Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

Published:Updated:

வெள்ளையானை

விகடன் வரவேற்பறை

வெளியீடு:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எழுத்து,
சிரோன் காட்டேஜ்
# 1, ஜோன்ஸ் புரம்
முதலாவது தெரு,
பசுமலை, மதுரை-4.

பக்கங்கள்: 408

விலை:

விகடன் வரவேற்பறை

400  

ங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது தமிழகத்தில் ஏற்பட்ட மாபெரும் பஞ்சம், அந்தப் பஞ்சத்தில் மடிந்துபோய் வரலாற்றில் பதியப்படாத பெரும் தொகையிலான மக்கள், சாதி இந்துக்களால் கொடும் ஒடுக்குமுறைக்கு உள்ளான தலித் மக்கள்... இந்தச் சம்பவங்களின் பதிவே 'வெள்ளையானை’ நாவல்!

1921-ம் ஆண்டு சென்னையில் முதன்முதலாக அமைப்பாக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் மூலம் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை, தலித்துகள் புறக்கணிக்கிறார்கள். தலித் தலைவர் எம்.சி.ராஜாவின் வேண்டுகோளை ஏற்று, தலித் மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாததால் மாபெரும் கலவரம் வெடிக்கிறது. இந்தப் போராட்டத்தில் தலித்துகள் கலந்துகொள்ளாததற்கான காரணத்தைத் தேடுவதில் இருந்துதான் 'வெள்ளையானை’யின் வேர்கள் தொடங்குகின்றன! அந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தூண்டுதலாக இருந்தவர், தலித் அரசியலின் முன்னோடியும் 'தமிழ் பௌத்தம்’, 'திராவிடன்’, 'தமிழன்’ ஆகிய கருத்தாக்கங்களின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியலை முன்வைத்தவருமான அயோத்திதாசர் என்ற யூகத்தின் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

ஆங்கிலேயரின் போகக் கொண்டாட்டங்களுக்காக, இங்கிலாந்து தண்ணீரில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கட்டிகள் கப்பல் மூலம் வந்து சென்னையில் சேமிக்கப்பட்ட பிராந்தியமே ஐஸ் ஹவுஸ். அங்கே உள்ள, 10 யானைகளின் எடைகொண்ட பிரமாண்ட பனிக்கட்டியே 'வெள்ளையானை’. ஐஸ் ஹவுஸில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், மேற்சட்டைகூட அணியாமல் இருக்கிறார்கள்’ என்று சொல்வதன் மூலம், 'வெள்ளையானை’யை அதிகாரத்தின் குறியீடாகவும் ஒடுக்குமுறையின் உருவகமாகவும் படைத்திருக்கிறார் நாவலாசிரியர்.

அயர்லாந்தில் பிறந்து, பிரிட்டிஷ் அதிகாரியாக சென்னையில் பணிபுரியும் ஏய்டன் என்கிற வெள்ளை அதிகாரியின் பார்வையில் இருந்து நாவல் விரிகிறது. அறத்தின்பால் பற்றுதலும் இலக்கியங்களின் மீதான ஆர்வமும் கொண்ட ஏய்டன், சென்னை மாகாணத்தில் சாதி இந்துக்களால் தலித்துகள் தீண்டப்படாதவர்களாக நடத்தப்படுவது... அதைக் கண்டும்காணாமல், சாதிய அமைப்பு சீர்குலையாமல் தங்கள் வணிக நலன்களைப் பேணும் பிரிட்டிஷ் அதிகாரவர்க்கம்... இரண்டையும் ஒருசேரப் பார்க்கிறார். தலித்துகளின் சுயமரியாதையை உறுதிசெய்வதற்கும், அப்போதைய உணவுப் பஞ்சத்தைத் தடுப்பதற்கும் தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும் ஏய்டன் தோற்றுப்போகிறார்.

செங்கல்பட்டுக்குச் செல்லும் வழியில் ஏய்டன் காணும் பஞ்சக் காட்சிகள், இந்த நாவலின் உயிர்ப்புமிக்க பகுதி. பாதி எலும்புக்கூடுகளாக உள்ள குழந்தைகள், 'தொர... தொர...’ என உணவுக்காக இறைஞ்சித் துரத்தும் காட்சி, துயரத்தின் சாட்சி.

இந்த நாவலின் பெரும்பகுதி வர்ணனைகள், விவரிப்புகள் ஏய்டனின் மன ஓட்டங்களாகவே கடக்கின்றன. வரலாற்றின் இயக்கங்கள் உயிர்ப்புடன் பதிவுசெய்யப்படாமல் எல்லாவற்றையும் வார்த்தைகளாலேயே விவரித்துவிட முடியும் என்று நாவலாசிரியர் நினைத்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. தலித் பாத்திரங்களான காத்தவராயன், கருப்பன், ஜோசப் ஆகியோரின் உரையாடல்களில் செயற்கைத்தன்மை அப்பிக்கிடக்கிறது.

இருப்பினும், நாவலின் இறுதி அத்தியாயத்தில் அத்தனை உயிர்ப்பு. தமிழில் மிக முக்கியமான பதிவு 'வெள்ளையானை’.

விகடன் வரவேற்பறை

மரத்தில் வசிக்கும் கிழவன்

இயக்கம்: பொன்ராஜ்
வெளியீடு: PADHU TALKIES

ரின் ஒற்றையடிப்பாதையில் ஒற்றை மரம் இருக்கிறது. மகன்களால் கைவிடப்பட்டு பூச்சிமருந்து குடித்து மரத்தடியில் இறந்துபோன துடியாண்டிக் கிழவன், அந்த மரத்திலேயே வசிப்பதாக கிராமமே நம்புகிறது. பள்ளிக்குச் செல்லும்போது வடிவு என்கிற சிறுமிக்கு, அந்த மரத்தைக் கடப்பதுதான் தினசரி சவால். ஒருநாள், பயத்தில் வடிவுக்கு காய்ச்சல் வருகிறது. ஊர் மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் கிழவி, 'ஏங்கிச் செத்தக் கிழவன் வாங்கித் தந்தா விட்ருவான்’ என்று துடியாண்டிக் கிழவனுக்கு குவார்ட்டர், பீடி கட்டு, சேவு... போன்றவற்றைப் படைக்கச் சொல்கிறார். தான் படைத்தவற்றைக் கிழவன் 'எடுத்துக்கொண்டானா?’ என்று பார்க்கக் கிளம்புகிறாள் வடிவு. கிழவன், உண்மையிலேயே பேயாக வசிக்கிறானா, அந்தப் படையல் என்ன ஆகிறது என்பது க்ளைமாக்ஸ். மூடநம்பிக்கைக்கு எதிரான சிம்பிள் கருத்தை, ஒரு சிறுமியின் பார்வையில் சஸ்பென்ஸ் த்ரில்லராகச் சொல்லி இருக்கிறார்கள்!

குக்கூ

விகடன் வரவேற்பறை

இசை : சந்தோஷ்நாராயணன்
பாடல்கள்: யுகபாரதி, கானாபாலா
வெளியீடு : திங்க் மியூசிக்
விலை : 

விகடன் வரவேற்பறை

99

யலின் தாலாட்டுகளுக்கு இடையில் 'ஆகாசத்த நான் பாக்குறேன்... ஆறுகடல் நான் பாக்குறேன்...’ பாடல் மென்மழைத் தூறல். 'மடிவாசம் போதும் உறங்கவே... கோடிப்பேரில் உன்னை மட்டும் அறிவேனே... தொடுகிற மொழியில...’ எனப் புலன்களால் மட்டுமே உலகை, அழகை உணரும் மாற்றுத் திறனாளிகளின் உணர்வை உணர்த்தும் வரிகள். கல்யாணி நாயர், பிரதீப்குமார் குரல்கள் பிரியத்தாலும் பாசத்தாலும் ததும்புகின்றன. 'ஏண்டா மாப்புள்ள எதுக்கு ஏங்குற..?’ 'கானா’ பாலாவின் அக்மார்க் அதிரடி. 'பூமி மேல நிக்குற... பூந்துபோடா சின்ன கேப்புல...’ என வரிவரிக்குத் தாளத்துக்குத் தாளம் உற்சாகம் விதைக்கிறது பாடல். காதல் தோல்வி பேத்தாஸாக இருந்தாலும் துள்ளத் துடிக்க அதிரடிக்கிறது 'கல்யாணமாம் கல்யாணம்... காதல் கண்மணிக்குக் கல்யாணம்’ பாடல். காதலியின் திருமண நிகழ்வுகளையும், காதலனின் துயர நினைவுகளையும் அடுத்தடுத்து அடுக்கி, இரண்டுக்கும் பொருந்தும் இசைக்கோவை... ட்ரீம் ட்ரீட். 'கோடையில மழ போல...’ பாடலில் வழக்கம்போல மெஸ்மரிசம் செய்கிறது 'வைக்கம்’ விஜயலட்சுமியின் குரல். கேண்டில் லைட் பிரார்த்தனையாக வருடுகிறது 'மனசுல சூறக் காத்தே...’ பாடல். எளிய வாத்தியங்கள்... எளிய வார்த்தைகள்... பனை நுங்கு போல பச்சென ஈரம் விதைக்கிறது 'ஏ பொட்டபுள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே...’!

'அழுறேனே ஆனந்தமா...’ என்றொரு வரி வருகிறது ஆல்பத்தில். அது கேட்கும் நமக்கும் பொருந்தும்!

விகடன் வரவேற்பறை

திசை காட்டி!  

மிழக ஆசிரியர் தகுதித் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு ஆகியவற்றுக்குப் படிக்க வேண்டியது என்ற தகவல் தொடங்கி, விலங்கியல், தாவரவியல், இயற்பியல்... என பாட வாரியாக அனைத்து சிலபஸும் இந்தத் தளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. எது தேவையோ அதை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அச்சுப் புத்தகங்கள் மட்டுமல்ல... டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தேவையான ஒலி வடிவ குறிப்புகளும் இலவசம். தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரித் தேர்விலும் பங்கேற்று, உங்கள் திறனைப் பரிசோதித்துக்கொள்ளலாம். கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் சமீப உத்தரவுகளையும் இங்கே பார்க்கலாம். வடிவமைப்பை இன்னும் எளிமையாக, கண்ணுக்கு இனிமையாக மாற்றலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism