''இந்தியாவின் எதிர்கால அபாயம் எது?''

''குறைந்துவரும் விவசாயமும் பெருகிவரும் ஜனத்தொகையும். உணவுப் பஞ்சத்துக்கான அபாயமணி எங்கோ ஒலிக்கிறது. யாரும் உணருவதாகக் காணோம்!''

- ஆர்.சி.முத்துக்கண்ணு, திருச்சி.

''தேர்தல் ஹைக்கூ ஒன்று..!?''

''தலைநிமிர்ந்தனர்

அமைச்சர்கள்

ஹெலிகாப்டரில் அம்மா!''

- எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.

''ஒருவேளை, தேர்தலுக்குப் பின் பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணி சாத்தியமானால்..!''

'' 'அறிவாலயத்திலேயே 'ஆலயம்’ இருப்பதை உணர்ந்த நண்பர் மோடியால்தான், இந்தத் தெய்விகக் கூட்டணி சாத்தியமாயிற்று!’ என்பார் கலைஞர்ஜி!''

- இடைப்பாடி ஜெ.மாணிக்கவாசகம்.

''ஜெயலலிதா உதிர்க்கும் 'அமைதி, வளம், வளர்ச்சி’ போன்றவற்றை அவரால் நடைமுறைப்படுத்த முடியுமா..?''

''ஏன் முடியாது..? அதுதான் அடுத்த கட்சிக்காரர்கள் வாயைத் திறந்தாலே அவர்கள் மேல் வழக்குப் போடப்பட்டு 'அமைதி’யாக்கப் படுகின்றனரே..! வருடாவருடம்... டாஸ்மாக் விற்பனை விண்ணைத் தொடும் அளவுக்கு 'வளம்’ கொட்டுகிறதே..! இவை மட்டுமின்றி முதலில் ஒரு மணி நேரம்... பின்னர் இரண்டு மணி நேரம் என மின்வெட்டு நேரம் 'வளர்ச்சி’யடைகிறதே..! இப்போது சொல்லுங்கள் 'அமைதி, வளம், வளர்ச்சி’ சாத்தியம்தானே..?''

- மு.மணிகண்டராஜன், திருநெல்வேலி.

''யார் ஆட்சிக்கு வந்தால் என்ன... நாட்டின் சட்டதிட்டத்தை மீறி எதுவும் செய்ய முடியாது அல்லவா?''

'''எவ்வளவு மோசமான சட்டமாக இருந்தாலும் அதைக் கையாளுபவர்கள் நல்லவர்களாக இருந்தால், சட்டம் நன்மை விளைவிக்கும். எவ்வளவு நல்ல சட்டமாக இருந்தாலும் அதைக் கையாளுபவர்கள், மோசமானவர்களாக இருந்தால், மோசமான விளைவுகளே அரங்கேறும்!’ என்று சொல்லியிருக்கிறார் அண்ணல் அம்பேத்கர்!''

- கே.வெங்கட், விழுப்புரம்.

''இந்தியாவில் சுதந்திரப் போராட்ட காலம் முதல் 16-வது நாடாளுமன்றத் தேர்தல் வரை எதிலும் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறதே!''

''அப்படி பொத்தம்பொதுவாக எப்படிச் சொல்ல முடியும்? சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கடுமையாக ஒடுக்கிய 'சாண்டர்ஸ்’ என்ற ஆங்கிலேய அதிகாரியை, பகத்சிங் தன் நண்பர்கள் ராஜகுரு, சுக்தேவுடன் சேர்ந்து கொன்றார். பகத்சிங் குழுவைப் பிடிக்க ஆங்கிலேய அரசு வலை வீசித் தேடியது.

பகத்சிங்கை பஞ்சாபில் இருந்து கொல்கத்தா அனுப்பிவிட்டால், அவரைப் பாதுகாப்பது சுலபம் என்று திட்டமிட்டனர். திருமணம் ஆகாத பகத்சிங்கை யாராவது ஒரு பெண்ணுடன் கணவன்-மனைவி தோற்றத்தில் அனுப்பினால் ஆங்கிலேய போலீஸாருக்கு சந்தேகம் வராது என்று முடிவெடுத்தார்கள். ஆனால், அந்தக் காலத்தில் எந்தப் பெண் திருமணம் ஆகாத வாலிபருடன் மனைவியாக நடிக்க முன்வருவார்கள் என்று தவித்துக் கொண்டிருந்தபோது, பகத்சிங் உயரத்துக்கு இணையாக இருந்த துர்காதேவி முன்வந்தார். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி. போலீஸின் கையில் பிடிபட்டால் தண்டனை, 'தவறான தொடர்பு’ என்ற களங்கம் போன்ற பின்விளைவுகள் நேரலாம் என்ற சூழலிலும், 'பகத்சிங்கைக் காப்பாற்ற என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டாலும் சரி’ எனத் துணிச்சலாக பகத்சிங் தப்ப உதவினார் துர்கா.

அப்படியான ஜான்சிராணிகள் நிரம்பிய தேசம்தான் இந்தியா. வேட்பாளர் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் இடம் இல்லை என்பதற்காக, இந்தியாவின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்!''

- டி.உமா மகேஸ்வரி, திருவெண்காடு.

''தேர்தல் கருத்துக் கணிப்பை நிறையக் கட்சிகள் எதிர்க்கின்றனவே?''

''கட்சிகள் கலவரம் செய்யலாம்; கட்சியையே கலவரம் செய்தால்... தாங்குவார்களா?''

- இடைப்பாடி ஜெ.மாணிக்கவாசகம்.

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. 'நானே கேள்வி - நானே பதில்’ என்று தலைப்பிட்டு தபாலில் அனுப்பவும்!