Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

மது சைவமா... அசைவமா..?

நானே கேள்வி... நானே பதில்!

மது சைவமா... அசைவமா..?

Published:Updated:

''மோடி அழைத்ததும் விஜய் ஓடிப்போய்ச் சந்தித்தது பயத்தால்தானே?''

''மரியாதைக்காகக்கூட இருக்கலாம். எல்லோரும் நடிகை நந்திதா தாஸ் போல் எதிர்வினை ஆற்ற முடியாது. 2008-ல் அவர் இயக்கிய திரைப்படம் ஃபிராக் (Firaaq)-க்கு குஜராத் படுகொலையே கதைக் கரு. அந்தத் துயரத்தின் தூண்டுகோலான மாநில முதல்வர் மோடி அந்தத் திரைப்படத்தைத் தனக்குத் தனியே போட்டுக்காட்ட வேண்டும் என்றார். 'ஃபிராக் திரைப்படம், குஜராத்தின் எல்லா தியேட்டர்களிலும் வரும். எவரும் பார்க்கலாம். மோடிக்குத் தனியாகப் போட்டுக்காட்ட அவசியம் இல்லை’ என்றார் நந்திதா தாஸ்.

- தாமு, தஞ்சாவூர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''2000 ஆண்டுகள் கழிந்தும், திருக்குறள் இன்றும் உயிர்ப்போடு இருக்கக் காரணம் என்ன?''

''அதன் அளவுதான். வருங்காலத்தில் மனிதன் படிப்பதற்குப் பொறுமை இழப்பான் என்று தெரிந்துதான், ஏழு வார்த்தைக்குள் ஒரு திருக்குறளை எழுதியுள்ளார் திருவள்ளுவர். உலகின் முதல் ட்விட், திருக்குறள்தான்!''

- எஸ்.மோகன் குமார், சேலம்.

''வருங்காலச் சந்ததியினர், அநியாயத்துக்குத் துணை நிற்பார்களா... இல்லை எதிர்ப்பார்களா?''

''மு.மேத்தாவின் 'வாழையடி வாழை’ கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.

'நான் மண்ணில் வேரோடி
மாநிலத்தில் கால் பதித்து
வீசும் புயல் காற்றை
விழும் வரைக்கும் நின்றெதிர்ப்பேன்!
நின்றெதிர்த்த முடிவினில் நான்
நிலத்தில் விழுந்துவிட்டால்
என் கன்றெதிர்க்கும்!
கன்றுகளின் கன்றெதிர்க்கும்...
என் ஒவ்வோர் இறப்பும்
ஒவ்வொரு பிறப்பு!’ ''

- எம்.விக்னேஷ், மதுரை.

நானே கேள்வி... நானே பதில்!

''இளம் தலைமுறையில் பலர் பொறுப்பு இல்லாமல் நடந்துகொள்வதற்கு யார் காரணம்?''

''ஒரு சிறுவனை, பலர் சேர்ந்து அடித்துக்கொண்டிருப்பதை அந்த வழியே வந்த கிரேக்கத் தத்துவஞானி பயோஜினிஸ் கண்டார். அவனை அடிப்பற்கான காரணத்தைக் கேட்டார். அவனது தவறான நடத்தைக்காக அடிப்பதாக அவர்கள் கூறினார்கள். அதற்கு பயோஜினிஸ், 'இவனை அடிக்காதீர்கள். இவனுக்கு நல்ல நடத்தையைக் கற்றுத்தராத இவனது தந்தையை அடியுங்கள். அவரே தண்டனைக்குரியவர்’ என்றார். குடும்பமே குழந்தையின் ஆதாரம். வீட்டில் கற்றுத்தரப்படும் நல்ல பழக்கம் என்றுமே மாறாது. கற்றல், வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்!''

- கே.சரஸ்வதி, ஈரோடு.

''அரசியல்வாதிகளின் அறுபடை வீடு எது?''

''வேலூர், பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி, புழல், திகார்!''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

'' 'வாழ்வா... சாவா?’ - போராட்டம் என்றால் என்ன?''

''காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுடன் சேர்ந்து தீவிரவாதிகளுடன் போரிட்ட ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்தின் சமீபத்திய கூற்று இது... 'தீவிரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து வருகிறார்கள். அவர்களது வாழ்க்கை அதிகபட்சம் ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்காது எனத் தெரிந்தே, இந்தியப் பகுதிகளுக்குள் வருகிறார்கள். அவர்களது குடும்பங்களுக்கு, பாகிஸ்தான் அரசு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுக்கிறது. அவர்கள் சாவதற்காக வருகிறார்கள். நாங்கள் எங்கள் நாட்டையும், மனைவி மக்களையும் காப்பாற்ற ராணுவத்தில் இணைந்து போராடுகிறோம்...’ இப்போ இரண்டுக்குமான வித்தியாசம் தெரிந்ததா சாரே..?

- முத்தூஸ், ராமநாதபுரம்.

''எப்படிப்பட்ட ஆசிரியர்கள் இன்று தேவை?''

'' 'எங்க காலத்துல எல்லாம்...’ என்று ஆரம்பிக்காமல், 'நமது காலத்தில்...’ என்று ஆரம்பிக்கும் ஆசிரியர்கள்!''

- கி.ரவிக்குமார், நெய்வேலி.

''மது, சைவமா... அசைமா?''

''அது சைவம்தான். அது பண்ற வேலைதான் அசைவம்!''

- ஜெ.மாணிக்கவாசகம், சேலம்.

''தோல்வி பற்றி தங்களின் கருத்து?''

''என்னுடைய கருத்தைவிட, பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் இப்படிக் கூறுகிறார். 'ஒவ்வொரு முறை தோற்கும்போதும் ஒரு முட்டாள் வெளியேறுகிறான்’ என்றார்.''

- சங்கை ஜி.குப்புசுவாமி, வடபழநி.

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. 'நானே கேள்வி - நானே பதில்’ என்று தலைப்பிட்டு தபாலில் அனுப்பவும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism