Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு, எழுத்தாளர் பாமரனின் அன்பான வணக்கங்கள்...

தந்தை பெரியாரை நாத்திகராக மட்டுமே அடையாளம் காட்டுறாங்க. ஆனா, அவர் பேசின பல நூறு அரசியல் கருத்துகளில் நாத்திகமும் ஒண்ணு... அவ்வளவுதான்! அதேசமயம், 'பெரியார் பிறந்த மண்ணில் கோயில்கள் அதிகமாகிவிட்டன’னு புலம்புறாங்க சிலர். அதுக்குக் காரணமும் பெரியார்தான். கோபுரங்களைத் தரிசனம் செய்வது மட்டுமே வழிபாடுனு இருந்த நிலைமையை மாற்றி, ஆலயத்துக்குள் போய் வழிபடுவதைச் சாமான்ய மக்களின் உரிமையாக மாற்றியவர் பெரியார். வைக்கம் வீதிகளில் நடமாடும் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவரும் பெரியார்தான். தன்னோட இறுதி மூச்சு வரை மனிதத்துக்காகப் போராடிய பெரியாரை, 'நாத்திகம், ஆத்திகம்’கிற சின்னச் சிமிழ்களுக்குள் அடக்கிவிட முடியாது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

நேமாலஜி, ஜெம்மாலஜி, ஜோதிடம், வாஸ்து மீன்கள்... மக்களுக்குப் பிரச்னை அதிகமாக அதிகமாக இந்த வியாபாரிங்களோட தொல்லைக்கு எல்லையே இல்லாமப் போயிருச்சு. ஒரே குடும்பத்துல கணவனுக்குக் குதூகலம், மனைவிக்குக் குழப்பம்னு சொல்றாங்க. அதெப்படி ஒரே குடும்பத்துக்குள் கணவனுக்குக் குதூகலமும், மனைவிக்குக் குழப்பமும் இருக்க முடியும்? இந்த மாதிரி விஷயங்கள்லாம் பொய், புரட்டுங்கிறதுக்குச் சங்க இலக்கியத்துலயே சான்றுகள் இருக்கு... தெரியுமா?

மனுஷங்க மாதிரி மோசமான 'குத்தம் சொல்லி’களைப் பார்க்கவே முடியாது. யானைகளோட வழித்தடங்களை அழிச்சு, அதன் வசிப்பிடங்களில் குடில் கட்டி கோடை விடுமுறையைக் கொண்டாடுவோம். அப்போ, தண்ணி தேடி யானை அந்தப் பக்கம் வந்தா... உடனே, 'குடியிருப்புக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம்’னு பதறுவோம். கொடுமையிலும் கொடுமையா, 'கேரள யானைகள் தமிழகத்தில் புகுந்து அட்டகாசம்’னுலாம் ஸ்க்ரோலிங் ஓட்டுறது நம்ம பயகதான். யானையில என்னய்யா தமிழ் யானை, மலையாள யானை... உங்க மொழிப்பற்றுக்கு ஒரு அளவே இல்லையா?

'இன்னைக்கெல்லாம் யாருங்க சாதி பார்க்குறாங்க?’னு கேக்கிறவங்களும், 'இன்னமும் எதுக்கு சார் இடஒதுக்கீடு கொடுக்கணும்?’னு கேக்கிறவங்களும் சொல்ற கருத்துகளைக் கேட்டா, நியாயமான கோரிக்கை போலத்தான் தெரியும். ஆனா, நிஜ நிலவரம் என்ன தெரியுமா? முகத்துல அறையும் அந்த உண்மையைத் தெரிஞ்சுக்கங்க...

சமீபத்துல, 'போலீஸ் ஸ்டேஷன்லயே வாஸ்து மீன் தொட்டியை உயர் அதிகாரி ஒருவர் திறந்துவைத்தார்’னு ஒரு செய்தி வாசிச்சேன். சிரிப்பை அடக்க முடியலை. இந்த வாஸ்து பத்தி செம ஷோக்கா ஒரு செய்தி இருக்கு... கேளுங்க!

சமூக வலைதளங்களை எப்படிப் பயன்படுத்தணும். ஆனா, நாம எப்படிப் பயன்படுத்துறோம்... காது கொடுத்துக் கேட்கலாமா?

22.05.14 முதல் 28.05.14 வரை 044-66802911*என்ற எண்ணில் அழையுங்கள். சிரிக்கலாம்.... சிந்தனைகளை விதைக்கலாம்!

அன்புடன்,

பாமரன்.

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism