Published:Updated:

ஆட்டோ லீடர் ஆயிரத்தில் ஒருவர்!

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: என்.ஜி.மணிகண்டன்

ஆட்டோ லீடர் ஆயிரத்தில் ஒருவர்!

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:

''கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இருக்கேன். என்னை யாரும் கிண்டல் அடிக்காத மாதிரி ஈஸி கேள்விகளா கேளுங்க!'' - வேண்டுதல் நிபந்தனையுடன் பா.ஜ.க-வின் தமிழக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்.  

''ஹை... ஜாலி பேட்டியா..? நான் ரெடி... நான் ரெடி!'' - உற்சாகமாக ஓ.கே. சொல்கிறார், மகளிர் காங்கிரஸின் தேசியச் செயலாளர் ஜோதி மணி.  

''முதல்ல நீங்க கேள்விகளைச் சொல்லுங்க... அதைக் கேட்டுட்டு நான் பதில் சொல்லலாமா வேண்டாமானு யோசிக்கிறேன்!'' - தயக்கத்துக்குப் பிறகு சம்மதித்தார் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) பாலபாரதி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்னா தம்பி... ஜாலீலீலீ... கேள்வியா..? வண்டியில போய்ட்டு இருக்கேன். ஒண்ணும் கேட்கலை. இறங்கிட்டுக் கூப்பிடுறேன்!'' - தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர், திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு.

ஆட்டோ லீடர் ஆயிரத்தில் ஒருவர்!

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு பெங்களூரு நீதிமன்றம் விதித்த அபாராத் தொகை எவ்வளவு?

பதில்:

ஆட்டோ லீடர் ஆயிரத்தில் ஒருவர்!

65,000. இது பவானி சிங்கின் ஒரு நாள் சம்பளம்!

வானதி சீனிவாசன் : ''ஐயோ... தெரியலையே! படிச்சேன்... ஆனா, ஞாபகம் இல்லை. முதல் கேள்வியே அவுட்டா?''  

ஜோதி மணி : ''65,000 ரூபாய். அது அவரோட ஒரு நாள் சம்பளம். அரசியல்வாதிக்கு அப்டேட் முக்கியம்ல!''

பாலபாரதி : கேள்வியைக் கேட்டதுமே சிரிக்கத் தொடங்கிவிட்டார். ''கூட்டணிலாம் டமால், டூமில் ஆகிடுச்சு. இதுல இந்தக் கேள்வி வேறயா தோழர்? அடுத்து... அடுத்து...''

கே.என்.நேரு : ''55,000 ரூபாய்னு நினைக்கிறேன். சரியா?''

இந்தியாவில் வாக்குப்பதிவு நேரம் எத்தனை மணி நேரத்துக்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது?

ஆட்டோ லீடர் ஆயிரத்தில் ஒருவர்!

பதில்: இரண்டு மணி நேரம். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை என்பது, இனி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை என்று மாற்றி அமைக்கப்பட இருக்கிறது!

வானதி சீனிவாசன்: ''ஒரு மணி நேரம் அதிகப்படுத்தின மாதிரி ஞாபகம்!'' என்றவரிடம் சரியான பதிலைச் சொன்னதும், ''என்னப்பா... நான் அவ்வளவு மோசமாவா இருக்கேன்? கூட்டணிப் பிரச்னை பத்தி மட்டும்தான் செய்திகளைப் படிக்கிறேன் போல!''

ஜோதி மணி: ''மாநிலத்துக்கு மாநிலம் இது மாறுமே! தமிழ்நாடு மாதிரியான மாநிலங்களில் ரெண்டு மணி நேரம் அதிகரிச்சிருக்காங்க. வட கிழக்கு மாநிலங்களில் நாலு மணி நேரம் அதிகம். நக்சல் தாக்குதல் உள்ள இடங்களில் ஒரு மணி நேரம் மட்டும் அதிகரிச்சிருக்காங்க!''

பாலபாரதி: ''சாயங்காலம் அஞ்சு மணிக்கு முடியும் வாக்குப்பதிவை ஆறு மணி வரைக்கும் அதிகப்படுத்தி இருக்காங்க. அப்ப ஒரு மணி நேரம். சரிதானே!'' சரியான பதிலைச் சொன்னதும், ''ஓ... காலைலயும் ஒரு மணி நேரம் ஜாஸ்தி பண்ணிட்டாங்களா? நல்லதுதான்!''  

கே.என்.நேரு : ''காலையில ஒரு மணி நேரம் ஜாஸ்தி பண்ணிட்டாங்கனு நினைக்கிறேன்!'' என்றவரிடம் சரியான பதிலைச் சொன்னதும், ''நான் 24 மணி நேரமும் பிரசார வேலையிலயே இருக்கிறதால டி.வி., பேப்பருக்குலாம் நேரமே இருக்கிறது இல்லை. அதான் தெரியலை. நான் மூணு நாடாளுமன்றத் தொகுதிகள் பார்க்கிறேன். 14 சட்டமன்றத் தொகுதிகள் பார்க்கிறேன். காலையில ஏழு மணிக்குக் கிளம்பினா, ராத்திரி பன்னிரண்டு மணி வரை அலைச்சல்தான்!''

'தக்க ஆவணங்கள் இல்லாமல் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால், பறிமுதல் செய்யப்படும்’ என்று அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். அந்தக் குறிப்பிட்ட தொகை எவ்வளவு?

பதில் : 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல்.

வானதி சீனிவாசன்: ''50,000 ரூபாய்க்கு மேல... கரெக்ட்?'' என்றவர், ''இருங்க... இருங்க... இப்ப அதை ஜாஸ்தி பண்ணி இருக்காங்கனு நினைக்கிறேன்!'' என்றார். பிறகு,  ''வேணாம் வேணாம் '50 ஆயிரம்’னே போடுங்க'' என்று ஒரு முடிவுக்கு வந்ததுபோல சொல்லிச் சிரித்தார்.

ஆட்டோ லீடர் ஆயிரத்தில் ஒருவர்!

ஜோதி மணி: ''ஒரு லட்ச ரூபாய்!''

பாலபாரதி: ''ஒரு லட்சத்துக்கு மேல!''

கே.என்.நேரு: ''50,000-னு முதல்ல சொன்னாங்க. இப்ப எவ்வளவுனு தெரியலையே தம்பி!''

டிஜிட்டல் முறையில் பிரதி எடுக்கப்பட்டு தற்போது வெளியான, ஜெயலலிதா நடித்த பட விளம்பரங்களுக்கு, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அது என்ன படம்?

பதில் : ஆயிரத்தில் ஒருவன்.

வானதி சீனிவாசன்: சடாரென பதில் வருகிறது, ''ஆயிரத்தில் ஒருவன்! எங்கே ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்லாமப் போயிருவேனோனு பயந்துட்டே இருந்தேன். எம்.ஜி.ஆர் காப்பாத்திட்டார்!''

ஜோதி மணி : ''தடை விதிச்சாங்கனு தெரியும். ஆனா, எந்தப் படம்னு தெரியலையே..! ஏங்க, இந்த அரசியல் பிரஷர்ல சினிமா நியூஸா படிச்சுட்டு இருக்க முடியும்! ஜெயலலிதா, காங்கிரஸுக்கு எதிரா என்ன பிரசாரம் பண்றாங்கனு கேளுங்க... பாயின்ட் பாயின்ட்டா சொல்றேன். இன்னமும் நம்ம ஆளுங்களுக்கு சினிமா மோகம் குறையலையே!''

பாலபாரதி: ''சினிமா பத்திலாம் என்கிட்ட எதுக்குக் கேக்குறீங்க தோழர்?''

கே.என்.நேரு: '' 'ஆயிரத்தில் ஒருவன்’. ஜெயலலிதா நியூஸ் பத்தி தெரியாம இருக்குமா!''

ஓர் அரசியல் பிரபலத்தை மூன்று பேருக்கும் மேற்பட்டவர்களோடு அழைத்துச் சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்டார் ஒரு ஆட்டோ டிரைவர். யார் அந்த அரசியல் பிரபலம்?

ஆட்டோ லீடர் ஆயிரத்தில் ஒருவர்!

பதில் : அரவிந்த் கெஜ்ரிவால்.

வானதி சீனிவாசன்: ''ஆட்டோல போனவரா இருந்தா, அரவிந்த் கெஜ்ரிவாலாத்தான் இருக்கும்!''

ஜோதி மணி: ''வேற யாரு... நம்ப அரவிந்த் கெஜ்ரிவால்தான். அவர் ஒரு நாடகக் கம்பெனி நடத்துறார். அந்த நாடகக் கம்பெனிக்கு ரூல்ஸ்லாம் முக்கியம் கிடையாது. அவரு கட்சியில தப்பு பண்ணா, நடவடிக்கை எடுக்க மாட்டாரு!''

பாலபாரதி: நிதானமாகப் பதில் வருகிறது... ''அரவிந்த் கெஜ்ரிவால்!''  

கே.என்.நேரு : ''அட... கேள்விப்பட்டேனே! தலையில தொப்பிகூட போட்டிருப்பாரு அவரு. பேப்பர்ல பார்த்தேனே!'' என்றவரிடம் பதிலைச் சொன்னதும், ''சரியான பதில் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒழுங்கு மருவாதியா 35 மார்க் போட்டு நம்மளை பாஸ் பண்ணிவிடுங்க!'' என அதட்டல் மிரட்டலாகச் சிரிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism