Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு, காசி ஆனந்தனின் கனிவான வணக்கங்கள்...

மானம் என்பது, ஆடையோடு தொடர்புடையது மட்டுமல்ல. மொழியும், நிலமும், கலையும், பண்பாடும்கூட மானம்தான். இவற்றை நாம் இழக்கும்போது, நாம் மானத்தை இழக் கிறோம். மானம் என்பது, ஓர் உணர்வு. அந்த உணர்வைக் காக்கவே வீரம் போராடுகிறது. தமிழன் இதில் எந்த இடத்தில் இருக்கிறான்? அட, தமிழை எத்தனை பெயர் களில் அழைப்பார்கள் என்றாவது உங்களுக்குத் தெரியுமா?

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

பயங்கரவாதத்தை வெல்வதாகக் கூறிய இலங்கை அரசு, 33 ஆண்டுகள் நடந்த கிளர்ச்சியை நசுக்கியுள்ளது. ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட பின்னடைவு, பெரும் இழப்பு என்றாலும் அந்தப் போராட்டம்... நிச்சயம் உலக வரலாற்றில் இடம்பெற வேண்டிய சரித்திரம்! அந்த வீரம்தான் அவர்களை மானமுள்ள மனிதர்களாக உருவாக்கியது. அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு எல்லாம் சென்றார்கள் தெரியுமா?

'தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்’ என்றார் பாவேந்தர் பாரதிதாசன். ஆங்கிலேயன், தமிழோடு ஆங்கிலத்தைக் கலக்கவில்லை. ஆனால், ஆங்கிலத்தைத் தூக்கிச் சுமந்த நாம்தான், தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்தோம். அப்படியிருக்க, இன்னமும் ஆங்கிலேயர்களைப் பழித்துக்கொண்டிருக்கலாமா? கொச்சையான ஆங்கிலம் நல்ல ஆங்கிலத்தோடு கலக்கக் கூடாது என்று போராடிய வரலாறு தெரியுமா? அதை, தமிழில் நாம் எப்போது முன்னெடுக்கப்போகிறோம்?

'காதலிப்பவர்கள், ஐ லவ் யூ என்று சொல்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள் சிலர். காதல், காலங்காலமாக தமிழர் பண்பாட்டுக் கூறாக இருந்து வந்துள்ளது. ஆனால், 'எனக்கு உன் மேல் பிரியம் உண்டு. நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். இருவரும் இல்லறத்தில் இணையலாம்’ என்று காதலைச் சொல்ல, நமது மொழியை நாம் பயன்படுத்துவது இல்லை. 'ஐ லவ் யூ’ என்பது பொதுப்படையான பிரத்யேக உணர்ச்சியற்ற ஒரு வாசகம். ஆனால், காதலைச் சொல்ல தமிழில் ஏராளமான வார்த்தைகள் உள்ளன.

'உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை
வொய்ஃப் என்றாய் மனைவியை, பாருந்தன் போக்கை
இரவை நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி உன் நாக்கை!’

இந்தக் கோபம்தான் என் வரிகள். ஏன் இந்தக் கோபம்? இவ்வளவு கோபமாக நான் எழுதியது யாருக்காக?

தமிழ் உணர்வை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

26-06-14 முதல் 02-07-14 வரை

என்ற எண்ணில் அழையுங்கள். தமிழ்க் கதைகள் கதைக்கலாம்..!

அன்புடன்,

காசி ஆனந்தன்.

*அழைப்பு சாதாரண கட்டணம்