Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

கசக்கல... கசக்கல!

நானே கேள்வி... நானே பதில்!

கசக்கல... கசக்கல!

Published:Updated:

''டீக்கடை அரட்டையில் காதில் விழுந்த சுவாரஸ்யத் தகவல் ஏதேனும்..?''

''1999-ம் ஆண்டு பிரசித்திபெற்ற  'டீ பார்ட்டி’யால்தான் வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. அரசு கவிழ்ந்தது. ஆனால், இன்று டீ விற்றவர் பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளர்!''

- என்.சிவகுமார், பரங்கிப்பேட்டை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நானே கேள்வி... நானே பதில்!

''கவிஞனின் அடையாளம் என்ன?''

''மரணப் படுக்கையிலும் தன் கற்பனைத் திறனைக் கைவிடாதவனை 'கவிஞன்’ என்று சொல்லலாமா? இறக்கும் தருவாயில் இருந்த கவிஞர் ஒருவருக்குக் கடைசியாக ஊற்றும் பாலில் பாலாடைத் துணுக்குகள்  இருந்துவிடக் கூடாது என்று, மெல்லிய துணியால் வடிகட்டி ஊற்றினாராம் அவர் மனைவி. பாலை விழுங்க முடியாமல் துப்பிய கவிஞரிடம் 'ஏன் பால் கசக்கிறதா?’ என்று மனைவி கேட்டாராம். அதற்கு 'பாலும் கசக்கல... பால் வடிகட்டின துணியும் கசக்கல’ என்று சிலேடையாகச் சொல்லி இறந்துபோனாராம் அந்தக் கவி!''

- ரேவதி நீலமேகம், சேலம்.

'' 'அண்ணா பதக்கம்’ பெற என்ன செய்ய வேண்டும்?''

''அடிக்கடி கட்சி மாறி, முடிவில் 'அம்மா’விடம் சரணடைய வேண்டும்!''

- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

''அன்று உப்பு சத்தியாக்கிரகம் நடத்தி சிறை சென்ற காந்தி வழி வந்ததாகச் சொல்லும் காங்கிரஸ்காரர்களின் தற்போதைய நிலை என்ன?''

''அந்த உப்பை நிறைய பேர் அதிகம் தின்றுவிட்டு, நிறைய நிறையத் தண்ணீர் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள்!''

- ஆர்.ஆர்.உமா, நெல்லை.

நானே கேள்வி... நானே பதில்!

'' 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே’ என்பது எப்படி?''

''அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆப்ரஹாம் லிங்கனை எதிர்த்து, டக்ளஸ் என்பவர் போட்டியிட்டார். இருவரும் ஒரே மேடையில் பேச ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதலில் பேசிய டக்ளஸ், 'என்னை எதிர்த்துப் போட்டியிடும் இந்த லிங்கன் ஒருகாலத்தில் சாராயம் விற்றவர்’ என்று பேசினார். அடுத்து பேசிய லிங்கன், 'நண்பர் டக்ளஸ் சொன்னது உண்மைதான். வறுமையின் காரணமாக சாராயக் கடையில் சில காலம் நான் விற்பனையாளராக இருந்தேன். அப்போது என்னிடம் இதே டக்ளஸ் சாராயம் வாங்கியதும் உண்டு. சில சமயம் கடனுக்கும் வாங்கினார்’ என்றார்!''

- வெ.நாகராஜன், தென் எலப்பாக்கம்.

''வீட்டின் குடும்பத் தலைவர் மது குடிப்பதற்கும் நாட்டின் குடிமக்கள் குடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?''

''குடும்பத் தலைவர் குடித்தால், விலைமதிப்புள்ள பொருள்கள் வீட்டைவிட்டு வெளியே போகும். குடிமக்கள் குடித்தால், விலையில்லாப் பொருள்கள் வீட்டைத் தேடி வரும்!''

- சுந்தர் சுந்தரி, கோவை.

''சமீபத்தில் தே.மு.தி.க., பா.ஜ.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தமிழகத்தில் மாநாடுகளை நடத்தி யதில் எந்தக் கட்சிக்கு லாபம்?''

''அ.தி.மு.க-வுக்குத்தான்! 'அது எப்படி... அ.தி.மு.க. மாநாடு எதுவும் நடத்தவில்லையே?’ என்று கேட்கிறீர்களா... ஒவ்வொரு மாநாடும் நடந்தபோது சுற்று வட்டார டாஸ்மாக் கடைகளின் விற்பனை நிலவரம் கீழே...

தே.மு.தி.க. மாநாடு - டாஸ்மாக் விற்பனை 4.9 கோடி.

பா.ஜ.க. மாநாடு - டாஸ்மாக் விற்பனை 6.5 கோடி

தி.மு.க. மாநாடு - டாஸ்மாக் விற்பனை 10 கோடி.

நானே கேள்வி... நானே பதில்!

டாஸ்மாக் குவித்த இந்த லாபம் எல்லாம் ஆளும் கட்சியான அ.தி.மு.க-வுக்குத் தானே நன்மை விளைவிக்கும்!''

- எம்.சியாமளாதேவி, ஸ்ரீவில்லிப்புத்தூர்.

''எது சுயமரியாதை?''

''நமது வியர்வையின் விளைச்சலை ஏற்றுக்கொள்வதே சுயமரியாதை; ஏமாற்றுவது அல்ல!''

-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

'' 'திருமாவளவன் அவரது கட்சி வேலையை மட்டும் பார்க்கட்டும்! தரகர் வேலை பார்க்க வேண்டாம்!’ என்கிறாரே பா.ஜ.க-வின் பொன்.ராதாகிருஷ்ணன்?''

''பா.ஜ.க-வுக்காகப் பாடுபடும் தமிழருவி மணியனுக்கு ஒரு நியாயம்... திருமாவளவனுக்கு ஒரு நியாயமா?''

- சம்பத்குமாரி, திருச்சி.

ல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. 'நானே கேள்வி - நானே பதில்’ என்று தலைப்பிட்டு தபாலில் அனுப்பவும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism