Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:

விகடன் வாசகர்களுக்கு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் அன்பான வணக்கங்கள்.

செப்டம்பர்-5 ஆசிரியர் தினம். வணக்கத்துக்குரிய நமது முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தனது பிறந்த நாளை என்ன காரணத்துக்காக ஆசிரியர் தினமாகக் கொண்டாட சொன்னார்? வேலூரில் ஒரு பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், இந்திய நாட்டுக்கே ஜனாதிபதி ஆனார். உலகின் பல பல்கலைக்கழகங்கள், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. 60-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் அவரது நூல்களை பாடத்திட்டங்களாக வைத்துள்ளன. ஆசிரியர்களை கௌரவிக்கும் இந்த நாள் எப்படி உருவானது?

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

மறைந்த எங்களுடைய பேராசிரியர் நா.செயராமன் அவர்களோடு காரைக்குடிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். அங்குள்ள நகரத்தார் வீடுகளில் எங்களை சிறப்பாக கவனித்துக்கொண்டார்கள். ஒரு செல்வந்தர், அவரது வீட்டைச் சுற்றிக் காட்டினார். 'இந்தக் கதவு பர்மா தேக்கில் செதுக்கப்பட்டது, இந்த ஜன்னல் தேக்கு ரங்கூனில் இருந்து கொண்டுவந்தது’ என்று விளக்கிக்கொண்டே வந்தபோது நாங்கள் வியந்துகொண்டே சென்றோம். உணவருந்தும்போது வெள்ளித் தட்டில் தேன்குழல் இனிப்பும், முறுக்கும் வைத்தனர். முறுக்கைக் கடித்த எங்கள் பேராசிரியர் 'இதுவும் தேக்கா’? என்று கேட்டார். நகைச்சுவை என்பது ஒரு பண்பு. மற்றவர் மனம் நோகாமல் சொல்ல வேண்டும். நாம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தை, அந்த நேரத்தை மற்றவர்களும் உணரச் செய்ய வேண்டும். அது எப்படி?

தென்பகுதியிலே ஒட்டப்பிடாரத்தில் பிறந்த வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை என்கிற வ.உ.சி., கப்பல் ஓட்டிய வரலாறு சாமான்யமானது அல்ல. காந்தியடிகள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தென் தமிழகத்தில் வெள்ளையருக்கு எதிராக சுதேசிக் கப்பல் விட்டு நமது தன்மானத்தை நிரூபித்தவர்களின் வரலாறு சொல்கிறேன்.

2014-ம் ஆண்டை, பல அறிஞர்களின் நூற்றாண்டாகக் கொண்டாடுகிறோம்; நினைவுகூர்கிறோம். ஆனால், ராபர்ட் கால்டுவெல் என்கிற வெள்ளை தமிழ் அறிஞருக்கு, இது 200-வது நினைவு ஆண்டு. அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல், மதம் பரப்பத்தான் இடையன்குடிக்கு வந்தார். தமிழுக்கு ஒப்பிலக்கணம் படைத்த கால்டுவெல் மட்டும் வராமல்போயிருந்தால் தமிழனுக்குத் தமிழின் தொன்மை தெரியாமல்போயிருக்கும்.

மாணவர் திருவிழா ஒன்றில் கலந்துகொண்டபோது, விழா முடிவில் 85 வயதுடைய ஒருவர் வந்தார். அவர்தான் என் ஆசிரியர். என் கையெழுத்து திருந்தவேண்டும் என்று என்னைப் பல முறை அடித்தவர் அவர். தன் பேரனுக்காக என்னிடம் கையெழுத்து கேட்டவர் கடைசியில் ''இன்னும் உன் கையெழுத்து திருந்தலடா'' என்றார். இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன பாக்கியம் வேண்டும்!?

சென்னை தொடங்கி நாகர்கோவில் வரை பலவிதமான புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. எல்லா புத்தகத் திருவிழாக்களிலும் அதிகமாக இருக்கும் நூல், கல்கி அவர்களின் 'பொன்னியின் செல்வன்’. சமீபத்தில்தான் அதை நாடகமாகப் பார்த்தேன். அந்த அனுபவம் சொல்கிறேன்.

04-09-14 முதல் 10-09-14 வரை

என்ற எண்ணில் அழையுங்கள், என் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்!

அன்புடன்

கு.ஞானசம்பந்தன்