Election bannerElection banner
Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு, ராஜாவின் அன்பான வணக்கங்கள்...

ஓட்டு போட்டுட்டு, 'யார் பிரதமர்?’னு தெரிஞ்சுக்க நாம காத்திருக்கிறது, பிரசவம் போல பெரிய வேதனை. இந்த நேரத்துல என் அனுபவம் ஒண்ணு சொல்றேன். ஒரு ரயில் பயணம் முடிஞ்சு, என் பெட்டிகளைத் தூக்க ஒரு போர்ட்டரை அழைச்சேன். முதியவர் ஒருத்தர் வந்தார். அந்த வயசுலயும் சொந்த உழைப்பில் சம்பாதிக்கிறாரேனு அவர் கேட்ட 50 ரூபாயைவிட கூடுதலா 50 ரூபாய் சேர்த்துக் கொடுத்தேன். அதை வாங்க மறுத்து அவர் சொன்ன காரணம் இருக்கே... அதில் ஒரு செய்தி இருக்கு. சொல்றேன்... கேளுங்க!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

சமீபத்தில் மனசைப் பாதிச்ச சம்பவம்... தென் கொரியக் கடலில் நடந்த கப்பல் விபத்து. கடலில் மூழ்கின கப்பலோடு சேர்த்து சுற்றுலா சென்ற நூற்றுக்கணக்கான மாணவர்களும் மூழ்கி இறந்துட்டாங்க. அந்த விபத்தில் காப்பாற்றப்பட்டவர்களில் சுற்றுலா சென்ற பள்ளியின் துணை முதல்வரும் ஒருவர். அவர் நிவாரண முகாமில் இருந்தப்போ, தூக்குப் போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டார். இந்தச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செஞ்ச தான் மட்டும் உயிர் பிழைச்சு, பல குழந்தைகள் இறந்துட்டாங்களேங்கிற மனவேதனை அவரை உலுக்கிருச்சு. அந்த ஆசிரியர் அளவுக்கு நாம உயிரை விட வேண்டாம். ஆனா, நாம பண்ண ஒரு தப்புக்குப் பொறுப்பேற்கும் பண்பாடு நம்மகிட்ட இருக்கா?

காஞ்சிபுரத்தில் ஒரு பெரியவர், ஸ்கூல் பசங்க டாஸ்மாக்ல மது வாங்கிக் குடிக்கிறதைப் பத்தி ரொம்ப ஆதங்கமாப் பேசிட்டு இருந்தார். அந்தக் காலத்துல குடிச்சா உடம்பு கெட்டுப்போகும்னு தெரியாமக் குடிச்சாங்க. ஆனா, இப்போ அதைப் பத்தி தெரிஞ்சே குடிச்சுக் கெட்டுப்போறாங்க பசங்க. இந்தப் புதிய தலைமுறை பசங்களுக்கு நாம் என்ன சொல்லப்போறோம்? மது வருவாய் மூலமாத்தான் அரசுப் பள்ளிகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் இயங்குதுன்னா... என்ன கொடுமைங்க இது!

'இப்போ இருக்குற நிலையில எம்.பி. சீட்கூட வாங்கிடலாம் போல... ஆனா, குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. சீட் வாங்குறது பெரும்பாடு’னு பெத்தவங்க புலம்பிக் குவிக்கிறாங்க. பள்ளிக்கூடத்துல குழந்தைகளைச் சேர்க்கிறதே தகுதி, திறமைகளை வளர்த்துக்கத்தான். ஆனா, அந்தப் பள்ளிக்கூடத்துல சேர்றதுக்கே குழந்தைகளுக்குத் தகுதித் தேர்வு வெக்கிறது என்ன நியாயம்? குழந்தைகளின் பள்ளி செல்லல் பற்றி, நாம தெரிஞ்சுக்க வேண்டியது எவ்வளவு இருக்குத் தெரியுமா?

01-05-14 முதல் 07-05-14 வரை 044-66802911* என்ற எண்ணில் அழையுங்கள். என் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புடன்,

ராஜா.

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு