Published:Updated:

சமந்தாவுக்கு, மோடியை ஏன் பிடிக்கும்?

நா.சிபிச்சக்கரவர்த்தி

சமந்தாவுக்கு, மோடியை ஏன் பிடிக்கும்?

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:

''செவ்வாய்க்கிழமை மௌன விரதம். புதன்கிழமை காலையில் 8 மணிக்குத்தான் அதைக் கலைப்பேன். இப்பதான் விரதத்தை முடிச்சேன். கச்சிதமா உங்க அழைப்பு!'' - உற்சாகமாக ஜாலி கேள்விகளை எதிர்கொள்கிறார் காந்தி மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன்.

''டக்கு... டக்குனு கேள்வி கேளுங்க... டாண் டாண்னு பதில் வந்து விழும்!'' - நம்பிக்கையுடன் 'நாம் தமிழர்’ சீமான்.

''ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல கொஞ்சம் நேரம் கொடுக்கணும்... சரியா?'' - மினி ஒப்பந்தத்துடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சி.மகேந்திரன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வருங்கால பாரதப் பிரதமர் மாண்புமிகு அம்மாவின் சாதனைகளைப் பத்தி எந்தக் கேள்வி கேட்டாலும் பட், பட்னு பதில் சொல்லிடுவேன்!'' - ஓவர்டோஸ் உற்சாகத்துடன் அ.தி.மு.க-வின் தலைமைப் பேச்சாளர் அனிதா குப்புசாமி.

சமந்தாவுக்கு, மோடியை ஏன் பிடிக்கும்?

''பிரதமர் இல்லத்தில் இருந்து காலி செய்ய இருக்கும் மன்மோகன் சிங், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குள் எங்கு குடியேற இருக்கிறார்?''

பதில்: டெல்லி மோதிலால் தெருவில் 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அரசு பங்களாவில் குடியேற இருக்கிறார். ஏப்ரல் மாத இறுதிக்குள் அங்கு மராமத்துப் பணிகள் நடக்கின்றன. இதில் இதுவரை ஷீலா தீட்ஷித் குடியிருந்தார்.

தமிழருவி மணியன்: ''ஷீலா தீட்ஷித் காலி பண்ண அரசு பங்களாவுக்குப் போறார். சரியா?'

 சீமான் :  யோசிக்கிறார்... ''ஏதோ ஒரு தெருனு வரும். மறந்துட்டேனே! சரி, இப்படி எழுதிக்கோங்க... 10 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் மனதில் குடியேறாத அவர், வேறு எங்கு குடியேறினால் நமக்கு என்ன?'' என்று சிரிக்கிறார்.

சி.மகேந்திரன்: ''முன்னாள் பிரதம மந்திரிகளுக்குனு அரசு பங்களா கொடுப்பாங்க. அங்கதானே தங்குவார்!''

அனிதா குப்புசாமி: ''அநேகமாக அவர் இங்கே இருந்து ஓடிப்போயிருவாருங்க. சோனியா, தேர்ந்தெடுக்கும் பிரதமர் வேட்பாளர்களை எல்லாம் பாருங்களேன்... மன்மோகன் பேசாம காரியத்தைக் கெடுக்கிறார்; ராகுல் பேசத் தெரியாமல் காரியத்தைக் கெடுக்கிறார்!''

''தேர்தல் பிரசாரத்தில் 'நான் யாருடைய பெண்ணையும் இழுத்துக்கொண்டு ஓடிவிடவில்லை’ என்று கூறியவர் யார்?''

பதில்: அரவிந்த் கெஜ்ரிவால்.

தமிழருவி மணியன்: சட்டெனப் பதில் வருகிறது... ''கெஜ்ரிவால். இன்று இந்தியாவின் கதாநாயகனாக மோடி இருக்கிறார் என்றால், அந்த மோடிக்கு எதிராகப் போட்டியிடுவதன் மூலம், தன்னை இந்தியா முழுக்க வெளிப்படுத்திக்கொள்ள முயல்கிறார் இந்தக் கெஜ்ரிவால். மற்றபடி வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் ஒற்றுமையே இல்லாத மனிதர். அடுத்த கேள்வி கேளுங்க...''

 சீமான் :  கேள்வியை இரண்டாவது தடவை கேட்டுவிட்டுச் சிரிப்பவர், ''ஒரு பொண்னை இழுத்துட்டு ஓடுற அளவுக்கு இளமையான தலைவர் இங்கே யாரு இருக்கா? எனக்குத் தெரியலையே தம்பி!'' என்றவரிடம் பதிலைச் சொன்னதும் வாய்விட்டுச் சிரித்துக்கொள்கிறார்.

சி.மகேந்திரன்: ''தெரியலைப்பா. இந்த மாதிரி செய்தியை எல்லாம் நான் படிக்க மாட்டேன். பொது அரசியல் பத்தி எதுனா கேளுங்க!'' என்று சூடாகிறார்.

அனிதா குப்புசாமி: ''இது வேற நாட்டுல நடக்குதா? ஐயோ... நான் கவனிக்காமப் போயிட்டேனே!'' எனச் சிரித்தவரிடம் பதில் சொன்னதும், ''அடக் கடவுளே... கெஜ்ரிவால் பண்ற அலும்புக்கு ஒரு அளவே இல்லாமப் போயிட்டு இருக்கே!''

சமந்தாவுக்கு, மோடியை ஏன் பிடிக்கும்?

''தமிழக வேட்பாளர்களில் அதிகபட்ச சொத்து கொண்ட கோடீஸ்வர வேட்பாளர் யார்? அவரின் சொத்து மதிப்பு என்ன?''

பதில்: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார். அவரது சொத்து மதிப்பு 283 கோடி.

தமிழருவி மணியன்:  ''சோனியா காந்தியின் சொத்து மதிப்பே ஒன்பது கோடி என்றுதான் சொல்கிறார்கள். அதிலும் அவருக்குச் சொந்தமாக ஒரு வாகனம்கூட இல்லையாம். 1,76,000 கோடி அலைக்கற்றை ஊழல் புரிந்ததாகச் சொல்லப்படும் ஆ.ராசா, தனக்கு ஆறு கோடி ரூபாய்தான் இருக்கிறது என்று அறிவிக்கிறார். அதனால் வேட்புமனுத் தாக்கல் விவரங்களை வைத்து உண்மையான கோடீஸ்வரரை நாம் கண்டுபிடிக்க முடியாது!'' என்றவர் பதிலைக் கேட்டுத் தெரிந்துகொண்டதும், ''தயாநிதி மாறன், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நடத்துகிறார். வசந்தகுமார், தவணை முறையில் மிக்ஸி, கிரைண்டர் விற்றுக்கொண்டிருக்கிறார். அவரைவிட இவர் எப்படி உயர் கோடீஸ்வரர் ஆக முடியும்?'' என்று சிரிக்கிறார்.

 சீமான் : ''வசந்தகுமார்னு நினைக்கிறேன். சொத்து மதிப்பு 250 கோடியோ... 283 கோடியோ! மாவு அரைக்கும் இயந்திரம், குளிர்சாதனப் பெட்டிகள் வித்துக் கஷ்டப்பட்டு சம்பாதிச்சிருக்கார்... பாவம்!''

சி.மகேந்திரன்: ''தயாநிதி மாறன்... இல்லையா? திருமாவளவன்... அவரும் இல்லையா? ஏதாவது க்ளூ கொடுங்களேன்!'' 'தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சியைச் சேர்ந்தவர்’ என்று சொன்னதும், ''அப்ப காங்கிரஸ்.... அந்தக் கட்சியில எந்த வேட்பாளருப்பா... தெரியலையே!''

அனிதா குப்புசாமி: ''என்னங்க இவ்ளோ ஈஸியாக் கேள்வி கேட்கிறீங்க. இது அகில உலகத்துக்கே தெரியுமே... 2ஜி ஸ்பெக்ட்ரம் புகழ் ஆ.ராசாதானே! இல்லையா..? அப்ப கடல் முழுக்கக் கப்பல்களை அடுக்கிவெச்சிருக்கும் டி.ஆர்.பாலுதானே! அவரும் இல்லையா? நிச்சயம் தி.மு.க. வேட்பாளராகத்தான் இருக்கணும். ஏன்னா, அவங்க எல்லாரும்தானே கோடீஸ்வரங்க. பதில் என்னங்க?'' என்று கேட்கிறார். பதிலைச் சொன்னதும், ''ச்சே! மனுஷன் எவ்வளவு உண்மையா இருக்கார். அவரை நாம குத்தம் சொல்ல முடியுமா? இவ்வளவு நேர்மையான வேட்பாளரை எங்கேயாவது பார்க்க முடியுமா நீங்க?''

'' 'அம்மா குடிநீரைவிட ரெயில்வே குடிநீர் விலை அதிகம்’ என்று சுட்டிக்காட்டிப் பிரசாரம் செய்கின்றனர் அ.தி.மு.க-வினர். இரண்டுக்குமான விலை வித்தியாசம் என்ன?''

சமந்தாவுக்கு, மோடியை ஏன் பிடிக்கும்?

பதில்: அம்மா குடிநீர் 10 ரூபாய்; ரெயில்வே குடிநீர் 15 ரூபாய்.

தமிழருவி மணியன்:  'அம்மா குடிநீர் 10 ரூபாய். ரெயில்வே குடிநீர் 15 ரூபாய். ரெண்டுக்குமான வித்தியாசம் ஐந்து ரூபாய். இதுல ஒரு விஷயம்... தண்ணீரை, காசுக்கு விற்கிறார்கள் என்று அ.தி.மு.க. ஆட்சியை விமர்சிக்கிறார்கள். ஆனால், மத்திய அரசாங்கம் 15 ரூபாய்க்குத் தண்ணீர் விற்கும் நிலையில், அதே அளவு சுத்தமான தண்ணீரை 10 ரூபாய்க்குக் கொடுக்கும் அரசைக் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை!''

 சீமான் :  ''அம்மா குடிநீர் 10 ரூபாய். ரயில்வே குடிநீர் 12 ரூபாய்... ரெண்டு ரூபாய் வித்தியாசம்...  இல்லையா? இருங்க... இருங்க... ரெயில்வே குடிநீர் 15 ரூபாய். அப்ப ஐந்து ரூபாய் சரிதானே..!'' என்று சிரிப்பவர், ''மக்களுக்குத் தண்ணீர் கொடுப்பது அரசின் கடமை அல்லவா? எனக்குத் தாகம் எடுத்தால் 10 ரூபாய்க்கோ,   20 ரூபாய்க்கோ ஒரு போத்தல் தண்ணீர் வாங்கி குடித்துக்கொள்வேன். ஆனால், மான், மயில், சிட்டுக்குருவி, யானை, புலி, கரடிகள் என்ன தம்பி செய்யும்? மயில் எந்தக் கடையில் போய் 'மினரல் வாட்டர் கொடு’ என்று கேட்டு வாங்க முடியும்? உப்பையும் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கக் கூடாது. ஆனா, அதுவே இங்கு விலைபொருள்கள்!''

சி.மகேந்திரன்: 'அம்மா குடிநீர் 10 ரூபாய். ரெயில்வே குடிநீர் 15 ரூபாய். ரெயில்வே குடிநீர் ஆரம்பத்துல சிறப்பா இருந்தது. ஆனா, இப்ப சரியில்லை. அம்மா குடிநீர் குடிக்க நல்லா இருக்கு. ஆனா, அது அப்படியே இருக்குமானு போகப் போகத்தான் தெரியும்!''

அனிதா குப்புசாமி:  ''ரெண்டு ரூபாய் இல்லைனா அஞ்சு ரூபாயா இருக்கும்! ஆனா, இதெல்லாம் எனக்கு எப்படிங்க தெரியும்? நானாப் போய் தண்ணி பாட்டில் வாங்கிட்டு இருக்கேன். என்னை ரயில்ல ஏத்தி பத்திரமா உட்கார வெச்சுட்டு என் வீட்டுக்காரர்தான் தண்ணி பாட்டில் வாங்கிட்டு வர்றார். அப்ப எனக்கு எப்படி விலை தெரியும்? ஆனா, உலகத்தில் சிறந்த தாயுள்ளம் கொண்ட அம்மா அறிவித்த சிறந்த திட்டம், 10 ரூபாய் தண்ணீர் பாட்டில் திட்டம்!''

''சமீபத்தில் ஒரு தமிழ் நடிகையும் இந்தி நடிகையும் நரேந்திர மோடிக்குத் தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். அவர்கள் யார்?''

பதில்: தமிழ் நடிகை சமந்தா; இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.

சமந்தாவுக்கு, மோடியை ஏன் பிடிக்கும்?

தமிழருவி மணியன்: ''தமிழ் நடிகையும், இந்தி நடிகையுமா?'' என யோசிப்பவர், ''தமிழ் நடிகை சமந்தானு நினைக்கிறேன். இந்தி நடிகை ஏதோ சோனாக்‌ஷினு பேரு வரும். சரியா?'' என்று கேட்டவரிடம் 'இரண்டும் சரி’ என்றதும் சத்தமாகச் சிரிக்கிறார். ''நடிகைகள் சம்பந்தப்பட்ட செய்தி என்றால், பெரிய படத்தோடு பிரசுரிக்கப்படுவதால், தவிர்க்கவே முடியாமல் அப்படியான செய்திகள் நம் கவனத்தைக் கவர்ந்துடும். அதே சமயம் எனக்கு சோனாக்‌ஷி யார் என்பதுகூடத் தெரியாது. ஆனால், சமந்தா 'பொன்வசந்தம்’ என்று பெயர் வரும் தமிழ்ப் படம் ஒன்றில் நடித்திருக்கிறார் என்று தெரியும்!'' என்று சொல்லிவிட்டு மீண்டும் இடைவிடாமல் சிரிக்கிறார்.

 சீமான் : ''தமிழ் நடிகை சமந்தா. இந்தி நடிகை... சானாக்‌ஷியோ, சாக்ஷியோ... ஏதோ ஒரு பேரு!'' என்கிறார் கடுகடுப்பாக!

சி.மகேந்திரன்: ''நடிகைகள் பத்தி தெரியாது தம்பி. மோடி, தன்னைப் பத்தி ஒரு பேச்சுலர் பிம்பம்தானே உருவாக்கி இருக்கார். அதனால் நடிகைகள் ஆதரவு தெரிவிச்சிருக்கலாம்!''

அனிதா குப்புசாமி: ''தமிழ் நடிகைன்னா... நமீதாவா? அவங்க இல்லைனா குஷ்புதான். எம்.பி. சீட் கொடுக்கலை... பிரசாரத்துக்குக் கூப்பிடலைனு அவரைப் பத்தித்தான் ஏதேதோ சொன்னாங்க. அதனால நிச்சயமா அவர்தான்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism