட்டர் தொடங்கி, செல்லும் இடமெல்லாம் ரவீந்தரை இளைஞர்கள் கூட்டம் பின்தொடர்ந்து தங்கள் காதல் கதைகளை, சந்தோஷம், கவலைகளைப் பகிர்ந்துகொண்டது. அப்படி தன் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட இணைந்த காதல், பிரிந்த காதல், திருமணமாகி விவாகரத்தான காதல் கதைகளை அடிப்படையாகக்கொண்டு, 'Can Love Happen Twice?’ என இரண்டாவது நாவலை எழுதினார் ரவீந்தர். அதுவும் சிக்ஸர் ஹிட்!

காதல்... காதல்... மேலும் காதல்!

ஆறு வருடங்களில் நான்கு பெஸ்ட் செல்லிங் நாவல்கள் என ரவீந்தரின் கிராஃப் எகிறி நிற்கிறது. வாசகர்கள் அனுப்பிய 2,000 காதல் அனுபவங்களில் இருந்து சிறந்ததைத் தேர்ந்தெடுத்து பிரசுரித்த தொகுப்பே ரவீந்தரின் நான்காவது நாவலான, 'Love Stories That Touched My Heart’!

''எழுத்தாளர் ஆவேன் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், நானாகவே இனி எழுத்து உலகில் இருந்து விலக நினைத்தாலும் அது முடியாது போல!'' என உற்சாகமாகச் சொல்லும் ரவீந்தரின் மனைவி பெயர் குஷ்பூ சௌகான்.

'என்னது... காதலி இறந்த சோகத்தில் இருந்தவர் திருமணம் செய்து கொண்டாரா?!’ என அதிர்ச்சி ரியாக்ஷன் காட்ட வேண்டாம். ஏனென்றால், காதல் மீண்டும் மீண்டும் கிளைத்து முளைக்கும் என்பதுதானே ரவீந்தரின் சக்சஸ் ஃபார்முலா!

''என் தோழிகள் சொல்லித்தான்   'I Too Had a Love Story’ நாவலைப் படித்தேன். படிக்கப் படிக்க என்னால் கண்ணீரை அடக்கவே முடியவில்லை. நாவல் தந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல், சமூக வலைதளம் மூலம் ரவீந்தருக்கு ஆறுதலும் வாழ்த்தும் சொன்னேன். சில நாட்களுக்குப் பிறகு அவரிடம் இருந்து பதில் வந்தது. பிறகு சாட்டிங்கில் பேசத் தொடங்கினோம். திடீரென்று ஒருநாள் என் அலுவல கத்துக்கு அருகில் இருக்கும் நிறுவனத்துக்கு பணி மாறுதல் கிடைத்துவிட்டது என்று என் முன் நின்றார். அப்புறம் அடிக்கடி மீட்டிங், சாட்டிங், காபி ஷாப் என காதல் கொண்டு கல்யாணம் செய்து கொண்டோம்!'' என்கிறார் குஷ்பூ.

காதல் காதல் மேலும் காதல்!