Published:Updated:

லவ்வர் பாய் ஆர்யா... ட்ரீம் கேர்ள் நஸ்ரியா..!

இளமை சர்வேவிகடன் மாணவப் பத்திரிகையாளர்கள்

லவ்வர் பாய் ஆர்யா... ட்ரீம் கேர்ள் நஸ்ரியா..!

2014 - ம் வருடத்தின் லவ்வர் பாய் - ட்ரீம் கேர்ள் யார்? இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் காதலர் தினத்தைக் கடந்துவிட முடியுமா என்ன?

சென்ற வருடம் ஆர்யா-சமந்தா ஆகியோரைத் தேர்ந்தெடுத்த தமிழக இளைஞர்களின் இந்த வருட சாய்ஸ் யார்... யார்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

தமிழகம் முழுக்க அலைந்து திரிந்து டீன் டிக்கெட்களிடம் 'லவ்வர் பாய் - ட்ரீம் கேர்ள்’ சர்வே படிவத்தை நீட்டினோம். 'லவ்வர் பாய்’ பட்டியலில் எட்டு ஹீரோக்களும், 'ட்ரீம் கேர்ள்’ பட்டியலில் 15 ஹீரோயின்களும் இடம் பிடித்தனர். சர்வேயில் இடம் பெறுபவர்களுக்குத் திருமணம் ஆகியிருக்கக் கூடாது என்பது விதி. இதனால் பட்டியலில் அஜித், விஜய், சூர்யா என எவர்க்ரீன் அழகன்களும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற சமீப டிரெண்ட் செட்டர்களும் இடம் பெறவில்லை. சீனியர் பேச்சுலர்கள் சிம்பு, ஆர்யா, விஷாலோடு லைம் லைட்டுக்கு வந்த ஜெய், அதர்வா, கௌதம் கார்த்திக், தினேஷ் போன்றவர்கள் போட்டியிட்டார்கள்.

'ட்ரீம் கேர்ள்’ பட்டியலில் புது வரவுகள் நஸ்ரியா, ஸ்ரீதிவ்யா என அடிஷன்கள் மட்டுமே. சர்வேயில் வாக்களிப்பவர்களுக்கும் திருமணம் ஆகியிருக்கக் கூடாது என்பது கண்டிப்பான நிபந்தனை. தமிழகம் முழுக்க 2050 இளைஞர்களிடமும், 2610 யுவதிகளிடமும் சர்வே எடுக்கப்பட்டது.

சர்வே முழுக்கவே விதவிதமான கமென்ட்ஸ். ''எத்தனை பேரு வந்தாலும், 'என் இடம் எனக்குத்தான்’னு சொல்லி அடிச்சு ஹிட் அடிச்ச நயன்தாரா. அந்த நம்பிக்கைக்காக என் ஓட்டு'' - பளிச் பாசிட்டிவ் கமென்ட் அடித்தார் சென்னையைச் சேர்ந்த கிருபா.

''பார்க்கப் பாவமா இருக்கார். பாவமாவும் நடிக்கிறார். இந்த மாதிரி ஒரு பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, பஞ்சாயத்தே இல்லாம செட்டில் ஆகிடலாம்'' - ஜெய்க்கு வாக்களிக்க திருநெல்வேலி மேரியின் காரணம்.

லவ்வர் பாய் ஆர்யா... ட்ரீம் கேர்ள் நஸ்ரியா..!

'' 'ராஜா ராணி’ படத்தில் பஸ் ஜன்னல் வழியா எட்டிப் பார்த்து ஒரு பழிப்பு காட்டுமே, அந்த அழகுக்காகவே நஸ்ரியாவுக்கு ரெண்டு ஓட்டு எக்ஸ்ட்ரா போடலாம்.. ஒரு ஆளுக்கு ஒரு ஓட்டுதானா?'' சந்தோஷமாகச் சலித்துக்கொண்டார் சிதம்பரம் மணி சண்முகம்.

''பூஜா முதல் நயன் வரைக்கும் அதிக ஹீரோயின்களோட கிசுகிசுக்கப்பட்ட ஒரே ஆள் ஆர்யாதான். அதனாலேயே எனக்கு அவரைப் பத்தி நிறையத் தெரியும். மத்தவங்களைப் பத்தி அவ்வளவாத் தெரியாதே!'' - மதுரை பூர்ணிமா...

''ஏங்க சிவகார்த்திகேயனுக்கு கள்ள ஓட்டு போடலாமா?'', ''அஞ்சலியும் தமிழ் சினிமாவில் இல்லை; அவங்க பேரும் லிஸ்ட்ல இல்லை. ஒரு ரசிகனுக்கு எத்தனை சோதனை'' இப்படி விதவிதமாகக் கலகலக்கவைத்தார்கள்.

லவ்வர் பாய் ஆர்யா... ட்ரீம் கேர்ள் நஸ்ரியா..!

35 சதவிகித வாக்குகளைக் குவித்து, 'இந்த வருஷமும் நான்தான்!’ என்று பட்டம் தட்டினார் ஆர்யா. இத்தனைக்கும் 'சேட்டை’, 'இரண்டாம் உலகம்’ என ஆர்யா நடித்த இரண்டு படங்களும் 'பிலோ ஆவரேஜ்’. ஆனால், 'ராஜா ராணி’யில் நயன், நஸ்ரியா என இருவருடனும் ஆர்யாவுக்கு செட் ஆன கெமிஸ்ட்ரி, 'ஆரம்பம்’ பட அம்மாஞ்சி பாத்திரம்... அவரது வாக்கு வாங்கியைத் தக்கவைத்துவிட்டது.

கிட்டத்தட்ட 20 சதவிகித வாக்குகளோடு இரண்டாவது இடம் பிடித்தது, 'யக்கோவ்’ என்று, தான் அழுது தமிழ்நாட்டைச் சிரிக்கவைத்த ஜெய். சென்ற வருடம் 10 சதவிகிதமாக இருந்த ஜெய்யின் வாக்கு வங்கியில், 'ராஜா ராணி’ டபுள் தமக்கா போனஸ் சேர்த்துவிட்டது.

லவ்வர் பாய் ஆர்யா... ட்ரீம் கேர்ள் நஸ்ரியா..!
லவ்வர் பாய் ஆர்யா... ட்ரீம் கேர்ள் நஸ்ரியா..!

'நியாயமாரே...’ என்று பரிதாபமாகக் கதறி 'டாப்-3’க்குள் முன்னேறிவிட்டார் அதர்வா. கங்கிராட்ஸ். கடந்த ஒரு வருடத்துக்குள் 'ஹிட் படம்’ எதிலும் நடிக்கவில்லை சிம்பு. அதனாலேயோ என்னவோ, கடந்த வருட ரேங்கிங்கில் இருந்து சிம்புவுக்குப் பெரும் சரிவு. சென்ற வருடம் 19 சதவிகித ஓட்டு வாங்கியிருந்த சிம்புக்கு இந்த வருடம் எட்டு சதவிகிதம் சரிவுடன் நாலாவது இடத்துக்கு வந்துவிட்டார். 2013 சர்வேயில் மூன்றாவது இடத்தில் இருந்த விஷாலை, ஜெய், அதர்வாவின் முன்னேற்றம் ஐந்தாவது இடத்துக்குத் தள்ளிவிட்டது. அடுத்தடுத்த இடங்களில் தொடர்கிறார்கள் கௌதம் கார்த்திக், தினேஷ், அருள்நிதி ஆகியோர்.

ந்த வருட ட்ரீம் கேர்ள் ஏரியா முழுக்கவே புதுமுக அதகளம். நடித்தது மூன்றே படங்கள்தான். ஆனால், துறுதுறு பேச்சும் குறுகுறு பார்வையும் நஸ்ரியாவை 16 சதவிகித வாக்குகளோடு 'ட்ரீம் கேர்ள்’ பட்டத்துக்கு அலேக் செய்துவிட்டன. 'நைட்டியை மடிச்சுக் கட்டிட்டு 'ரிங்கரிங்கா...’ பாட்டுக்கு அவங்க போட்ட ஆட்டம் ஒண்ணு போதும். ப்ச்ச்... இப்போதான் பச்சக்குனு ஃபிக்ஸ் ஆச்சு பொண்ணு. ஆனா, அதுக்குள்ள அவசரப்பட்டு கல்யாணம்னு கமிட் ஆகிருச்சு!’ என்று 'கண்ணு வியர்க்க’ வருந்தினார்கள் நஸ்ரியா ரசிகர்கள். சர்ப்ரைஸாக இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார் சமந்தா. கடந்த வருடம் நம்பர் ஒன் இடம் பிடித்தவர் இவர்.

லவ்வர் பாய் ஆர்யா... ட்ரீம் கேர்ள் நஸ்ரியா..!
லவ்வர் பாய் ஆர்யா... ட்ரீம் கேர்ள் நஸ்ரியா..!

'ஒரே ஒரு ஊதா கலர் ரிப்பன்’பாட்டு, சென்ற வருட ட்ரீம் கேர்ள் சமந்தாவுக்கு இணையாக ஸ்ரீதிவ்யாவைக் கொண்டுவந்து விட்டது. இருவருமே 12 சதவிகித வாக்கு பெற்று இரண்டாம் இடம் பெற்றிருக்கிறார்கள். இத்தனைக்கும் சென்ற வருடம் சமந்தா ஹீரோயினாக நடித்து ஒரு படமும் வெளிவரவில்லை. 'தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் கேமியோ ரோலில் தலை காட்டியிருப்பார். இருந்தாலும் இரண்டாம் இடம் பிடித் திருப்பதற்கு 'சமந்தா கிரேஸ்’ மட்டுமே காரணமாக இருக்கலாம்.

'ஆரம்பம்’, 'ராஜா ராணி’ இரண்டிலும் நயனைத் தமிழர்கள் ரசித்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி... அவருக்கு அவர்கள் கொடுத்த நான்காவது இடம்

(9 சதவிகிதம்). சென்ற வருடம் இரண்டாம் இடத்தில் இருந்த காஜல் அகர்வால், 'ஆல் இன் ஆல் அழகுராஜா’, 'ஜில்லா’ இரண்டு படத்திலும் சும்மாவாக, சுமாராக வந்து போனாதால், 17 சதவிகிதத்தில் இருந்து பாதியாகக் குறைந்துவிட்டார். அவருக்கு ஐந்தாவது இடம்.

லவ்வர் பாய் ஆர்யா... ட்ரீம் கேர்ள் நஸ்ரியா..!
லவ்வர் பாய் ஆர்யா... ட்ரீம் கேர்ள் நஸ்ரியா..!

கிளாமர் காட்டிய 'அலெக்ஸ் பாண்டியன்’, 'இரண்டாம் உலகம்’ படங்கள் சறுக்கினாலும், பாந்தமாக வந்த 'சிங்கம் 2’ அனுஷ்காவுக்குக் கை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். இந்த முறை அவருக்கு எட்டு சதவிகித ஓட்டு அளித்திருக்கிறார்கள் இளைஞர்கள். குடும்பக் குத்துவிளக்கு லட்சுமி மேனன் (7 சதவிகிதம்), எவர்கிரீன் த்ரிஷா (6 சதவிகிதம்), கொழுகொழு ஹன்சிகா (5 சதவிகிதம்), செம கிக் ஆண்ட்ரியா (4 சதவிகிதம்) என அனுஷ்காவைப் பின் தொடர்கிறார்கள். 3 சதவிகிதத்துக்கும் குறைவாக ஓட்டு வாங்கியிருந்தார்கள் தமன்னா, ஸ்ருதிஹாசன், அமலா பால், ப்ரியா ஆனந்த் மற்றும் டாப்ஸி.

இந்த சர்வேயின் ரிசல்ட் இதுதான். திருமணம் ஆவது வரை ஆர்யாவை அடிச்சுக்க முடியாது, ஜெய்யும் அதர்வாவும் நல்ல படங்கள் நடித்தால் விரைவில் அந்தச் சீட்டை எட்டிப் பிடிக்கலாம். என்னதான் ஹன்சிகா, அனுஷ்கா, காஜல் கிளாமர் காட்டினாலும் ரசிகர்களில் முதல் மூன்று தேர்வு அழகு, நடிப்பு தொடர்பானதாகவே இருக்கிறது. அதுவும் துளியும் கிளாமர் காட்டாத நஸ்ரியா, ஸ்ரீதிவ்யாவுக்கு முதல் இரண்டு இடங்கள் கொடுத்திருப்பதில் மூலம் 'கொஞ்சம் நடிங்க மேடம்!’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

லவ்வர் பாய் ஆர்யாவுக்கும், ட்ரீம் கேர்ள் நஸ்ரியாவுக்கும் வாழ்த்துகள். அடுத்தடுத்த இடம் பிடித்தவர்கள் அடுத்த சீஸனில் ஹிட் அடிக்கவும் இதயம் பிடிக்கவும் வாழ்த்துகள்!