Published:Updated:

ஆதிக்கமற்ற அம்மா!

ம.கா.செந்தில்குமார், நா.சிபிச்சக்கரவர்த்தி

ஆதிக்கமற்ற அம்மா!

ம.கா.செந்தில்குமார், நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:
##~##

 ''தூக்கக் கலக்கமா இருக்கு. அதனால தப்பாப் பதில் சொல்லிட்டா இன்னொரு சான்ஸ் கொடுக்கணும் சரியா!'' - ஐஸ்வர்யா.

''ஐயா... நான் சீரியஸா சொன்னாலே குறும்பாக்கிடுவீங்க... இதுல குறும்புக் கேள்வின்னே கேக்கிறீங்களே!'' - தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கோர்ட்ல கேள்வி கேட்டுத்தான் எனக்குப் பழக்கம். ஒரு தடவை பதில் சொல்லித்தான் பார்ப்போமே!'' - வழக்கறிஞர் சுமதி.

''எலேய்... அண்ணாச்சியை வம்புல மாட்டிவிட்டுடாதீங்க!''  இமான்.

திருச்சி தி.மு.க. மாநாட்டில் பேசுவதற்காக சென்னை கன்னிமாரா நூலகம் சென்று குறிப்பெடுத்த தி.மு.க. பிரபலம் யார்?

பதில்: குஷ்பு - 'ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்’ என்ற தலைப்பில் பேசுவதற்காக அவர் குறிப்புகள் சேகரித்தார்.

ஐஸ்வர்யா: 'குஷ்பு மேம். சரியா?'

ஞானதேசிகன்: ''நான் அந்த மீட்டிங்கை ஃபுல்லாக் கவனிக்கலை. கலைஞர் பேசினதை மட்டும்தான் பார்த்தேன். நீங்க சொன்ன தலைப்புல யார் பேசினாங்கனு தெரியலையே?''

வழக்கறிஞர் சுமதி: ''யாரு... திராவிடர் கழகத் தலைவர் வீரமணியா?'' என்றவர் சரியான பதிலைக் கேட்டதும், ''குஷ்புவா... அட!''  

இமான்: ''குஷ்பு மேடம். அவங்க மாநாட்டுல பேசிட்டு இருந்ததை பாதிதான் பார்த்தேன். அப்பிடி இப்பிடித் தடுமாறுனாலும் ஜோராப் பேசிட்டாங்க!''

ஆதிக்கமற்ற அம்மா!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் இந்தியரின் பெயர் என்ன?

பதில்: சத்யா நாதெள்ளா

ஐஸ்வர்யா: 'தெரியலையே..! ஒரு சின்னப் பொண்ணுகிட்ட இவ்வளவு பெரிய ஜி.கே. கொஸ்டீனா?''

ஞானதேசிகன்:  ''பிறப்பால் இந்தியர். ஆனா, அமெரிக்காவுல இருக்கார். பேர் மறந்துடுச்சு தம்பி!''  

வழக்கறிஞர் சுமதி: ''இது நம்ம ஏரியா. நாதெள்ளா. ம்ம்... இருங்க இருங்க... சத்யா நாதெள்ளா!''

இமான்: ''ரிசர்வ் பேங்க் கவர்னராக்கூட சமீபத்துல நம்ம தமிழ்நாட்டுக்காரர் ஒருத்தரை நியமிச்சாங்கள்ல'' என்று கேள்வியை திசை திருப்பினார். அதட்டிக் கேட்டதும், ''தெரியலையே...'' என்று பம்மினார். பதிலைச் சொன்னதும், ''என்னது நாதெள்ளா சம்பத்துச் செட்டியா... நகைக் கடைக் குடும்பத்துக்காரரா?''

நரேந்திர மோடிக்கு ஆதரவாக அரை நிர்வாண போஸ் கொடுத்த இந்தி நடிகை யார்?

பதில்: மேக்னா படேல்.

ஐஸ்வர்யா: 'மல்லிகா ஷெராவத்... இல்லையா? சன்னி லியோனா? இவங்க இல்லைனா வேற யாரு இந்த மாதிரி போஸ் கொடுப்பா?''

ஞானதேசிகன்:  ''தெரியாதுனு ஒரே வார்த்தையில போட்டுவிட்ருங்க!''

வழக்கறிஞர் சுமதி: ''இந்தக் கேள்வியை நான் தடை பண்றேன்!''

இமான்: ''ஐயய்யோ, சார் அந்த போஸ் பேப்பர்ல வந்துச்சா? என்னைக்கு வந்துச்சு? நான் மிஸ் பண்ணிட்டேனா?''

ஆதிக்கமற்ற அம்மா!

ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய கிரிக்கெட் வீரர் யார்? அது எவ்வளவு தொகை?

பதில்: யுவராஜ் சிங் - 14 கோடி ரூபாய்.

ஐஸ்வர்யா: 'தெரியலையே..!''

ஞானதேசிகன்:   'யுவராஜ். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் பல ஆயிரம் ஊழியர்களுக்கு இன்னும் சம்பளப் பட்டுவாடா பண்ணாத விஜய் மல்லையாதான் தன் பெங்களூரு டீமுக்காக இவரை 14 கோடிக்கு ஏலம் எடுத்திருக்கார். இதெல்லாம் அவசியமானு நீங்களே முடிவு பண்ணிக்கங்க.''

வழக்கறிஞர் சுமதி: ''யுவராஜ் சிங். 18 கோடிக்கு ஏலம் போனார்னு நினைக்கிறேன்!''

இமான்: ''என்னது ஏலம் விட்டுட்டாங்களா?'' என்று அதிர்ச்சியானவர், ''போன வருஷ ஐ.பி.எல்-ல நம்ம சென்னை டீம்காரர் ஜடேஜா... அதாங்க ரவீந்திர ஜடேஜா. அவர்தான் அதிக ரேட்டுக்கு ஏலம் போனாரு. இதெல்லாம் ஏன் சொல்றேன்னா... எனக்கு ஐ.பி.எல். தெரியும். ஆனா, இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாது!''

தமிழகத்தில் 'அம்மா’ என்ற பெயருடன் தொடங்கவிருக்கும் அடுத்த திட்டம் என்ன?  

பதில்:  'அம்மா மருந்தகங்கள்’!

ஐஸ்வர்யா: 'சாப்பாடு கொடுக்குறாங்க, தண்ணியும் கொடுக்குறாங்க. மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப்னு எல்லாமே கொடுக்குறாங்க. ம்ம்... அடுத்து வேறென்ன கொடுக்கப்போறாங்க?' - தீவிரமாக யோசித்தவர், ''ஏங்க... சரக்கு கொடுக்கப் போறாங்களோ?' - அதிர்ந்து சிரிப்பவர், சட்டென சுதாரித்து, ''ஹீரோயினா நடிக்கிற பொண்ணுகிட்ட சினிமா பேட்டிதானே எடுப்பாங்க. என்னை ஏன் இப்படி வம்பிழுக்குறீங்க?''

ஞானதேசிகன்:  'அம்மா மருந்தகம்!'

வழக்கறிஞர் சுமதி: ''தெரியலையே!''

இமான்: ''என்னது, அம்மா மெஸ் மாதிரி மறுபடியும் இன்னொரு கடையை திறக்கப் போறாங்களா?'' என்று ஆச்சரியப்பட்டவர், ''அடுத்தது 'அம்மா மளிகை’னு ஆரம்பிச்சு அண்ணாச்சிகளை எல்லாம் திரும்ப ஊருக்கே போகச் சொல்லிடுவாங்களோ?''

ஆதிக்கமற்ற அம்மா!

தங்கள் கட்சியின் கூட்டணி வியூகம்குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் மொபைல் போன் மூலம் பேட்டியளித்த கட்சித் தலைவர் யார்?

பதில்: நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக்.

ஐஸ்வர்யா: 'என்னங்க பாலிட்டிக்ஸாவே கேக்குறீங்க. இந்த அரசியல், ஐ.பி.எல்-லலாம் நமக்கு இன்டரஸ்ட் இல்லைங்க. சரி... ட்ரை பண்ணலாம். விஜயகாந்த்தா... சரத்குமாரா?' என்று குழம்பியவரிடம் ''கார்த்திக்'' என்று பதில் சொன்னதும், ''ஓ... அவரும் பாலிட்டிக்ஸ்ல ஜாயின் பண்ணிட்டாரா? எப்ப ஜாயின் பண்ணினார்? அவரு பெரிய லெவல்ல ரீச் ஆகலை. அதான் எனக்குத் தெரியலை. அது என் தப்பு இல்லைங்க... ஓ.கே. சரியாச் சொன்ன ஒரு கேள்விக்கான பரிசு வீட்டுக்கு வந்திடும்ல?'

ஞானதேசிகன்:  'தமிழ்நாட்லயா? அதுவும் மொபைல் போன்ல பிரஸ்மீட் வெச்சாரா?'' அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். சரியான பதில் சொன்னதும், 'ஓ... அந்த சினிமா நடிகர் கார்த்திக்கா!''

வழக்கறிஞர் சுமதி: ''வீடியோ கான்ஃபெரன்ஸ் மாதிரி மொபைல் போன் ஆடியோ கான்ஃபெரன்ஸ்னு சொல்லுங்க. விஜயகாந்த்தா?''

இமான்: ''இன்னைய தேதியில பேட்டி கொடுக்கிறதுக்குக்கூட நேர்ல வர முடியாத அளவுக்கு பிஸியா இருக்குறது நம்ம பவர் ஸ்டார்தான். ஆனா... அவர் எந்தக் கட்சியிலயும் இருக்குற மாதிரியும் தெரியலையே'' என்று பயங்கரமாக யோசித்தவரிடம், ''கார்த்திக்'' என்றதும், ''அவர் பயங்கர பிஸி பிஸிதான் சார்...''