Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்...

ஓவியம்: ஹாசிப்கான்

நானே கேள்வி... நானே பதில்...

ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
நானே கேள்வி... நானே பதில்...

'' 'காம்ரேடு’கள் கடைசித் தருணத்தில் கழற்றிவிடப்பட்டிருக்கிறார்களே?'

''அளவுக்கு அதிகமானால் 'பணிவும்’ நஞ்சுதான். 'பூவா தலையா’ படத்தில் நாகேஷ் பணக்காரர் ஜெமினி வீட்டில் வேலை கேட்டு காலில் விழுவார். 'என்னா... பணிவு!’ என்று அவர் சொல்ல, நாகேஷ், 'இதற்கும் கீழே போவேன்... தரை தட்டிடுச்சி’ என்பார். அதைத்தான் நினைவூட்டுகிறது தா.பா-வின் பணிவு. அதனால்தான் ஜெயலலிதா, 'போ...ப்பா’ என்று சொல்லிவிட்டார் போல!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- மங்கையர்கரசி, சென்னை.

நானே கேள்வி... நானே பதில்...

''தி.மு.க. கூட்டணிக்குத் 'தண்ணீர்’ காட்டிவிட்டு, பா.ஜ.க. கூட்டணிக்கு ஓ.கே. கூறிவிட்டாரே விஜயகாந்த்?''

'' 'மண்டபத்தை இடித்தவர்களைவிட, மசூதியை இடித்தவர்கள் மேல்’ என கருதிவிட்டாரோ என்னவோ!''

- பாலா சரவணன், சென்னை.

''விடுதலைப் போராட்ட கால காங்கிரஸ் கட்சிக்கும் இன்றைய காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?''

''வ.உ.சிதம்பரத்துக்கும் ப.சிதம்பரத்துக்கும் உள்ள வித்தியாசம்!''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

''சினிமா வில்லன் - சீரியல் வில்லி என்ன வேறுபாடு?''

''வில்லன் திருந்தவோ, கொல்லப்படவோ, இரண்டரை மணி நேரம் ஆகும். வில்லிக்கு  இரண்டரை வருடங்களுக்கு மேலும் ஆகலாம்!''

- அ.ரியாஸ், சேலம்.

''உலக நாடுகளிலேயே இந்திய ஆண்கள்தான் 'வீட்டு வேலை’ மிகக் குறைவாகச் செய்வதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறதே?''

''ஆம். இந்தியாவில் ஆண்கள் ஒரு நாளில் 19 நிமிடங்கள் மட்டுமே வீட்டு வேலைகள் செய்வதாக அந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது! அதே சமயம், 'ஸ்லோவெனியா’ நாட்டு ஆண்கள் உலகிலேயே மிக அதிகமாக, ஒரு நாளில் 114 நிமிடங்கள் வீட்டு வேலை செய்கிறார்களாம். 'ஸ்லோவேனிய’ நாட்டு மனைவிமார்கள் கொடுத்துவைத்தவர்கள்!''

- சம்பத் குமாரி, திருச்சி.

'' 'விழலுக்கு இறைத்த நீர்...’ என்று எதைச் சொல்லலாம்?''

''இப்போதைய சூழலில்... தா.பாண்டியனும் ஆர்.சரத்குமாரும் அ.தி.மு.க. ஆட்சியையும் ஜெயலலிதாவையும் அளவுக்கு மீறி புகழ்ந்ததைச் சொல்லலாம்!''

- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.

'' 'நாடாளுமன்றத் தேர்தலுக்காகப் பிரசாரம் செய்ய வருவீர்களா’ என்று வடிவேலுவிடம் கேட்டால், அவருடைய பதில் என்னவாக இருக்கும்?''

'' 'ஆணியே புடுங்க வேண்டாம்’ என்பாரோ!''  

- என்.சிவகுமார், பரங்கிப்பேட்டை.

நானே கேள்வி... நானே பதில்...

''தேர்தல் வருகிற சூழ்நிலையில் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன தோன்றுகிறது?''

'' 'நான் ஏற்றுக்கொள்ளும் அளவுக்குக் குறைகளற்ற மிகச் சிறந்த ஆட்சியாளன் என்பவன், இன்னும் கருத்து அளவில் மட்டுமே இருக்கிறான்’ என்றார் காந்திஜி. சுதந்திரம் பெற்று பல வருடங்கள் கடந்த பிறகும் அவரின் 'கருத்து அளவு’க்குக்  காட்சி வடிவம் கிடைக்கவே இல்லை. சுதந்திரத்தை நாம் இன்னும் செம்மையாகப் பயன்படுத்தி இருக்க வேண்டுமோ என்றே தோன்றுகிறது!''

- கே.சரஸ்வதி, ஈரோடு.

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. 'நானே கேள்வி - நானே பதில்’ என்று தலைப்பிட்டு தபாலில் அனுப்பவும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism