Published:Updated:

பச்சைத் தவளையுடன் ஒரு முழு இரவு!

ஞா.சுதாகர், படங்கள்: தனுபரன்

பச்சைத் தவளையுடன் ஒரு முழு இரவு!

ஞா.சுதாகர், படங்கள்: தனுபரன்

Published:Updated:

டி விளையாடும் வயதில், காட்டுக்குள் ஒளிந்து நின்று படம் பிடித்துக்கொண்டிருக்கிறான் 14 வயது சிறுவன் தனுபரன். வன உயிரினங்களைப் பற்றிய பிரத்யேக தகவல்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிப்பிக்கும்  Sanctuary Asia பத்திரிகையில் தனுபரனின் வைல்ட் லைஃப் படங்கள் பிரசுரமாகவிருக்கின்றன. பொள்ளாச்சியைச் சேர்ந்த தனுபரன் எப்போது கேமரா மீது காதல் கொண்டான் என்று அவனுக்கே தெரியவில்லை.

''ஏன்னா, எனக்கு விவரம் தெரியிறதுக்கு முன்னாடியே கேமராவைக் கையில் எடுத்துட்டேன்ல!'' என்று சிரிக்கிறான் தனு.

''அம்மா கவிதா, அப்பா அருண் இரண்டு பேருமே இயற்கை ஆர்வலர்கள். நான் குட்டிப் பையனா இருக்கிறப்பவே டாப் ஸ்லிப், வால்பாறை மாதிரியான காடு சார்ந்த பிரதேசங்களுக்குத்தான் டூர் போவாங்க. அப்போ அங்கே சுற்றுலாவுக்கு வந்த வெளிநாட்டுக் காரங்க மூலமா கேமரா, வைல்ட் ஃலைப் போட்டோகிராபி பத்தி நான் தெரிஞ்சுக்கிட்டேனாம். அது அப்படியே என் மனசுல பதிஞ் சிருச்சு. என் ஆர்வத்தைப் பார்த்துட்டு கேமரா வாங்கிக் கொடுத்தாங்க. தோட்டம், தோப்பில் விலங்கு, செடிகளைப் படம் எடுத்துட்டு இருந்தவன், படிப்படியா முன்னேறி காட்டுக்குள்ள போய் படம் எடுக்க ஆரம்பிச்சுட்டேன். ஆரம்பத்துல எனக்குத் துணையா வந்த அப்பா, இப்போ என்னை மட்டும் தனியா அனுப்பிவைக்கிற அளவுக்கு காடு எனக்கு இன்னொரு வீடு ஆகிருச்சு!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பச்சைத் தவளையுடன் ஒரு முழு இரவு!

''உங்கள் கலெக்ஷன்களில் ஸ்பெஷல் படங்கள் எவை?''

''ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சி பறவை அத்திப் பழங்களை மட்டுமே  சாப்பிடும்னுதான் படிச்சிருக்கோம்... கேள்விப்பட்டிருக்கோம். ஆனா, அது இன்னொரு பறவையைச் சாப்பிடுறதை

பச்சைத் தவளையுடன் ஒரு முழு இரவு!

நான் படம் எடுத்தேன். இருவாச்சி பறவை அசைவம் சாப்பிடுற படம் அநேகமா, அது மட்டும்தான். அந்தப் படம் எனக்கு உலகம் முழுக்கப் பாரட்டுக்களைக் குவிச்சது. 'நீலகிரி மார்ட்டின்’னு சொல்லப்படும் நீர்நாய் இனம் அழிஞ்சுருச்சுனு எல்லோரும் நம்பிட்டு இருந்தோம்.  தமிழக வனத்துறையிடம்கூட அதன் புகைப்படங்கள் இரண்டே இரண்டுதான் இருக்கு. ஆனா, ரொம்பத் தற்செயலா ஒரு நீர் நாய் என் கேமராவில் சிக்கியது. அப்புறம் வரையாடு தன் குட்டிக்குப் பால் புகட்டுற மாதிரியான ஒரு படம்... சான்ஸே இல்லை! பொதுவா வரையாடு பாலூட்டும்போது பக்கத்துல வேற எந்த உயிரினமும் இல்லைனு உறுதிப்படுத்திக்கும். ஆனா, என் அதிர்ஷ்டம் நான் அதைப் படம் எடுத்தப்போ, அந்த ஆடு எந்தப் பயமும் இல்லாம கேஷ§வலா போஸ் கொடுத்தது.

மலபார் அணில்கள் அத்திப்பழம் இருக்கிற இடத்தை முகர்ந்துட்டே போய்க் கண்டுபிடிச்சு சாப்பிடும். அப்படி அது முகர்ந்துட்டே போய் ஒரு அத்திப்பழத்துக்கிட்ட நிக்கிற படம் கிடைச்சது. ஆந்தை களை ஜோடியாப் பார்க்கவே முடியாது... அதுவும் பகலில். ஆனா, என் கேமராவுக்கு நல்ல வெளிச்சத்திலேயே ஜோடி ஆந்தை சிக்கியது. அதுவும் கேமரா லென்ஸை நேருக்கு நேர் பார்க்கிற மாதிரி!''

பச்சைத் தவளையுடன் ஒரு முழு இரவு!

''ரொம்பச் சிரமப்பட்டு எடுத்த ஒரு புகைப்படம் எது?''

''அது ஒரு தவளையின் புகைப்படம். பச்சைத் தவளைகள் பொதுவா மழைக்காலங்களில் மட்டுமே நிலத்துக்கு வரும். அப்படி வர்றப்போ வாய் முழுக்க காற்றை நிரப்பி அதைச் சட்டுனு ரிலீஸ் பண்ணி, ஒலி எழுப்பும். பார்க்க அவ்வளவு அழகா இருக்கும். ஆனா, அதை அவ்வளவு சுலபமாப் படம் எடுத்துட முடியாது. சின்ன வெளிச்சம் இருந்தாக்கூட தண்ணிக்குள்ள தவ்விடும். ஒரு

பச்சைத் தவளையுடன் ஒரு முழு இரவு!

தடவை அந்தப் பச்சைத் தவளையைப் பார்த்தேன். ஆனா, என்னைப் பார்த்ததும் தண்ணிக்குள்ள போயிருச்சு. ராத்திரி முழுக்கக் காத்திருந்தேன். அதிகாலை நாலு மணிக்கு அது திரும்ப வெளியே வந்துச்சு. அப்போ வெளிச்சமே இல்லை. தவளையைச் சுத்தி நாலு பக்கமும் டார்ச் லைட்களை வெச்சுட்டு, கேமராவும் கையுமா திக்திக்னு காத்திருந்தேன். திடீர்னு அது வாய்ல காத்தை நிரப்பிக் கத்த ஆரம்பிச்சது. சட்டுனு டார்ச் லைட்களைப் போட்டுட்டு, சடசடனு க்ளிக் பண்ணிட்டேன். அஞ்சு விநாடிகூட இருக்காது. தவளை தாவி மறைஞ்சிருச்சு. ஆனா, என் கேமரால அட்டகாசமாப் பதிவாகிருச்சு. எனக்கு ரொம்பப் பிடிச்ச படம் அது!''

''காட்டுக்குள்ள போயிட்டு வர்றது த்ரில்லா இருந்தாலும் திகிலாவும் இருக்குமே?''

''அதுதானே கிக்! பறவைகள், விலங்குகள் எல்லாம் மனிதர்களின் சத்தம், வாசனைனு சின்ன சலனம் இருந்தாக்கூட அடுத்த விநாடி இடத்தைக் காலி செய்துவிடும். அதனால் நான் ஏதாவது  உயிரினத்தைத் தூரத்தில் பார்த்தவுடனே சில ஷாட்ஸ் எடுத்திருவேன். அப்புறம் பொறுமையாப் பக்கத்தில் போவேன். அதைப் பயமுறுத்தாமல் கனிவோடு அதைப் பார்த்தாலே பெரும்பாலும் அவை நம்மைக் கண்டுக்காது. ஒரு தடவை சிங்கவால் குரங்கைப் படம் எடுக்க முயற்சி பண்ணப்போ, அது மரத்துல இருந்து இறங்கி வந்து என்னைக் கடிக்கத் தயாரானது. 'சரி.. அது அட்டாக் பண்ற மாதிரி படம் கிடைக்குமே’னு  நான் அசையாம இருந்தேன். 'இவன் நல்லவன்’னு நினைச்சிருக்கும் போல, செம சூப்பரா ஒரு போஸ் கொடுத்துட்டுப் போச்சு.  காட்டுக்குள் போகும்போது, தண்ணி பாட்டில்கூட கொண்டு போக மாட்டேன். அவ்வளவு பெரிய காட்டில் என் ஒரு ஆள் தாகத்தைத் தீர்க்கத் தண்ணி கிடைக்காதா என்ன? காட்டையும் அதன் உயிரினங்களையும் நாம காதலிச்சா, பதிலுக்கு அதுவும் நம்மை நிச்சயம் காதலிக்கும்!'' - பிரகாசமாகச் சிரிக்கிறான் தனுபரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism