Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு, இயக்குநர் வசந்தபாலனின் அன்பான வணக்கங்கள்...

இயக்குநராகக்கூட இருந்துவிடலாம், ஆனால் உதவி இயக்குநராக இருப்பது என்பது அத்தனை

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

சிரமமான கடமை. சினிமா எனும் கூட்டு உழைப்பின் உன்னதமான, அதேசமயம் கடினமான வேலைதான் உதவி இயக்குநர் பணி. 'காதலன்’ படத்தில் இயக்குநர் ஷங்கர் சாரிடம் அசிஸ்டென்ட் டைரக்டர் நான். ஷூட்டிங், காசியில் நடந்தது. உலகின் மிகப் பெரிய சந்நியாசி நகரமான காசியில் எங்களுக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கொஞ்சம் பேர் தேவைப்பட்டார்கள். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுக்கான ஆடை, மேக்கப் எல்லாம் இருக்கிறது; ஆனால் நடிகர்கள் மட்டும் கிடைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் சாமியார்கள். ஓர் உதவி இயக்குநராக நான் என்ன செய்திருப்பேன் அந்த சந்நியாசிக் காட்டில்?

இன்று வரை என் திரை வாழ்வில் மட்டுமல்லாது, தனி வாழ்விலும் ரோல்மாடலாக இருப்பது 'இயக்குநர் சிகரம்’ பாலசந்தர் சார்தான். அவரிடம் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். ஒரு கலைஞராக மட்டும் அல்லாமல், ஆளுமையாகவும் எனக்குள் ஆதிக்கம் செய்கிறார் பாலசந்தர். எப்படி, எதையெல்லாம் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்... எனக்குத் தேவையானதாக எதையெல்லாம் அவரிடம் இருந்து எடுத்துக்கொண்டேன்... சொல்கிறேன் கேளுங்கள்.

நமது ரசனையை மாற்றுவதும், சினிமா கலை மீது பெரும் நாட்டத்தை ஏற்படுத்துவதும் நல்ல சினிமாக்கள் மட்டுமே. நல்ல சினிமா எடுப்பது என்பது ஒரு போருக்குச் செல்வது போல. நம் அனைவருக்குமே நல்ல சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், 'எது நல்ல சினிமா?’ என்பதில் குழப்பம் உள்ளது. காலம்தோறும் நல்ல சினிமாக்கள் தன் ஆயுளுக்காகப் போராடியே வாழ்ந்துகொண்டிருக்கிறது. 'ஏன் வேண்டும் நல்ல சினிமா? என்ன காரணத்துக்காக ஒரு நல்ல சினிமா ஓட வேண்டும்?’... போன்ற என் எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு கேமிராவையும் திரைத் தொழில்நுட்பங்களையும் உங்கள் கையில் கொடுத்தால் உங்களால் ஒரு சினிமாவை எடுத்துவிட முடியுமா? 24 துறைகளைச் சார்ந்து இயக்கும் சினிமா தொழில்நுட்பத்தின் அடிப்படை 'திரைக்கதை’ எனும் எழுத்துத் தொழில்நுட்பம். அதுதான் ஒரு சினிமாவின் ஆன்மா. அந்த ஆன்மா, சிதைவதும் முழுமை அடைவதும் திரைக்கதையைப் பொருத்ததே! அது மந்திரக்கம்பளம் போல, முழுக்கப் புரிந்துகொள்ள முடியாத மாய வித்தைக்காரனைப் போல நம்மை ஆட்டிப்படைக்கிறது. கோடி ஆன்மாக்களுக்கு முன்பு, நான் பேச விரும்பும் மொழியான திரைக்கதை தொடர்பாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்... கேளுங்கள்.

என் குருநாதர் ஷங்கர் சாருடனான முதல் சந்திப்பின் சுவாரஸ்யம் குறித்தும் சொல்கிறேன்..!  

24.04.14 முதல் 30.04.14 வரை 044-66802911 என்ற எண்ணில் அழையுங்கள்.

என் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்!

அன்புடன்,

வசந்தபாலன்.

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு